Home பாலியல் செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன?

32

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.
பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.
கிளர்ச்சி அடைவது என்பது என்ன? அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை.
ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும்.
உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.இது ஒருவரின் மதிப்பீடு.உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.