Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் எண்ணெய் வழிந்த முகத்தின் அழகை கொடுக்கும் டிப்ஸ்

பெண்களின் எண்ணெய் வழிந்த முகத்தின் அழகை கொடுக்கும் டிப்ஸ்

61

பெண்கள் அழகு கலை:சிலருக்கு முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு முகத்தில் பருக்கள், புள்ளிகள் தோன்றும். முகத்தின் அழகை பராமரித்துக்கொள்ள இந்த டிப்ஸ படிங்க.
முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு

தேவையான பொருட்கள்: முட்டையின் வெள்ளைக்கரு – 1 கடலை மாவு – 1 டீஸ்பூன்

செய்முறை:
* ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன்பின் முகத்தை உலர்த்தி, டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள்.
நன்மைகள்: இந்த ஸ்கரப் சருமத்தில் மிதமிஞ்சி செயல்படும் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

தக்காளி மற்றும் பால் பவுடர்

தேவையான பொருட்கள்: தக்காளி கூழ் – 2 டீஸ்பூன் பால் பவுடர் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* ஒரு பௌலில் தக்காளி கூழுடன் பால் பவுடர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* பின் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.
* அதன்பின் நீர் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள்.
நன்மைகள்: இந்த ஸ்கரப் சருமத்தில் பிசுபிசுவென்று இருக்கும் எண்ணெய் பசையைப் போக்கி, முகத்தின் பொலிவை மேம்படுத்தி, பிரகாசமாக காட்டும்.

நாட்டுச் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்: நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:
* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

நன்மைகள்: இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்திக் காட்டும்.

வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் அரிசி மாவு

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் சாறு – 2 டீஸ்பூன் அரிசி மாவு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரால் நனைத்து, அதன் பின் இந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இறுதியில் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
நன்மைகள்: இந்த ஸ்கரப்பால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சரும நிறம் மேம்பட்டு காணப்படும்.

ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் லாவெண்டர் ஆயில்

தேவையான பொருட்கள்: வேக வைத்த ஓட்ஸ் – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் லாவெண்டர் ஆயில் – 3-4 துளிகள்

செய்முறை:
* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி, மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* அதைத் தொடர்ந்து டோனர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
நன்மைகள்: இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களையும் வெளியேற்றி, முகத்தை பளிச்சென்று காட்டும்.

ஸ்கரப் : தயிர், தேன் மற்றும் ஆளி விதை (Flax seed)ஆயில்

தேவையான பொருட்கள்: தயிர் – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் ஆளிவிதை ஆயில் – 2-3 துளிகள்

செய்முறை:
* ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அதன்பின் ஆயில்-ப்ரீ மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவுங்கள்.
நன்மைகள்: இந்த எளிய ஸ்கரப் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தமாக வைத்து, முகப்பரு வருவதைத் தடுக்கும்.

காபி தூள், கற்றாழை ஜெல் மற்றும் முல்தானி மெட்டி

தேவையான பொருட்கள்: காபி தூள் – 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி – 1/2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் – 2-3 டீஸ்பூன்

செய்முறை:
* ஒரு சிறிய பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடையுங்கள்.
* இறுதியில் ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுங்கள்.