Home பாலியல் முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு

முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு

23

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு…ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா…

முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், நீங்கள் விரும்பும் இடத்தை அவர்களிடம் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தெளிவாகி கொள்ளலாம் என்பதால் இந்த ஆலோசனையை அவசியம் பின்பற்றுங்கள்.முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.நீங்களாக மருத்துவம் செய்து கொள்ளும் முடிவு இருந்தால் கைவிட்டுவிடுங்கள்.அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக வாசனையும், மசாலாக்களும் சேர்க்கப்படும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

முதலிரவிற்கு செல்வதற்கு முன் ஒரு முறை குளித்துவிடுங்கள். அப்படி சூழ்நிலை காரணமாக குளிக்க முடியாவிட்டாலும், மாலையில் போட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு, மிதமான அலங்காரத்திற்கு மாறுங்கள். உடலை உறுத்தாத உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள். குறைவான நகைகளை அணிந்து கொள்ளலாம். உங்கள் துணைவரின் உணர்ச்சிக்கு உற்சாகமூட்ட காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியங்களை அதே சமயம் நல்ல உணர்வுகளை தூண்ணடக் கூடிய திரவியங்களை தடவிக் கொள்ளுங்கள்.படுக்கை விரிப்பை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ படுக்கையில் உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

முதல் ஸ்பரிசம் என்பது நிச்சயமாக படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செயல்கள் உங்களுக்கு ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை தயங்காமல் அவரிடம் நாசூக்காக தெரிவியுங்கள்.முதலிரவன்றே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியம் ஏதும் இல்லை என்பதை இருவரும் உணர்ந்தாலே உங்கள் டென்ஷன் ஓடிவிடும். நீங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச இந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம். வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.