Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கும் அற்புதமான 4 வகை பானங்கள்..!

ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கும் அற்புதமான 4 வகை பானங்கள்..!

39

தொப்பை ஏற்பட்டால் அதைக் குறைப்பது கடினமாகவே உள்ளது. சில பான வகைகள் அவற்றை இலகுவாக குறைக்கின்றது.

தொப்பையைக் குறைப்பதற்கு இந்த பான வகைகளுடன் தகுந்த உடற்பயிற்சி செய்வதனால் தீர்வை இலகுவாகப் பெற முடியும்.

அத்துடன் உடலுக்கு தேவையான கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுப்பதனால் சமிபாட்டை இலகு படுத்துவதுடன் வயிற்றுப் பகுதிகளில் கழிவுகளை தேங்க விடாது.

ஆனால் இந்த பான வகைகளில் சர்க்கரை மற்றும் பல சுவையூட்டிகளை சேர்ப்பதை தவிர்த்தல் சிறந்தது.
சுவையூட்டிய நீர்.

நீர் நமது உடலிற்கு சிறந்த நண்பன். இது சமிபாட்டை இலகுபடுத்தல், ஊட்டச்சத்து உறிஞ்சுவதை அதிகரிப்பதுடன், சிறுநீரகம், சிறுகுடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகின்றது.

நாம் தினமும் குடிக்கும் நீரில் எலுமிச்சபழச் சாறு, இஞ்சி துண்டுகள் அல்லது வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்ப்பதனால் சமிப்பாட்டு தொகுதியை சிறப்பாக செயற்பட வைத்து வயிற்றுப் பகுதிகளில் கொழுப்பை நீக்குகின்றது.

அன்னாசி மென்பானம்.

அன்னாசியில் உள்ள புரோமலின் சமிபாட்டுக்குரிய நொதிகளை தூண்டுவதன் மூலம் சமிபாட்டை அதிகரித்து கழிவுகளை வெளியேற்றவும் செய்கின்றது. அன்னாசியுடன் ஆளி விதைகளை சேர்ப்பதனால் சிறந்த பலனை பெற முடியும்.

புதினா தேநீர்

புதினா சமிபாட்டு தொகுதியின் தசை சுவர்களை மிருதுவாக்குவதுடன் சமிபாட்டை அதிகரித்து கழிவுகளை வெளியேற்றவும் உதவுகின்றது.

அத்துடன் பசியை கட்டுப்படுத்துகின்றது. புதினா தேநீரினால் வாய் பகுதிகள் துர் நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி பெறுகின்றது.

பச்சை தேயிலை (Green tea)

இதில் உள்ள catechins கொழுப்பை இலகுவாக கரைத்து விடுகின்றது. அத்துடன் உடற்பயிற்சி செய்வதும் அவசியமானது. பச்சை தேநீரை குடிப்பதனால் உடலின் கொழுப்பின் அளவு, புற்று நோய்க்குரிய ஆபத்துக்கள் குறைவடைகின்றன.

மேலும் இந்த தேநீர் மன அழுத்தம், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வைத் தருகின்றது.