Home பாலியல் திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி

35

கணவன் – மனைவி இடையேயான தாம்பத்யம் என்பது புனிதமான ஒரு உறவு என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் வீட்டில் மகிழ்ச்சி இல்லை என்பார்கள். திருமணமானவுடன் புதுமணத் தம்பதிகள் ஆரம்பத்தில் அதிக நேரம் (முறை) பாலுறவுப் புணர்ச்சி கொள்வர். அதுவே ஓரிரு ஆண்டுகள் போய், ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் என்றானவுடன் பாலுறவில் நாட்டம் குறைவது இயற்கையே.
திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி

திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியர் தேன் நிலவிற்காக ஊட்டியோ, கொடைக்கானலோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிக்கேற்ப ஏதாவதொரு ஊருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்கிறார்கள்.

மனைவி இருவருமே ஒரு ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை முதலிலேயே திட்டமிடுதல் அவசியம்.

இயற்கையான பாலுறவுப் புணர்ச்சி மூலம் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. தம்பதியரின் வயதும் முக்கியப் பங்காற்றுகிறது எனலாம்.

வயதாகி திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதியரைப் பொருத்தவரை உடனடியாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே குழந்தைகளின் எதிர்காலத்திற்குச் சிறந்தது.

அதாவது கணவனுக்கு 35 வயதுக்கு மேற்பட்டும், மனைவிக்கு 30 வயதுக்கு மேற்பட்டும் இருப்பவர்கள் குழந்தை பிறப்பை கண்டிப்பாக ஒத்திப்போட முடியாது.

அதே நேரத்தில் சுமார் 25 வயதுகளில் இருக்கும் தம்பதியர் ஓரிரு ஆண்டுகள் குழந்தை பிறப்பை ஒத்தி வைக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

எனவே, தம்பதியரின் வயது, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருத்து குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தலாம். தடையற்ற, திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சியை தொடரலாம்.
முறையற்ற பாலுறவிலிருந்து மீள…

முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள்

அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. ஆண் இல்லை என்றாலும் தனித்தே வாழ முடியும் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதன் காரணமாக ஆண்கள் தங்களிடம் உள்ள செக்ஸ் குறைகளை உடனே சரி செய்து கொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப்பற்றி வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதில்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களின் நிலையோ வேறு மாதிரி உள்ளது. ஐ.டி துறை தம்பதியரிடையே பாலுறவு நின்று போனாலோ அல்லது குறைந்தாலோ, தாங்கள் செக்ஸ் -க்கு முழுமையாகத் தயார்; தங்களது துணைக்குத் தான் செக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.

பாலுறவுப் பிரச்சினையைப் பொருத்தவரை குறைபாடு எங்கு உள்ளது என்பதை தம்பதியர் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் உண்டாகாது.

ஆண்களுக்கு வரும் குறைகள்:

விரைப்புத் தன்மை இன்மை.
மிகக் குறுகிய நேர விரைப்புத் தன்மை.
ஆர்வமில்லாத உறவு.
வக்கிர உறவுகள்.
நீண்ட நேர விரைப்புத் தன்மை.
திருப்தி கிடைக்காத நிலைமை.
நினைத்த நேரத்தில் உறவு கொள்ள முடியாமை.
சிறிய உறுப்பு என்ற கவலை.

பாலுறவில் மன அழுத்தம் வேண்டாம்

பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம்.

என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில்,

மனைவியுடன் தனிமையில் தள்ளப்படும்போது, ஒருவித அச்சம், பீதி இருப்பது இயற்கையே.

பலருக்கு முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் ஆண்/பெண் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.

வேறு சிலருக்கு முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ள முடியாதோ? என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம்.

ஆனால், பாலுறவுப் புணர்ச்சியைப் பொருத்தவரை இருவரும் ஒருங்கே, ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் புணர்ச்சியில் ஈடுபடுதல் அவசியம்.

வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.

முதலில் மன அழுத்தம் அறவே கூடாது. மனதை இலேசாக வைத்துக் கொண்டு, பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது அழுத்தத்துடன் நீங்கள் புணர்ச்சி கொள்வீர்களானால், அது உங்களுக்கும் திருப்தி அளிக்காது. உங்களின் துணையையும் திருப்தி கொள்ளச் செய்யாது.

எனவே கவலையின்றி இருங்கள். களிப்புடன் பாலுறவை வைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்டதொரு இடைவெளியில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இது நபருக்கு, நபர் வேறுபடும். தம்பதிகள் செய்யும் தொழில், பணி போன்றவற்றைப் பொருத்து, பாலுறவு கொள்ளும் இடைவெளி வேறுபடலாம்.

கணவன் – மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவராக இருந்தால், இருவருக்கும் பொதுவான விடுமுறை அல்லது வார விடுமுறை நாட்களில் உறவு கொள்ளலாம்.

திருமணமாகி 25-30 ஆண்டுகளாகியும் இணைபிரியாத தம்பதிகளைப் பற்றியும் கேள்விப்படுகிறோம். ஒரே ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அலுத்துப் போய் பாலுறவை தவிர்ப்பவர்களையும் பார்க்கிறோம். இதில் கணவனுக்கு அதிக நாட்டம் இருக்கும், மனைவி விருப்பமில்லாமல் இருப்பார். வேறு சில சம்பவங்களில் மனைவிக்கு நாட்டம் இருந்தும் கணவனுக்கு அதிக நாட்டமில்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு.

எனவே பாலுறவு என்பது மனித வாழ்க்கைக்கும், அமைதியான மனநலத்தை பேணுவதற்கும், புத்துணர்ச்சிக்கும் அவசியம் என்பதை அறிந்து உறவு கொள்தல் வேண்டும்.

எனவே, அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப, திருமணமாகி ஆண்டுகள் பலவாயினும் அவ்வப்போது பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்தல் மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சி தரும் என்பதில் ஐயமில்லை.