Home பெண்கள் அழகு குறிப்பு இந்த 7 தவறுகள் உங்கள் சருமத்தில் செய்யவே கூடாது தெரியுமா?

இந்த 7 தவறுகள் உங்கள் சருமத்தில் செய்யவே கூடாது தெரியுமா?

30

captureசருமம் இளமையாக இருக்கவேண்டும் என யார்தான் ஆசைப்படாமல் இருப்பார்கள். நீங்கள் செய்யும் மாதம் தவறாத ஃபேஸியல், க்ரீம் என சருமத்திற்கான பராமரிப்பு இருந்தாலும், நீங்கள் தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் உங்கள் சருமம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இதனால் சுருக்கம், வறட்சி என பல பிரச்சனைகளால் விரைவில் முதுமை தோற்றம் வர வாய்ப்பிருக்கிறது. உங்கள் சருமத்தில் என்னென்ன விஷய்ங்கள் நீங்கள் செய்யக் கூடாது என பார்ப்போமா.

வெயிலில் செல்கிறீர்களா? காலை வெயில் ஆபத்து தராது. ஆனால் அதற்கு பின் மாலை வரை புறஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவை செல்களை வேகமாக தாக்கி உடையச் செய்யும் . இதனால் சரும பிரச்சனைகள், மற்றும் சுருக்கம் விரைவில் வந்துவிடும். அதனால் கட்டாயம் சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.

அதிக நேரம் ஷவர் குளியல் போடுகிறீர்களா? சூடான நீரில் குளிப்பதால் உங்கள் உடல் வலி போவது போலத் தோணலாம். இதனால் சிலர் வெகு நேரம் ஷவரின் அடியிலேயே இருப்பார்கள். இது தவறு. ஷவரில் சூடான நீரில் குளிப்பதால் உடலில் சருமத்தின் மேல் இயற்கையான எண்ணெய் சுரப்பது குறைகிறது. இதனால் அதிக அழுக்கு, வறட்சி, ஆகியவை ஏற்பட்டு சருமம் எளிதில் சுருக்கங்களை பெறுகிறது.

ஸ்க்ரப் அடிக்கடி செய்வது : நீங்கள் அடிக்கடி ஸ்க்ரப் செய்து கொள்வதால் சருமத்தின் செல்கள் பாதிப்படைகிறது. அதோடு கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த ஸ்க்ரப் சருமத்தை சுத்தம் செய்தாலும் எரிச்சலடையச் செய்யும் என்பது உண்மை. வாரம் ஒரு நாள் செய்தால் போதுமானது.

எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்? தூங்கும் நேரத்தில்தான் திசுக்கள் வளர்ச்சிய்டைகின்றன. இதனால் இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் சரியான தூக்கம் இல்லாதபோது, சரும செல்கள் தங்கள் பணிகளை செய்ய முடிவதில்லை. ஆகவேதான் கருவளையம் சருமத் தோய்வு ஆகியவை விரைவில் உண்டாகின்றன.

தூங்கும்போது க்ரீம் போடுவீர்களா? இரவில் மேக்கப் , எண்ணெய், க்ரீம் போன்றவற்றோடு தூங்கும்போது அவை சருமத்துளைகளை அடைத்து புதிய செல்கள் உருவாகாமலும் இறந்த செல்களை வெளியேற்றாமலும் தடுக்கப்படும். எனவே இரவு படுக்கும் முன் முகத்தை கழுவி காற்றோட்டத்தை சருமத்திற்கு கொடுங்கள்.

முகப்பருக்களில் அதிக ஸ்க்ரப் போடுவது : முகப்பருக்கள் ஹார்மோன் பிரச்சனையால் ஏற்படுவது. அதிக சோச் அல்லது ஸ்க்ரப் செய்யும்போது சருமம் மேலும் பாதித்து காயங்களை உண்டாக்குகிறது.

முகப்பருக்களைத் தொடுவது : முகப்பருக்களை நிறைய பேர் கிள்ளுவார்கள். தொட்டு தொட்டு பார்ப்பார்கள். அரிக்கும் இடத்தில் சொறிவார்கள். இது மிகவும் தவறு. இவ்வாறு செய்யும்போது சருமம் மிகவும் சென்ஸிடிவாகிவிடும். இதனால் பலப் பல பிரச்சனைகள் அதிகரிக மட்டுமே செய்யும்.