Home உறவு-காதல் உங்கள் துணை முன்னால் காதல் பற்றி நினைகிறார என்பதை கண்டறிய

உங்கள் துணை முன்னால் காதல் பற்றி நினைகிறார என்பதை கண்டறிய

213

காதல் உறவுகள்:ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஒரு கடந்த காலம் இருக்கும். கடந்த காலத்தை தற்போதைய உறவுக்குள் கொண்டு வந்தால் சிக்கல்தான்.

துணை உங்களிடம் ஆரோக்கியமான உறவை மேற்கொள்ளாவிட்டாலோ, நடத்தையில் மாற்றம் இருந்தாலோ முன்னாள் காதலில் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒப்பீடு செய்தல், விமர்சனம், உறவில் கொந்தளிப்பு போன்ற உணர்ச்சிகளை சந்திக்க நேரிடலாம்.

முரட்டுத்தனம்

இது துணை இன்னும் முன்னாள் காதலில் தொங்கிக் கொண்டு இருப்பதற்கான அறிகுறி. முரட்டுதனம், எரிச்சல், விரக்தி, மன முடைதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். முன்னாள் காதலருடன் ஒப்பிடுவதற்கான வாய்ப்புகளை தேடி குற்றம் சுமத்துவார்கள். இது உறவை பாழ் கிணற்றில் தள்ளி விடும். இதை தவிர்க்க உடனடியாக கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் தேவைய புரிந்துகொள்வது அவசியம்

குற்றம் சுமத்துதல்

முன்னாள் காதல் பற்றி பாராட்டி அடிக்கடி பேசுவது உங்களை ஒப்பீடு செய்வதற்கான அர்த்தம். நீங்கள் அவர்களுடைய முன்னாள் காதலர்/காதலி போல் இருக்க வேண்டும் என்பதை நேரடியாக கூற முடியாமல் மறைமுகமாக கூறுவார்கள்

சமூக வலைத்தளங்கள்

பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் முன்னாள் காதலர் /காதலியை நெருக்கமாக பின்பற்றினால் இன்னும் அந்த உறவில் வாழ்வதாக அர்த்தம். ஒரு சிறிய உரையாடல் பிரச்சினைக்குரியது அல்ல. ஆனால் தொடர்ச்சியான உரையாடல் அவர்கள் இன்னமும் முன்னாள் காதலில் இருப்பதை உணர்த்துகிறது. சுமூக பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியு.

பேசுவதை தவிர்த்தல்

உங்கள் துணை இன்னமும் தங்கள் முன்னாள் காதலில் இருந்தால் சில விஷயங்களை பற்றி பேச மாட்டார்கள். தற்காப்புக்காக சிலவற்றைப் பற்றி பேசமாட்டார்கள். இது உங்கள் உறவில் சில எல்லைகளுக்கு வழி வகுத்துவிடும்.

நேரான ஒப்பீடு

சூடான விவாதங்களின் போது முன்னாள் காதலர் /காதலி இந்த மாதிரி செய்ய மாட்டார்” என்பது போன்ற வார்த்தைகளை எதிர்கொள்ள நேரிட்டால்அவர்கள் இன்னமும் தங்கள் முன்னாள் காதலை விரும்புவதை வெளிப்படுத்தும் அறிகுறி

காதலர் பெயரைக் கேட்டால்

சில சமயம் நீங்கள் அவர்களின் முன்னாள் காதலர் /காதலி பெயரை கூறினால் உடனடியாக உரையாடலில் இருந்து கவனம் விலகுவது, சங்கடத்தில் ஆழ்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

நினைவூட்டுகிறீர்கள்

உறவில் ஒப்பீடு என்பது அழிவிற்கு இழுத்துச் செல்லும் ஆயுதம். முன்னாள் காதலருடன் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பது அவர்கள் புது உறவிற்கு தயாராக இல்லை என்பதை உணர்த்துகிறது.

Previous articleநீங்கள் காதல் செய்தால் இந்த ராசி பெண்ணை காதலியுங்கள்
Next articleநீங்கள் சாப்பிட உடன் கட்டில் உறவில் ஈடுபடுவதால் உண்டாக்கும் தீமைகள்