Home பாலியல் மாதவிடாய் பற்றி பெண்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

மாதவிடாய் பற்றி பெண்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

17

சாதாரணமாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் எளிதாக நோய்கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில், மாதவிடாய் காலங்களில் நாப்கினை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதனால் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். இனி, நாப்கின் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை பற்றி பார்க்கலாம்

சிலர் நாப்கினை மட்டும் மாற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள், இது மிகவும் தவறு. மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பை நன்கு கழுவுதல் அவசியம். வெளிவரும் இரத்தப்போக்கு அவ்விடத்தில் தங்கவிடக்கூடாது.

மாதவிடாய் காலங்களில் உங்கள் பிறப்புறுப்பை சோப்பு பயன்படுத்தி கழுவாமல், வெறும் நீரை மட்டுமே பயன்படுத்தி கழுவுவது தான் சரியான முறை என்று கூறப்படுகிறது. ஏனெனில், சோப்பு கிருமிகளை கொன்றாலும், தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வீடாக இருந்தாலும் சரி, வெளியிடங்களாக இருந்தாலும் சரி, உங்களது நாப்கினை அகற்றும் போது, நன்கு காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் எறியவும். இல்லையேல், அது கிருமிகள் பரவ காரணமாகிவிடும்.

பெரும்பாலும் உங்களுக்கு ஏற்றதாகவும், மென்மையானதாக இருக்கும் நாப்கின்களை தேர்ந்தெடுங்கள். இல்லையேல், பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

மாதவிடாய் காலங்களில் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்திடுங்கள். இது அசௌகரியமாக உணர வைக்கும். மற்றும் அந்த இறுக்கம் சீரான இரத்தப்போக்கை தடுக்கும்.

மாதவிடாய் காலங்களில், ஒருவேளை அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டால், ஒரே நாப்கினை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது. இது நிறைய சரும பிரச்சனைகளை உண்டாக்கும். சரும தடுப்புகள், அரிப்பு, சிறுநீர் பாதை நோய் தொற்று இடங்களில் தொற்று போன்றவை ஏற்படும். நாப்கினை உபயோகப்படுத்தும் போது பிறப்புறுப்பு இடத்தில் ஈரம் இல்லாமல் நன்குதுடைத்த பிறகு பயன்படுத்துங்கள்.

அதில் எல்லாம் விழிப்புணர்வு அதிகம் தேவையோ, அதில் எல்லாம் தான் நாம் சுத்தமாக விழிப்புணர்வின்றி இருப்போம். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், ஆணுறை, நாப்கின் போன்ற உடல்நலன் சார்ந்த பொருட்கள். அசிங்க, அசிங்கமாக கொச்சை வார்த்தைகளில் திட்டுவதற்கு கூட கூச்சப்படாதவர்கள் ஆணுறை மற்றும் நாப்கின் பற்றி பேச கூனிக்குறுகுவார்கள்.