Home பெண்கள் அழகு குறிப்பு ஒரே ஒரு வாசலின் போதும். உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகுபடுத்தலாம்!! எப்படி தெரியுமா?

ஒரே ஒரு வாசலின் போதும். உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகுபடுத்தலாம்!! எப்படி தெரியுமா?

13

captureவெகு சிலப் பொருட்கள்தான் எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியும். கற்றாழை, தேன் போல், பெட்ரோலியம் ஜெல்லியும் அப்படித்தான். தலை முதல் பாதம் வரை இதனை ப்யன்படுத்தலாம். பலன்கள் அதிகம்.

வாசலின் இயற்கையில் வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். தோலில் உண்டான சொரசொரப்பு, பாதிப்பு, கருமை போன்றவற்றையும் சரிப்படுத்தும். வாசலினைக் கொண்டு எப்படி உங்களை அழகுப்படுத்தலாம்? இதனை தொடர்ந்து படியுங்கள்.

பாதவெடிப்பு : பாத வெடிப்பிற்கு மிக முக்கியமான கார்ணம் வறண்ட சருமம். வறட்சியால் சரும செல்கள் பலமிழந்து இருக்கும்போது கொழுப்புப் பாடிவங்கள் எளிதில் உடைந்து வெடிப்பை உண்டாக்குகிறது. தினமும் இரவில் வாசலினை த்டவி விட்டு படுங்கள். வெடிப்பு ஒரே வாரத்தில் மறைந்துவிடும்.

கண்ணிமை அடர்த்தியாக : கண் இமை மெலிதாக அடர்த்தியில்லாமல் இருந்தால் தினமும் காலை மாலை என இருவேளையும் வாசலினை தடவுங்கள். அடர்த்தியான இமையோடு, அழகான இமைகளை இது தரும்.

பளபளக்கும் நகங்கள் : நகங்கள் ஆரோக்கியமாக இல்லையா? எளிதில் உடைந்து அல்லது அடிக்கடி சொத்தை ஏற்பட்டு அசிங்கமாக இருக்கிறதா? தினமும் வாசலினை நகங்களில் பூசி வாருங்கள். ஆரோக்கியமான நகத்தை பெறுவீர்கள்.

அதிக நேரம் வாசனை இருக்க : என்னதான் பெர்ஃப்யூம் அடித்தாலும் சில மணி நேரம்கூட வாசனை நீடிப்பதில்லை . இதனை தவிர்க்க டியோடரண்ட் அல்லது பெர்ஃப்யூம் உபயோகிப்பதற்கு முன் வாசலினை தடவிவிட்டு அடித்தால் நாள் முழுவதும் வாசனை நீடிக்கும்.

கூந்தலின் நுனி வறண்டு இருக்கிறதா? கூந்தலின் நுனி பிளவு பட்டு கரடுமுரடாக இருந்தால் வாசலினை முடியின் நுனியில் தடவுங்கள். இதனால் கூந்தல் மிருதுவாக பிளவு மறைந்து காட்சியளிக்கும்.

ஐப்ரோ போடுவதற்கு முன்: ஐ ப்ரோ புருவத்தில் போடுவதற்கு முன் வாசலினை தடவிவிட்டு அங்கே ஐ ப்ரோவை போடுங்கள். இதனால் புருவம் அடர்த்தியாக வளரும். ஐ ப்ரோவும் கலையாமல் நீண்ட நேரம் இருக்கும்.

வாசலின் ஸ்க்ரப் : வாசலினை சிறிது எடுத்து அதனுடன் கடல் உப்பை கலந்து பேஸ்ட் போல்ச் செய்து உடலில் தடவி குளித்தால் சருமம் மென்மையாக இருக்கும். சுருக்கங்கள் வராது.