Home பாலியல் ஆண்களும் பெண்களும் ஆடையில்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

ஆண்களும் பெண்களும் ஆடையில்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

799

பாலியல் செய்திகள்:தம்பதியர்கள் நிர்வாணமாக தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
உறக்கம் என்பது மனித உடலின் முக்கிய மற்றும் அடிப்படை தேவைகளில் முதன்மையான ஒன்று; எப்படி உணவு, உடை, இருப்பிடம், நீர் இல்லாமல் உயிர் வாழ முடியுதோ, அதே போல் உறக்கம் இல்லாமல் சுய நினைவுடன், சுறுசுறுப்புடன், ஆரோக்கியத்துடன் வாழ்வது என்பது முடியாத காரியம். முதல் நாள் இரவு உறங்கவில்லை எனில், அடுத்த நாள் இயல்பாக செயல்படுவது என்பது முடியாத காரியம் ஆகி விடும்.

இரண்டு – மூன்று நாட்கள் உறங்காமல் இருந்தால், உடலின் அனைத்து செயல்பாடுகளும் நின்று விட்டது போன்று, மிகவும் சோர்வான உணர்வு கண்டிப்பாக ஏற்படும்.

உறக்கம் என்றால் என்ன? ஆகையால், மனித வாழ்விற்கு உறக்கம் எவ்வளவு முக்கியமானது, அதன் முக்கியத்துவம் என்ன என்று மேற்கண்ட வரிகளை படித்தே புரிந்து கொள்ள முடியும். உறக்கம் என்பது உடலும் மனமும் இயக்கத்தை மறந்து ஆழ்ந்த தியான நிலைக்கு செல்வது தான். இப்படிப்பட்ட நிலையை நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் உறக்கத்தின் போது அடைகிறோமா என்றால் கண்டிப்பாக கிடையாது.

உறக்கம் கொள்வது எப்படி? உறக்கம் என்பதனை கட்டிலில், மெத்தையில் படுத்துக் கொண்டு கொட்ட கொட்ட விழித்திருப்பதோ, ஃபோனை நோண்டிக் கொண்டிருப்பதோ, போன் பேசி கடலை போட்டு கொண்டிருப்பது, வீடியோ கேம் விளையாடுவது, படுத்துக் கொண்டே படிப்பது, வேலை செய்வது, டிவி பார்ப்பது போன்ற செயல்பாடுகளை கொண்டு தொடங்க கூடாது. உறங்குவதற்கு ஓரிரு மணி நேரம் முன்பு எந்த செயலும் செய்யாமல், தனி மனித மேம்பாடு குறித்து சிந்தித்தல், டைரி எழுதுதல் அல்லது தம்பதியர் என்றால் தங்களுக்குள் மனதார பேசிக்கொண்டே உறங்க செல்வது நல்லது

எப்படி உறங்க வேண்டும்? உறக்கத்தை எப்படி தொடங்க வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பது போல, உறக்கம் கொள்ளும் பொழுது எந்த முறையை பின்பற்றி, எப்படி உறங்க வேண்டும் என்றும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உறங்குவதற்கு காற்றோட்டமான, நல்ல இட வசதி உள்ள அறையை கட்டி தயார் செய்து வைத்துள்ளது போல, உறங்கும் பொழுது காற்றோட்டமான சூழலை உடலுக்கும் தர வேண்டும்.

உடலுக்கு காற்றோட்டமா? ஆம் உடலுக்கு காற்றோட்டம் என்பது உடலை சுற்றி இறுக்கமான ஆடை இல்லாத பொழுது அல்லது ஆடையே அணியாத பொழுது கிடைக்கும். ஆகையால், உறங்கும் பொழுது ஆடைகளை களைந்து விட்டு, ஒட்டுத்துணி கூட உடுத்தாமல் நிர்வாணமாய் உறங்குவது நல்லது என்று சமீபத்திய ஆய்வுகள் கருத்து தெரிவித்து உள்ளன. அதிலும் தனி மனிதர்களோ, தம்பதியர்களோ உறங்கும் பொழுது பிறந்த மேனியாய் உறங்குவது உடலுக்கு எக்கச்சக்க நன்மைகளை அள்ளித் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அய்யய்ய அசிங்கம்! நிர்வாணமாய் உறங்குவதை அசிங்கம், ச்சீ என்று எல்லாம் நினைக்கும் குணவான்களே! ஒரு நிமிடம் உங்கள் மூட நம்பிக்கையை, பழைமை சிந்தனையை கழற்றி வைத்து விட்டு உந்த வரிகளை படியுங்கள். இந்த உறக்கம் சம்பந்தப்பட்ட ஆய்வில் கலந்து கொண்ட மக்களில், 58 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரையிலான நபர்கள் ஆடையின்றி உறங்கும் பொழுது, எவ்வித தொந்தரவோ, இறுக்கமோ இல்லாமல் இருப்பதோடு, மனம் மிகவும் அமைதியாக இருப்பதாக தோன்றுகிறது. மேலும் கண்களை மூடியவுடன் உறக்கம் தானாக வந்து கண்களை தழுவி அணைத்துக் கொள்கிறது என்று கருது தெரிவிக்கின்றனர்.

தம்பதியர் வாழ்க்கையில்! இந்த ஆய்வில் கலந்து கொண்ட தம்பதியர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட சிறு சிறு சண்டைகள் முதல் பெரிய சண்டைகள் வரை, மனஸ்தாபங்கள், கோபங்கள் போன்ற அனைத்தும் நிர்வாணமாய் உடன் உறங்கும் துணையை பார்த்ததும் பறந்து போய் விடுகின்றன. மேலும் தம்பதியருடன் நிர்வாணமாய் பேசிக் கொண்டே உறங்குவது எல்லையில்லா ஆனந்தத்தை தருகிறது என்றும் கருது தெரிவித்து உள்ளனர்.

கலவி வாழ்க்கை! சுமார் ஒரு மாத கால அளவிற்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கலந்து கொண்ட தம்பதியர் முன்பை விட இப்பொழுது தங்கள் தாம்பத்ய வாழ்க்கை மேம்பட்டு இருப்பதாகவும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள காதலும் ஆசையும் பல மடங்கு பெருகி இருப்பதாகவும் கூறி உள்ளனர். ஆடையில்லாமல் உறங்கும் பொழுது, உடல் எப்படி வெளிப்படையாய் தெரிகிறதோ, அது போல இந்த நிர்வாண உறக்க முறையை மேற்கொண்ட பொழுது மனதில் அடக்கி வைத்து இருந்த சந்தேகங்களோ, கோபமோ எல்லாம் பறந்து போய், வெளிப்படையான, நிதர்சனமான, தாபத்துடன் கூடிய நிஜமான காதல் மட்டுமே நிலைத்து நிற்பதாக கருத்து தெரிவித்து உள்ளனர்!

வேஷங்கள் பல! ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும்; வேலை செய்யும் இடத்தில் ஒருவாறு, வீட்டில் ஒருவாறு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் உடம்பை எல்லா நேரங்களிலும் உரசிக் கொண்டு இருக்கும் துணி, நேரத்திற்கு ஏற்றாற் போல் மனம் போடும் வேஷத்திற்கு ஒத்து ஊதுவது போல அமைந்து விடுகிறது.

அறிவியல் உண்மை! எனவே உறங்கும் பொழுதாவது, ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரமாவது உடலின் மீது எந்த ஒரு இறுக்கமும் இன்றி இல்லாமல் இருக்கும் பொழுது, உங்களுக்குள் இருக்கும் நீங்கள் அறியாத குணங்கள் வெளிப்படுவதாகவும், மனித மனம் அமைதி அடைவதாகவும் அறிவியல் கூறுகிறது. மேலும் உறக்கத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல், நிர்வாணமாய் உறங்குவது உடலின் முக்கிய உறுப்புகளான பிறப்புறுப்பு போன்றவையும், மறைந்து இருக்கும் உறுப்புகளான அக்குள் போன்றவையும் காற்றோட்டம் பெற்று உடலின் இறுக்கம், துர்நாற்றம், சோர்வு போன்றவை உடலை விட்டு நீங்கி, புத்துணர்வு ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரி! எனக்கு கல்யாணம் ஆகவில்லை, சிங்கிளாக வாழும் நான் என்ன செய்ய என்று கேட்கிறீர்களா? ஆண்கள் ஏன் நிர்வாணமாக தூங்க வேண்டும், அதில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது… அதுக்குறித்து இனி காணலாம்…

லண்டன் லண்டன், மேரிலாந்து பகுதியில் இருக்கும் தேசிய குழந்தைகள் நலன் மற்றும் மனிதவளம் நிறுவனம் ( National Institute of Child Health and Human Development ) மற்றும் ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக்கழகம் (Standford University) இணைந்து நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வு இந்த ஆய்வில் 500 ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். மற்றும் இவர்களை வைத்து ஏறத்தாழ 12 மாதங்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

முறை இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 500 ஆண்களின் உள்ளாடை தேர்வு முதல் அவர்கள் அணியும் முறை மற்றும் அவர்களது விந்து திறன் முதலியவை ஆய்வு செய்யப்பட்டது.

நிர்வாணமாக உறங்குபவர்கள் இறுக்கமான உள்ளாடைகளை பகலிரவில் அணியும் ஆண்களோடு ஒப்பிடுகையில், பகலில் பாக்ஸர்ஸ் மற்றும் இரவில் நிர்வாணமாக உறங்கும் ஆண்களின் விந்தில் 25% குறைவாக தான் டி.என்.ஏ துண்டாகிறது என்று இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திறன் நாள் முழுக்க இறுக்கமான முறையில் உள்ளாடை அணியும் ஆண்களுக்கு விந்தணு திறனில் குறைபாடு ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்

உற்பத்தி இரவில் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிந்து உறங்குவதால் ஏற்படும் உஷ்ணத்தால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது.

ஆய்வாளர் இது குறித்து ஷெபீல்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் ஏலன் கூறுகையில், “இறுக்கமான உள்ளாடை அணிந்து உறங்கும் போது அதிகரிக்கும் வெட்பம், விதைப்பைகளை பாதிக்கிறது இதனால் விந்தின் திறன் குறைகிறது என்று கூறியுள்ளார்.

வாய்ப்பு ஐரோப்பாவில் மூன்றில் ஒரு ஆணும், ஐந்தில் ஒரு பெண்ணும், இரவில் நிர்வாணமாக உறங்க முற்படுகிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், இது அவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று மேலும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் ஏன் ? ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இரவில் நிர்வாணமாக (அ) உள்ளாடை இன்றி தூங்குவது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இரவில் இறுக்கமாக உள்ளாடை அணிந்து தூங்குவதால் பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.

அப்பாவாக ஆசை ? அப்பாவாக ஆசைப்படும் ஆண்கள் குறைந்தபட்சம் கொஞ்சம் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்ப்பதாவது நல்லது என்று ஆய்வளார்கள் கூறியுள்ளனர். அல்லது உள்ளாடைக்கு பதிலாக இரவில் பாக்ஸர்ஸ் (Boxers) அணிந்து உறங்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில், ஆண்களின் அந்தரங்கள் பகுதியில் சூடு / வெட்பம் அதிகரிக்க கூடாது என்று இவர்கள் கூறியிருக்கின்றனர்.