Home பாலியல் அந்த மூன்று நாட்களில் வலி தாங்கமுடியலயா?… இதோ உங்களுக்கான தீர்வு…

அந்த மூன்று நாட்களில் வலி தாங்கமுடியலயா?… இதோ உங்களுக்கான தீர்வு…

33

மாதவிலக்கு, மெனோபஸ், உடல்பருமன், முகப்பரு, முறையற்ற மாதவிலக்கு, ரத்தசோகை இவையெல்லாம் பெண்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்னைகளாக இருக்கின்றன.

ஆனால் இதுபோன்ற பிரச்னைகளை வரும் முன்னரே தடுக்க, இயற்கை நமக்குப் பல மூலிகைகளைப் படைத்திருக்கிறது. அந்த இயற்கைப் பொருட்களை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தினாலே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் தீராத வயிற்று வலியால் அவதிப்படுவார்கள். அந்த நாட்களில் தலைவலி, வாந்தி, இடுப்பு வலி ஆகியவை பெண்களின் ஒட்டுமொத்த ஆற்றலையும் உறிஞ்சி எடுத்துவிடும். கருப்பையில் உள்ள கழிவுகள் அகற்றப்படுவதால், அவர்கள் ஏராளமான எனர்ஜியை இழக்கிறார்கள்.

அந்த நாட்களில் எண்ணெய், காரம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பூண்டு, வெள்ளைப்பூசணி, பப்பாளி, பாகற்காய், பரங்கிக்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மாதவிலக்கு நாட்களில் நல்ல ஓய்வு தேவை.

மாதவிலக்கு வருவதற்கு முன்பாக, முதுகு மற்றும் இடுப்பில் கடுமையான வலி உண்டாகும். அதனால், மனஅழுத்தம் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சூப் மற்றும் ஜூஸ் போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.
மது மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் முற்றிலும் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் சிலர் உணவைத் தவிர்ப்பதுண்டு. அது மிகப்பெரிய தவறு. அந்த நாட்களில் தான் எப்போதும்விட அதிக சத்துள்ள சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக அளவு ரத்தப்போக்கு உண்டாவதால் அடி வயிற்றில் வலி உண்டாகும். உடல் சூடாகும். அதனால், மோர் அல்லது தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் வயிற்றுவலி தீரும்.