Home உறவு-காதல் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு படுக்கையில் ஆடையின்றி தூங்குங்கள் ஆய்வில் தகவல்

மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு படுக்கையில் ஆடையின்றி தூங்குங்கள் ஆய்வில் தகவல்

37

அமெரிக்காவில் உள்ள காட்டன் அமெரிக்கா என்ற அமைப்பு இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவை நேற்று வெளியிட்டது.

57 சதவிகித தம்பதிகள் இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள் பகிரப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 48 சதவீத தம்பதிகள் பைஜாமா போன்ற உடைகளை அணிந்து தூங்குவதாகவும், இதுவே தங்களுக்கு வசதியான உடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 43 சதவீதம் பேர் நைட்டி போன்ற உடைகளை அணிவதாகவும், 15 சதவீதம் பேர் உடைக்கும் தங்களுடைய உறவு மேம்படுவதற்கும் சம்மந்தமில்லை என்றும் அது மனம் சம்மந்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

மன்ஹட்டனை சேர்ந்த உறவு மற்றும் சிகிச்சை நிபுணர் அம்பர் மடிசன் கூறியதாவது:-உங்கள் துணையுடன் நீங்கள் படுக்கையில் ஆடையின்றி படுப்பது உங்களுக்குள் உடல் மற்றும் உண்ர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் எனவும் செக்ஸ் உறவுக்கும் அது பச்சை கொடி காட்டுவது போன்று.இப்போது உள்ல சவாலான வாழக்கை சூழ்நிலையில் இது போன்ற செயல்கள் தம்பதியரிடையே நெருக்கமும் வலுவான உறவும் ஏற்பட தேவை என கூறி உள்ளார்.