Home உறவு-காதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?…

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?…

49

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எல்லோருமே எதிர்ப்பார்ப்பது உண்டு. திருமண வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவம்

சிலருக்கு அந்த அனுபவம் மகிழ்ச்சியாக அமைவது இல்லை . அதனால் திருமண வாழ்க்கையே வெறுத்துப்போய் இருக்கின்றனர்

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்பது கணவனுடைய கட்டளைக்கு பயந்து மனைவி அனுசரித்து வாழ்வது என்று நினைத்தால் அது தவறு.

இரண்டு பேருமே அனுசரித்து வாழ்வது தான் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்

பொதுவாக ஆண்கள் அதிகம் பேசுபவராக இருந்தால் அவருக்கு வரும் மணைவி அதிகம் பேசாத நபராக வருவார். பெண்கள் அதிகம் வாயாடியாக இருந்தால் கணவர் சாந்த சொருபியாக கிடைப்பார்

அதே மாதிரி அநேக விஷயத்தில் எதிரும் புதிருமாக இருப்பார்கள். அதனாலேயே சண்டை வருவது போல இருந்தாலும் உன்மையிலேயே அது தான் நல்லது குடும்பத்தில் இரண்டு பேருமே ஓரே குணத்துடன் இருந்தால் குடும்ப வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது.

இது ஒருபுறம் இருக்கட்டும். எனக்குத் தெரிந்து திருமணம் என்பது வீட்டில் செய்வதும், பெற்றோர் மூலம் செய்து வைக்கும் போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது நல்லது

காதல் திருமணமாக இருந்தாலும் காதலிக்கும்போது இருக்கும் குறும்புத்தனத்தை விட்டுவிட்டு, இருவரும் இரண்டு குடும்பங்களையும் அனுசரித்து, புரிந்துகொண்டு நடந்து கொள்ள வேண்டும்.