Home பெண்கள் தாய்மை நலம் பெண்குழந்தைகளை பெற்றோர் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா?

பெண்குழந்தைகளை பெற்றோர் எப்படி வளர்க்கவேண்டும் தெரியுமா?

1323

Child Care:பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் சில வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பெண் குழந்தைக்கு இதை எல்லாம் சொல்லி கொடுத்து வளர்க்கணும்
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் அறிவியல் ரீதியான உண்மைகளைப் பக்குவமாக சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப்பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுறுத்துவது நல்லது.

மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.

ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாட்டைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.