Home பெண்கள் அழகு குறிப்பு கோடைக்காலத்திற்கு ஏற்ற புத்திசாலித்தனமான சில ஐ-லைனர் ஐடியாக்கள்!

கோடைக்காலத்திற்கு ஏற்ற புத்திசாலித்தனமான சில ஐ-லைனர் ஐடியாக்கள்!

33

முகத்திற்கு மூலதனமாக இருக்கும் கண் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் மிகவும் சிறந்த மற்றும் கவர்ச்சியான கண்களைக் கொண்டு மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கும் அவள் தன்னுடைய கண்ணுக்கு செய்து கொள்ளும் மேக்கப் பற்றிய கர்வம் இருக்கும். ஐ-லைனர்களை கண்களுக்கு தீட்டுவதில் சிறந்த அனுபவமும் மற்றும் நிறைவும் இருக்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையெல்லாம் விருப்பமாக உள்ளனவோ, அவற்றையெல்லாம் இங்கே நீங்கள் பயன்படுத்த முடியும். இதோ ஐ-லைனர்கள் எங்கெல்லாம், எந்தவகையில் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி சில வழிமுறைகளை உங்களுக்கு கொடுக்கிறோம். படித்துப் பயன் பெறுங்கள். சிறகு போல தீட்டுங்கள் பூனை விழிகளைக் கொண்டு நாடகம் நடத்த வேண்டும் என்று நினைத்தால், சிறகு போன்ற வடிவில் ஐ-லைனர்களை மிகவும் அச்சாக தீட்டிக் கொள்ளுங்கள். இந்த வழிமுறை சற்றே எளிமையானது. மொத்தமான லைனரை முதலில் கண்ணின் மேல் மடல் பகுதியிலும், பின்னர் கீழ் பகுதியிலும் தீட்டி விட்டு, கண்ணின் வெளி முனைப்பகுதி வரை சிறகு போல நீட்டி விட்டால், நாடகத்திற்கு நீங்கள் தயார்! பட்டையாக தீட்டுங்கள் ஐ-லைனர்களை பட்டையாக தீட்டிக் கொள்வது இப்பொழுது பலரின் விருப்பமாகிக் கொண்டுள்ளது. இது கண்களுக்கு பெருமளவு கவர்ச்சியையும் பார்வைக்கு அர்த்தத்தையும் கொடுக்கிறது. கண்களின் இரு மடல்களிலும் சாதாரணமாக தீட்டுவதைப் போல ஐ-லைனரை தீட்டி விட்டு, அதன் மேலாக இலேசாக அழுத்தம் கொடுத்து லைனரால் தேய்க்கவும். குறிப்பாக கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியின் முனைகளில் இவ்வாறு தேய்க்க வேண்டும்.

இயல்பாகவும் மற்றும் தத்ரூபமாகவும் கண்களைத் தோற்றமளிக்கச் செய்ய விரும்பினால், கருமையான வண்ணத்தைப் பயன்படுத்துங்கள் மற்றும் அதை நன்றாக கலவையாக்கி லைனர் கொடுங்கள். 360 டிகிரிகள் இது மிகவும் பிரபலமாக இருக்கும் மற்றுமொரு ஐ-லைனர் வழிமுறையாகும். சமமாகவும் மற்றும் சரியாகவும் கண்களைச் சுற்றிலும் லைனரை தீட்டி வைத்தால், நீங்கள் தயாராகி விட்டீர்கள். இதனை இரவு நேரங்களில் கூடும் போதும், சாதாரண நேரங்களிலும் மேக்கப் ஆக போட்டுக் கொள்ளலாம். மாறுபட்ட தொடர்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வண்ணங்களை இணைத்துக் கொள்வது இன்றைய ஹாட் டிரெண்டாக உள்ளது. வெள்ளை அல்லது அது போன்ற லைட்டான வண்ணத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை கண் மடல்களிலும் மற்றும் முன்நெற்றியின் மேலும் தடவுங்கள். பின்னர் நீங்கள் பயன்படுத்தும் லைனரை எடுத்து, வழக்கமாக தீட்டுவதைப் போல தீட்டிக் கொண்டு கண்ணாடியைப் பாருங்கள். உங்கள் உருவத்தில் பெருத்த சந்தோஷ மாற்றம் தெரியும். கேக் லைனர்கள் 1930 மற்றும் 40-களில் பிரபலமாக இருந்த கேக் லைனர்கள், மீண்டும் பிரபலமாகத் துவங்கியுள்ளன இந்த நவீன யுகத்தில்! கேக் லைனர்கள் அதிகமான சக்தியை செலவு செய்யாமலேயே, மிகவும் தத்ரூபமான மற்றும் உறுதியான தோற்றத்தை உங்களுடைய முகத்திற்கு கொடுக்கின்றன. இந்த ஐ-லைனரை ஐ-லைனர் பிரஷ்ஷின் துணையுடன் மட்டுமே தீட்டிக் கொள்ள முடியும். கண்களுக்கு வண்ணம் சேருங்கள் உடைகள் அல்லது மேக்கப் என எந்தவொரு டிரெண்ட் மற்றும் வகை என எதுவாக இருந்தாலும் வண்ணங்கள் அதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருப்பு நிறத்திற்கு மேலாக வண்ணத்திலான ஐ-லைனர்களை அடித்துக் கொள்வது இந்த காலத்தில் பிரபலமாகி வருகிறது. எனவே, நீங்கள் எந்த வகை ப்ளவுஸ் அல்லது மேலாடையை அணிந்தாலும், அதே வண்ணத்தைக் கண்களுக்கு சேர்த்துக் கொண்டு உங்களை தத்ரூபமாகவும் மற்றும் கவர்ச்சியானவராகவும் காட்டிக் கொள்ளுங்கள்.

Read more at: http://tamil.boldsky.com/beauty/make-up/2014/6-brilliant-eye-liner-ideas-for-you-to-try-this-season-005842.html