Home பெண்கள் அழகு குறிப்பு அழகுக்கு அவசியம் தன்னம்பிக்கையே!

அழகுக்கு அவசியம் தன்னம்பிக்கையே!

40

பெண்களின் அழகை குறிவைத்து எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உடை அலங்காரத்திற்காகவும், முக அழகுக் காகவும், சரும பாதுகாப்பிற்காகவும் விளம்பர ப்படுத்தப்படுபவை ஏராளம். ஆனால் இவற்றை வாங்கி பயன்படுத்துவதால் மட்டுமே அழகு அதிகரித்து விடுவதில்லை. உள ரீதியாக தன்ன ம்பிக்கை அதிகரித்தால் பெண்களின் அழகு கூடும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
தன்னம்பிக்கை
அழகு என்பது உடல் தொடர்புடையது மட்டுமல்ல அது உள்ளம் தொடர்புடையது. என்கின்றனர் வல்லுநர் கள். எங்கே தன்னம்பிக்கை அதிகரிக்கிற தோ அங்கே அழகு மிளிரும் என்பது அவர் களின் கூற்று. உள்ளத்தில் தன்னம்பிக்கை ஒளி உண்டானால் முகத்தில் பொலிவு கூடும் என்பது வல்லுநர்களின் கருத்து.
அழகாய் இருக்க வேண்டும். அழகான தோ ற்றம் பெற வேண்டும் என எந்தப்பெண் ணும் விரும்புவது சகஜம். நாம்நேசிக்கும் ஒருவர். அல்லது ஒருபொருள், அல்லது வேறு ஏதாவதாக இருக்கலாம். அது நம் மை விட்டு போகும் போது, அல்லது இல் லாமல் போகும்போது, நாம் அதற்காக ஏங்கும் நிலை ஏற்பட லாம். ஆனால் நாம் எதை இழந்தாலும் அழகு எப்போதும் நம்மை விட்டு அகல்வதேயி ல்லை. அது எப்போதும் நம்மிடவே உள்ளது. ஆனால், நமக்குத் தான் வயதாகிவிட்டதே என எண்ணி அழகை நாம் பேணாத கார ணத்தால் தான் அழகிழந்தவர்களாக நாம் நம்மை கருதுகிறோம்.
நம்மை நாமே பாராட்டுவோம்
இழந்த அழகை பெற நாம் முதலில் நம்மீது நம்பிக்கையுள்ளவர்க ளாக இருக்க வேண் டும். நம்மைப் பற்றி உயர்வாக எண்ண வேண்டும். நாம் அழகானவர், இனிமையா னவர் என எண்ணிக் கொள்வது அழகின் முதல் படியாகும். இது போன்ற மெல்லிய உணர்வுகள் கூட நமது முகத்தை அழகுபடுத்தும்.
ஆரோக்கியமான உடல்நிலை
உணர்வுகள் மட்டுமல்ல, நல்ல ஆரோ க்கியமான வாழ்க்கை முறைகூட அழகாய் இருப்பதற்கு தேவைப்படுகிறது. அழகான மென் உணர்வுகளைப் பெற நல்ல தேக ஆரோக்கியம் மிக அவசி யமாகும். நல்ல ஆரோக்கியம் என்பது திடகாத்திரமாக சுறுசுறுப் பானவர்களாக இயங்குவதேயா கும். இது சுறுசுறுப்பு நல்ல சத்தான உண வை உட்கொள்வதன் மூலமே பெற முடியு ம். நல்ல ஆரோக்கியத்தைப்பெற முதலில் மன அமைதியைத்தேடிக் கொள் ளுங்கள்.
நிதானம் ஏற்படும்
அமைதியில்லாத உள்ளத்தில் அழகான மென்மையான எண்ண ங்களுக்கிடமில்லை. எந்தப் பிரச்சினையையும் என்னால் எதிர்த் துப் போராடமுடியும்” என்ற தன்னம்பிக்கை யை வளர்த்துக் கொள் ளுங்கள். அச்சம் விலகும் அந்த மனத்தைரியத்தில் ஒரு அமைதி மனதில் ஏற்படுவதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
மன அமைதி ஏற்படும் போது மிகுந்த நிதா னத்துடன் அன்றாட வேலைகளை திருப்தி யுடன் செய்து முடிக்க முடியும். அமைதியா க உறங்கவும் சாப்பிடவும், நண்பர்கள் உறவினர்களுடன் இனிமையாக பழகவும் முடியும்.
தினமும் கவனியுங்கள்
திருமணத்திற்கோ, திருவிழாவிற்கோ செல்லும் போது மட்டுமே சில பெண்கள் அழகு படுத்திக்கொள்ள முற்படுவார்கள். பிற நாட் களில் ஏனோ தானோவென நாட்களை கழித்து விடுவார் கள். இது தவறான முறையாகும். துடைக்க த்துடைக்கத்தான் கண்ணாடி பளப்பளப் பாகும். அதேபோல் பெண்கள் தங்களின் முகத்தை கை கால்களை அடிக்கடி நல்ல முறையில் பேணி வந்தால் நாளடை வில் சகல உறுப்புகளும் பொலிவு பெறும்.
இதேபோல் மனதையும் கவனித்து அமைதி இழக்காது பாதுகாப்பது அதைவிடச் சிறந்த தாகும். ஏனெனில் அமைதியில்லாத மனதி ல் முக அழகு ஏற்படாது. சோகமோ சந்தோஷமோ முகமா னது மன அழகை பளிச்சென எடுத்துக்காட்டும். இந்த சக்தி கண்களுக்கும் உண்டு. உங்களை ப் பற்றிய நம்பிக்கை, உடல்களைப் பற்றி ஓர் உயர்ந்த அபிப்பிராயம், நல்ல நினைவுகள் இல்லாமல் போகும். பட்சத்தில் அழகாக இருக்கிறோம் என்ற நினைப்பிற்கே இடமில் லை.
வாய்விட்டு பாடுங்கள்
பிரச்சினைகள் மனதை பாதித்து விடுவது இயற்கையே. பிரச்சி னைகள் சகலருக்கும் உண்டு. பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அது அவசியமான து. பிரச்சினைகளுடன் வாழ்வது அதைத் தீர்க்க நடவடிக்கை களை மேற்கொள்ளாதிருப்பது உடலை மிகவும் பாதித்து விடும்.
மன இறுக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே பிரச்சி னைகளை மனதில்போட்டு குழப்பிக் கொண்டிராம ல் அதனையிட்டு நெருங்கிய நண்பர்களுடன், அல்ல து உங்களுக்கு மிக வேண்டியவர்களுடன் அப்பிரச் சினையையிட்டு மனம் திறந்து பேச வேண்டும். பிரச் சினை இருக்கிறதே என்று விட்டு விடாமல் மனத் தெளிவுடன் ஏனைய வீட்டு வேலைகளை மேற் கொள்ளலாம்.
அல்லது ஏதவாது கீர்த்தனைகள், சுலோகங்கள் தெரிந்திருந்தால் அவைகளை கொஞ்சம் சப்தத்துட ன் பாடலாம். இதனால் மனம் இலேசாகும். இதனால் பிரச்சினைகள் மறக்கப்பட்டு மனப்பாரம் குறைந்து சாந்தமடை கிறது. முயற்சி செய்து பாருங்கள்.
மனத் தெளிவு தரும் யோகா
யோகாசனம் கூட மன அமைதி யைக் கொடுக்கும். எல்லா யோகா சனங்களை செய்ய முடியாவிட்டாலும் ஓரிடத்தில் அமர்ந்து மூச் சை உள்வாங்கி மெல்ல வெளியே விடுங்கள். அதைத் தொடர்ந்து 15, 20 நிமிடம் வரை செய்து வாருங்கள். மன அமைதி கிடைக்கும். அலைபாயும் நினைவுகள் கட்டுக்கடங்கி முகம் அமைதியை வெளிக்கொணரும். பதற்றம் தணியும். உள்ளழகு பளிச்சென வெளி வரும். முகமும் உடலும் புத்துயிர் பெறும்.
சுடர்விடும் குத்துவிளக்கு
அழகான தோற்றம் கொண்ட ஒருவர் பிறரையும் சந்தோஷப் படுத்துகிறார். தன்னம்பிக்கை கொண்டவராக புன்னகையுடன் அவர் வலம் வரும்போது பார்ப்பவர்கள் பரவசம் கொள்கிறார் கள். அவரது உள்மன அழகை தெளிவான புன்னகை எடுத்துக் காட்டுகிறது.
மனதில் அமைதியும் அடக்கமும் இருந்தா ல், முகமும் உடலும் அழகு பெறும் அப்படி யான முகத்திற்கு அலங்காரமே தேவை யில்லை. சாதாரண முக அலங்காரம் போதுமானது. குத்து விளக்கு போன்ற அழகு என்கிறார்களே அதுபோல அமைதி யான முகத்தெளிவினை காட்டும் அழ கைத்தான் அப்படி வர்ணிக்கிறார்கள்.
மனத்தெளிவும், அமைதியுமான உள்ளமும் அழகின் முதல்படியாகும். திருப்தியான உள்ளம் அமைதியை ஏற்படுத்தும். எனவே மன அமைதியைத் தேட முயற்சி செய்யுங் கள். உங்களைப் பற்றி அழ கான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். நல்ல மென் உணர்வுகளை கொண்டிருங்கள். அதுவே உங்கள் முகத்திலும் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத் தும்.