Home அந்தரங்கம் உங்கள் கட்டில் உறவை இன்பமாக கொண்டு செல்ல டிப்ஸ்

உங்கள் கட்டில் உறவை இன்பமாக கொண்டு செல்ல டிப்ஸ்

376

அந்தரங்க வாழ்கை:தாம்பத்தியினர் தங்களின் இல்லற வாழ்வில் இனிமையாக இல்லை என்பதே. தாம்பத்திய உறவை மேம்படுத்தினாலே பல்வேறு நன்மைகளை அவர்களால் அடைய இயலும். இந்த பதிவில் இல்லற வாழ்வில் இனிமையை சேர்த்து, நலம் தரும் வழிகளை பற்றி அறிந்து கொள்வோம்.

நீங்களும் உங்கள் இணையும்..! பெரும்பாலான தம்பதிகளிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்களின் இணையுடன் புரிதல் இல்லாமலே வாழ்க்கையை போகிற போக்கில் கொண்டு செல்வர். இதுவே பலரின் மோசமான இல்லற வாழ்வை ஏற்படுத்த கூடியது. மேலும், இருவரும் செய்கின்ற அன்றாட செயல்களும் அவர்களின் உறவை சிக்கலில் கொண்டு செல்கிறது.

இதய பயிற்சி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஆரோக்கியமான இல்லற வாழ்வை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக இதயத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உடற்பயிற்சிகளை செய்தல் வேண்டும். இதயம் நலமாக இருந்தால் இனிமையான தாம்பத்திய வாழ்வை மேற்கொள்ளலாம். அத்துடன் ஆண்களின் பிறப்புறுப்பையும் இது ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

ஆண்களின் தேவைகள் கட்டாயம் தேவைக்கேற்ற உணவுகளையே நாம் உண்ண வேண்டும். அதிலும் ஆண்களின் பிறப்புறுப்பில் அதிக அளவில் ரத்த ஓட்டத்தை தர கூடிய உணவுகளையே உண்டு மகிழ வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் நல்ல ரத்த ஓட்டத்தை தந்து, இன்பமான இல்லற வாழ்வை பெறலாம்.

விறைப்பு தன்மையை பற்றி பேசுங்கள்..! ஆண்களின் பெரும் பிரச்சினையாக கருதப்படும் விறைப்பு தன்மைக்கு பல வித மருத்துவங்கள் இருந்தாலும், தனது இணையுடன் இவற்றை பற்றி தெளிவாக பேசினால் மட்டுமே இருவருக்கும் எந்தவித மன கசப்பையும் இது ஏற்படுத்தாது. இல்லையேல் தாம்பத்திய வாழ்வில் உங்களுடன் திருப்தி அடைய முடியாமல் அவரும் அவதிப்பட நேரும்.

அதிக ஆற்றலுக்கு மிகவும் இனிமையான தாம்பத்திய உறவு வேண்டுமானால், ஹார்மோன்களின் ஓட்டம் நன்றாக இருத்தல் வேண்டும். காலையில் மிதமான சூரிய ஒளியை பெற்றால் அவை melatonin உற்பத்தியை அதிகரிக்கும். ஆரோக்கியமான இல்லற வாழ்விற்கு இந்த ஹார்மோன் மிக அவசியமானது. அதிக நேரம் நீடித்து இருக்க, இது துணை புரியுமாம்.

ஒமேகா 3 உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நிறைந்துள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். அவகேடோ, சல்மான் மீன்கள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை முக்கிய உணவாக ஆண்களின் உணவு பட்டியலில் இடம் பெற வேண்டும். அத்துடன், வைட்டமின் பி1 நிறைந்துள்ள உணவுகளை ஆண்கள் அதிகம் உண்ண வேண்டும்.

மன அழுத்தமும் ஆண்களின் பிரச்சினையும்..! ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறதென்றால், அதிக மன அழுத்தத்துடன் இருக்கும் ஆண்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்படுகிறதாம். குறிப்பாக இவை ஆண்களின் பிறப்புறுப்பை பாதிக்க செய்கிறதாம். அதிக ரத்த அழுத்தத்தை தந்து இல்லற வாழ்வை முற்றிலுமாக கெடுத்து விடுகிறது.

காலை செயல்கள்… நீங்கள் இல்லற வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் காலையில் உங்கள் இணையுடன் உடற்பயிற்சி செய்து வாருங்கள். இவை உடலின் செயல்பாட்டை நல்ல முறையில் வைப்பதோடு endorphins மற்றும் testosterone போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவும். இவை அதிக நேரம் இல்லற வாழ்வில் நீடித்து இருக்க பயன்படும்.

இல்லற வாழ்வில் புது முயற்சி… எப்போதும் உங்கள் இணையுடன் பேசி அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ள வேண்டும். இருவரின் புரிதல்தான் ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்வை தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல புது புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை Dopamine என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மது பழக்கம் வேண்டாமே..! யாராக இருந்தாலும், தாம்பத்தியத்தில் இனிமையை பெற விரும்பினால் மது பழக்கத்தை தவிர்த்து விடுங்கள். இவை உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, மோசமான நிலையை உடலுக்கு தந்து விடும். மேலும், பல தம்பதிகளுக்கு இல்லற வாழ்வில் தடைகளை தர முழு காரணமாக இருப்பது இந்த மது பழக்கம்தான்.

ஹார்மோன்களின் பங்கு எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், அவர்களின் உடலில் முக்கிய பங்கு வகிப்பது இந்த ஹார்மோன்கள்தான். ஆண்களுக்கான ஹார்மோன்களும், பெண்களுக்கான ஹார்மோன்களும் நல்ல முறையில் சுரக்க வேண்டும். அதற்கேற்றாற் போல நாமும் உணவு முறை முதல் அன்றாட பழக்க வழக்கங்கள் வரை அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள் உணவில் கட்டாயம் இஞ்சியை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை சீரான உடல் அமைப்பை தந்து, வயிற்று கோளாறுகளை நீக்கும். குறிப்பாக ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி சீரான உடல்நலத்தை தரும். மேலும், நலமான இல்லற வாழ்வை இது ஏற்படுத்தி கொடுக்கும்.

நிகோடின் செய்யும் சீர்கேடு..! புகை பழக்கம் உள்ளவர்கள் பல வித தீமைகளை அனுபவிக்க நேரிடலாம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று தாம்பத்திய வாழ்வு பாதிப்படைவது. ரத்த நாளங்கள், ரத்த குழாய்கள் போன்றவை இவற்றால் சேதம் பெற்று இல்லற வாழ்வு முற்றிலுமாக அழிய கூடும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.