Home அந்தரங்கம் பாதுகாப்பான உடலுறவை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

பாதுகாப்பான உடலுறவை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

18

பால் மற்றும் பாலியல் தொடர்பான செயல்பாடுகள்:
எச்.ஐ.வி உள்ளோர் பாதுகாப்பான உடலுறவை கடை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
ü உடல் ஆரோக்கியப் பாதுகாப்பு
ü வாழ் நாள் நீடிக்கும் வாய்ப்பு
ü பால்வினை நோய்கள், மஞ்சள்காமாலை உண்டாக்கும் நோய்க் கிருமிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பு
ü வேறு வகையான எச்.ஐ.வி கிருமிகளால் தாக்கப்படாமல் பாதுகாப்பு உருவாகும்
ü பிறருக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுக்கப்படும்
ü எச்.ஐ.வி கிருமிகளின் எண்ணிக்கை உடலில் அதிகமாகாமல் இருக்கும் வாய்ப்பு
ü ஆண், பெண் இருவரும் பாஸிட்டிவ் ஆக இருத்தாலும் பாதுகாப்பான உடலுறவை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். எச்.ஐ.வி-யில் பல் வகைகள் இருப்பதால் திரும்பவும் புதிய நபரிடம் இருந்து வேறு வகையான எச்.ஐ.வி தாக்காமல் இருக்க பாதுக்கப்பான உடலுறவையே மேற்கொள்ள வேண்டும் இதனால் எச்.ஐ.வி-யின் தாக்கம் நமது உடலில் அதிகம் ஆகிவிடாமல் இருக்கும்
ü ஒருவரிடம் உள்ள வைரஸ் தாக்கம் மற்றொருவரையும் தாக்கும் வாய்ப்பு அதிகம்
ü ஒரு ஆண் எச்.ஐ.வி பாஸிட்டிவ் ஆக இருந்தால் மற்றொரு ஆணுடன் வாய் வழி உறவு அல்லது மல வாய் உடலுறவு கொள்ளும் போது ஆணுறை அவசியம் அணிந்திட வேண்டும்
ü ஒரு ஆணுறை ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டும்
ü உடலுறவின் போது ஆணுறையுடன் KY ஜெள்ளி என்ற வழவழப்பான திரவத்தை பயன்படுத்தலாம்
ü ஆயின்மென்ட், கிரிஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் ஆணுறை சேதமடையும் எனவே அவற்றை பயன்படுத்தக்கூடாது

ஆணுறை
ü ஒருவரை பால்வினை நோய் வராமல் காக்கிறது
ü தேவையற்ற கர்ப்பம் உருவாகாமல் தடுக்கிறது
ü எச்.ஐ.வி எய்ட்ஸ்-ல் இருந்து காக்கிறது

சரியாக ஆணுறை உபயோகிக்கும் முறை:
ü ஆணுறை பயன்படுத்த தகுதியான தயாரிப்பு, கால அளவு உள்ளதா என தேதியை பார்த்து பின் சேதப்படுத்தாமல் பிரிக்க வேண்டும்
ü ஆணுறையின் நுனியை அழுத்தியவாறே விறைப்பான ஆண் பிறப்பு உறுப்பின் மேல் பொறுத்தவும்
ü ஆண் பிறப்பு உறுப்பு முழுமையாக மூடுமாறு ஆணுறையின் நுனியை பிடித்துக் கொண்டு உருட்டி அணியவும்
ü உட்செலுத்தி உடலுறவு கொள்ளும் முன்னர் ஆணுறை முழுமையாக அணிந்திருக்க வேண்டும்
ü விந்து வெளிப்பட்டவுடன் ஆணுறையின் அடிப்பாகத்தை பிடித்துக் கொண்டுவிந்து வெளிக் கொட்டாமல் ஆணுறையை கழற்றி விட வேண்டும்
ü ஒவ்வொரு முறையும் ஆணுறையை அணிந்து உடலுறவு கொள்வது தான் பாதுகாப்பு

ü வாய் வழி உடலுறவு, ஆசன வாய் வழி உடலுறவு, பெண் இன உறுப்பு வழி உடலுறவு எதுவாயினும் பாதுகாப்பானதாக இருத்தல் வேண்டும்.