Home பெண்கள் அழகு குறிப்பு பெண்கள் சருமத்தை அழகுபடுத்த உப்பை இப்படி பயன்படுத்தலாம்

பெண்கள் சருமத்தை அழகுபடுத்த உப்பை இப்படி பயன்படுத்தலாம்

53

பெண்கள் அழகு:பெண்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்துவார்கள். அதேபோல் முகத்தின் அழகை கூட்டுவதற்கு என்னென்னமோ பிரயத்தனம் செய்வார்கள். அதனால்தான் பெண்கள் கண்ணாடி முன்பு மணிக்கணக்கில் நின்று தங்கள் அழகை சோதனை செய்கிறார்கள். முகத்தின் அழகை அதிகரிப்பதற்காக பெண்கள் சிலர் கிரீம்களை பயன்படுத்துவார்கள். மேலும், கிரீம்களை பயன்படுத்துவதால் முகத்திற்கு பாதிப்புகள் தான் அதிகம் வரும்.

ஆனால் மிகப்பெரிய ஒரு உண்மை என்னவெனில், நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை எளிதாக பராமரித்து அதன் அழகை மேம்படுத்த முடியும். அந்த வகையில் உணவிற்கு சுவையைத் தர பயன்படும் உப்பு, அழகை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. அதாவது, வெறும் உப்பை பயன்படுத்தி சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை சரிசெய்யலாம்.

எவ்வாறு அதை செய்வது…இங்கே காணலாம்!

1/2 கப் ஆலிவ் ஆயில், 1/4 கப் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, குளிக்கும் முன் முகத்தில் தடவ வேண்டும். பின்னர் மென்மையாக சிறிது நேரம் ஸ்க்ரப் செய்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி சரும பொலிவு அதிகரிக்கும்.

2 டீஸ்பூன் கல் உப்புடன், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து அவற்றை கலந்து சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பின்னர் கழுவினால் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கண்களை சுற்றியுள்ள கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து மசாஜ் செய்தால் கருவளையம் காணாமல் போய் விடும்.