Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணி பெண்கள் சுய இன்பம் காண்பது சரிதானா?

கர்ப்பிணி பெண்கள் சுய இன்பம் காண்பது சரிதானா?

476

கர்ப்பிணி பெண்கள் பல விதத்தில் குழப்பம் கொள்வது இயல்பு. ஆனாலும், முதன்முறையாக கர்ப்பம் ஆக இருக்கும் பெண்கள், பல திசையை பார்க்க…பலவித வீண் அறிவுரை கேட்டு மண்டையை பிய்த்துக்கொள்வார்கள். ஒரு சிலர் தவறான தகவலை தர, எது சரி? எது தவறு? என பிரித்து பார்க்கும் பக்குவமும், மன நிலை மாற்றங்களால் திணறுகிறது. அதில் ஒன்று தான் சுய இன்பம் அடைதல்.

சுய இன்பம் என்பது பருவத்தினால் ஒருவருக்குள் ஏற்படும் உணர்வுகளின் வெளிப்பாடே. இந்த சுய இன்பத்தால் ஆரோக்கியமென ஆய்வுகள் கூறினாலும், கர்ப்பிணி பெண்களுக்கு இதனால் நன்மையா? தீமையா? என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பொதுவாக சுய இன்பம் பற்றி வெளியில் பேச 90 சதவிகிதம் பேர் வெட்கம் கொள்வதால், இதனால் என்ன ஆகும் என்பது மறைக்கப்பட்டே போய்விடுகிறது.

கர்ப்பிணி பெண்கள் சுய இன்பம் கொள்ளலாமா?
கர்ப்பிணி பெண்கள் மனதிலும்… ஊடலுக்கான சுரப்பிகள் செயல்பட தான் செய்யும். குறிப்பாக, பெண்களின் ஆண்மை என்பது கர்ப்ப காலத்தில் தான் அதிகரிக்குமாம். அதனால், ஹார்மோன்கள் எழுச்சி கொள்ள, காதலுடன் காமமும் கர்ப்பிணி பெண்கள் மனதில் ஊடுருவலாம் என தெரியவருகிறது.

அதேபோல், ஒருசில கர்ப்பிணி பெண்களின் ஹார்மோன்களும் எந்த மாற்றமும் அற்று, செக்ஸ் ஆர்வம் என்பது பூஜ்ஜியமாகவும் ஒருசிலருக்கு இருத்தல் கூடும்.

ஒருவேளை கர்ப்பிணி பெண்கள் உடலுறவில் நாட்டம் கொண்டு சுய இன்பம் அடைந்தால், கர்ப்பிணிகளுக்கு ஒன்றும் பெரிதாக பிரச்சனை வருவதில்லை. எனினும், யோனி ஊடுருவல் மற்றும் உணர்வு தூண்டுதல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

உங்களுடைய மகப்பேறுவின் இறுதி மாதங்களில் உடலுக்கு பெரிதும் அசைவு கொடுக்காதீர்கள். இதனால் உங்கள் உணர்வுகள் கட்டுப்பாட்டிற்குள் இருந்திடக்கூடும்.

கர்ப்பகாலத்தில் சுயஇன்பம் கொள்ளுதலால் உண்டாகும் நன்மை:
1. கர்ப்ப காலத்தில் சுயஇன்பம் கொள்வதால் சிலர் தன்னை திருப்திப்படுத்தி கொள்கின்றனர். ஆனாலும், உங்கள் வயிற்றின் அளவு பெருகுவதால், செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான அடிப்படை நிலைகளில் உங்களால் இருந்திட முடிவதில்லை.

2. சில ஆண்கள், கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, குழந்தையின் ஆரோக்கியத்துக்காகவும் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அப்படி என்றால், நீங்கள் இருவரும் பரஸ்பர சுயஇன்பத்தால் உச்ச நிலையை அடையலாம்.

கர்ப்பகாலத்தில் குறைவான சந்தோசத்தை அடையும் பெண்களுக்கு, உடல் ரீதியாக சந்தோசம் தேவைப்படலாம். அதற்கு சுயஇன்பம் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் சுயஇன்பம் கொள்வதென்பது வழக்கம் போல் தான் தெரிந்திடக்கூடும். நீங்கள் பொம்மை அல்லது ஏதாவது கருவி கொண்டு சுய இன்பம் கொண்டால், கர்ப்ப காலத்தில் அவ்வாறு செய்ய முயற்சி செய்யாதீர்கள். அப்படி செய்தால் தசை பிடிப்பு போன்ற பிரச்சனை வரலாம்.

கர்ப்பிணிகளே, சுயஇன்பம் எப்போது கொள்ளலாம்? கொள்ளக்கூடாது? என்பதிலும் டாக்டரின் ஆலோசனை உங்களுக்கு அவசியமாக, டாக்டரின் பரிந்துரை அற்ற எந்த வித செயல்களையும் செய்ய முயலாமல் இருத்தலும் வேண்டும். உங்கள் உடலை ஒருபோதும் வருத்திக்கொள்ளாதீர்கள். சந்தேகம் என்பதை கூச்சத்தை நீக்கி உங்கள் வாழ்வில் கொண்டிடுங்கள்.