Home உறவு-காதல் பழைய காதலை ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா கூடாதா? எதை சொல்லலாம்?

பழைய காதலை ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா கூடாதா? எதை சொல்லலாம்?

288

காதல் உறவு:ஒளிவு மறைவு இல்லாமல் இருப்பது, வெளிப்படையாக இருப்பது எல்லாம் நல்லதுதான். ஆனால் அது எல்லா நேரமும் அல்ல. கடந்த விஷயங்களில் சிலவற்றை வாழ்க்கைத் துணையிடம் சொல்லாமல் இருப்பது தான் நல்லது

அது காதலாகவோ நெருங்கிய நட்பைப் பற்றியோ கூட இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் சொல்லாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. அதேபோல சில விஷயங்கள் அவர்களையும் காயப்படுத்தாமல் இருக்கும். தேவையில்லாத மனக்கசப்புகள், சண்டைகளைத் தவிர்க்க முடியும்.

காயப்படுத்தி விட்டான் சில உறவுகள் அமைதியாக கடந்து போகும். அதுபோல் இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் பெரும்பாலான பிரேக் அப்கள் ஆண், பெண் இருவருக்குமே பெரும் வலியோடுதான் நடக்கிறது. அதனால் முடிந்த வரையில், புதிய துணையிடம் உங்களுடைய பழைய காதலால் எவ்வளவு தூரம் நீங்கள் கஷ்டப்பட்டீர்கள் என்றோ, நீங்கள் எவ்வளவு அவரை கஷ்டப்படுத்தினீர்கள் என்றோ சொல்லாமல் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், நீங்கள் இன்னும் அந்த பழைய ஞாபகங்களில் இருக்கிறீர்களா இல்லை அந்த காதலரை மறந்துவிட்டீர்களா என்ற சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிடும்.

செல்போன் சமீப காலங்களில் நாம் நம்முடைய எல்லா அழகியல் சார்ந்த விஷயங்களும், பர்சனல் விஷயங்களையும் நாம் பாதுகாத்து, பார்த்துப் பார்த்து ரசிக்கும் இடமாக நாம் நினைப்பது நம்முடைய செல்போன்களைத் தான். அதுதான் நம்முடைய சுயமாகக் கருதுகிறோம். அதில் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என நம்மைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அடக்கி வைத்திருப்போம். அதனால் யாராவது நம்முடைய போனை எடுத்தால் நமக்குக் கோபம் வரும். அதனால் எதையும் செல்போனில் மறைத்து வைக்காமல் இருப்பதும், அப்படியே வைத்திருந்தால், என்னுடைய செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

செக்ஸ் எல்லாவற்றையும் செக்ஸ்தான் சிறந்தது என்று ஆண்கள் நிறைக்கிறார்கள் என்று ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். உங்களுக்கு யாரையாவது பார்க்கிற பொழுது, பிடித்திருக்கிறது என்றால் அவரை நேசிக்கலாம். ஆனால் அதே நபர் உங்களிடம் உடல் ரீதியாக அணுகுகிறார் என்றால் உடனே உங்கள் துணையிடம் இதை பகிர்ந்து கொள்ளுங்கள். வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பு மட்டும் தான் காதலில் உண்டு என்பதை உடைக்க வேண்டும்.

வாகனங்கள் ஓட்டும்போது வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருக்கும் போது உங்களுடைய துணை யாருக்காவது செல்போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டோ, பேசிக் கொண்டோ போனால்ஈ கை காட்டி யாருக்காவது ஏதாவது சிக்னல் செய்தாலோ உடனடியாக அதை கண்டிப்பது உங்கள் கடமை. இல்லையென்றால் உங்களுடைய துணையைப் பற்றி உங்களுக்குப் பின்னால், மற்றவர்கள் தவறாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். தேவையில்லாத சண்டைகள் மற்றும் விவாதங்களை தவிர்க்க முடியும். இதையெல்லாம் சொல்லாமல் மறைத்து வைக்கக் கூடாது.