Home பெண்கள் தாய்மை நலம் பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சப்பிடவேண்டியவை

பெண்கள் கர்ப்பகாலத்தில் கட்டாயம் சப்பிடவேண்டியவை

77

தாய் நலம்:பெண்களின் வாழ்க்கையில் கருவுறுதல் அல்லது ஒரு குழந்தைக்கு தாயாகும் பாக்கியம் கிடைத்தல் என்பது மிகவும் உன்னதமானதொன்று. ஒரு குழந்தை தனது வயிற்றில் உருவாகிவிட்டால், அந்த குழந்தையின் நலன் கருதி சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியம்.

அந்தவகையில், ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும் ஒவ்வொரு பெண்ணும் பின்வரும் உணவுகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.

01. முட்டை
முட்டையில் எள்ளபோலேட், இரும்புச்சத்து மற்றும் கோலின் ஆகியவை வயிற்றில் உள்ள சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும்.

02. வத்தாளைக்கிழங்கு
வத்தாளைக் கிழங்கில் உள்ள பைபர், விட்டமின்பி6, பொட்டாசியம், விட்டமின்சி, இரும்புச்சத்து, கொப்பர் மற்றும் பீட்டாகெரோட்டீன் ஆகியன குழந்தையின் கண்கள், எலும்பு மற்றும் தோலுக்கு பெரிதும் அத்தியாவசியமாகின்றன.

03. கடலைஅல்லது விதை வகைகள்
விதைகைகள் மற்றும் கடலைகளில் உள்ள ஒமேகா 3, புரோட்டீன், பைபர், மக்னீசியம், விட்டமின்கள் மற்றும் கனியுப்புக்கள் என்பன குழந்தையின் நரம்பு மண்டலத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றது.

04. போஞ்சிவகைகள்மற்றும்பருப்பு
இவற்றில் உள்ள கல்சியம், புரோட்டீன், பைபர், போலேட் மற்றும் இரும்புச்சத்து என்பன குறைமாதபிரசவம், குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறத்தல் மற்றும் நீண்ட நேர வயிற்று வலி என்பவற்றை தடுக்கும் வல்லமை கொண்டது.

05. ஒரேஞ்ச்பழச்சாறு
ஒரேஞ்ச் பழத்தில் பொதிந்துள்ள விட்டமின்சி, போலேட் மற்றும் அதிகபடியான பொட்டாசியம் என்பன பிறப்புக் குறைபாடு ஏற்படுவதை தடுப்பதோடு குழந்தையின் எலும்பு மற்றும் தோல் வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றது.

06. யோகட்
யோகட்டில் உள்ள கல்சியம், விட்டமின்பி மற்றும் ஸின்க் என்பன
குறைமாத பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பதை தடுத்து ஆரோக்கியமான குழந்தை பெற வழிவகுக்கின்றது.

07. ஓட்ஸ்
ஓட்ஸில்உள்ளவிட்டமின்பி6, பைபர் மற்றும் புரோட்டீன் என்பன குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றது.

08. பச்சைமரக்கறிவகைகள்
பசளைக்கீரை, புரொக்கோலி மற்றும் அஸ்பரகஸ் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்வது அவசியம். அதில்உள்ளகல்சியம், பொட்டாசியம், பைபர், போலேட் மற்றும் விட்டமின் ஏ என்பன தாய் மற்றும் சேயின் உடல் நலத்திற்கு மிகவும் இன்றியமையாதது.