Home அந்தரங்கம் இரவு சிலிர்க்க வேண்டும் எனில், மாலை இவற்றை மறக்காமல் செய்யுங்கள்!

இரவு சிலிர்க்க வேண்டும் எனில், மாலை இவற்றை மறக்காமல் செய்யுங்கள்!

46

ipzvtதிருமணத்திற்கு பிறகு ஒரு ஆறேழு மாதம் “உனக்கென்ன வேணும் சொல்லு..” என்று தான் இருக்கும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல “என்ன சொல்ல, என்னென்னு சொல்ல..” என்று ஆண்கள் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு முழுக் காரணமும் ஆண்கள் தான். குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலும் ஆட்டுவார்கள். ஆசையை காண்பித்துவிட்டு, பிறகு அலுத்துவிட்டது என்று புலம்ப வேண்டியது. எனவே, உங்கள் இல்லற நாட்கள் என்றும் இனிமையாக இருக்க வேண்டும் எனில் தினமும் மாலை ஒரு சில விஷயங்களை நீங்கள் தவறாமல் பின்பற்றினாலே போதுமானது…

அணைப்புடன் ஒரு முத்தம் மாலை வீட்டிற்கு சென்றவுடன் மற்றவர் மீது இருக்கும் கோபத்தை மனைவி மீது காட்டுவதை நிறுத்திவிட்டு. இதமான அணைப்புடன் ஓர் முத்தமிட்டு பாருங்கள். மாலை ஏற்றி வைத்த அகல்விளக்குடன் சேர்த்து அகத்திலும் விளக்கு எரியும் பிரகாசமாக.

நீ அழகா இருக்க காலை முதல் மாலை வரை வீட்டு வேலைகள் செய்து சோர்ந்துபோய் இருக்கும் மனைவியை வாயாரப் புகழ்ந்து நாலு வார்த்தை பேசுங்கள். அதில் “நீ அழகா இருக்க..” என்ற வார்த்தைகள் இன்பில்ட்டாக இருக்க வேண்டும், மறந்துவிட வேண்டாம்.

அரைமணி நேரம் பேசுதல் டிவியே கதி என்று இருந்த மனைவியிடம் உங்களது நாளில் நடந்த விஷயங்கள் குறித்து பேசுங்கள். பகிர்ந்துக் கொள்ளுங்கள். இன்பம் இரட்டிப்பாகும், துன்பம் பாதியாய் குறையும்.

புன்னகை மலர செய்யுங்கள் உங்கள் இரவு சிலிர்க்க வேண்டும் எனில், இன்றைய மாலையில் உங்கள் துணையின் முகத்தில் புன்னகை மலர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தானே தெரியும்….

அவர்கள் விருப்பத்திற்கு அனுமதியுங்கள் “காலையில இருந்து உன் விருப்பத்திற்கு தானே டிவி பார்த்த, நான் நியூஸ் பாக்க போறேன்… ஸ்போர்ட்ஸ் பாக்குறேன்” என்று ரிமோட்டை பிடுங்க வேண்டாம். இது முட்டாள் தனம். அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். இல்லையேல் இரவு தட்டில் எதுவும் விழாது.

மல்லிகைப் பூ காலம், காலமாக தமிழர்களின் கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் வழக்கம். மல்லிகைப்பூ. அல்வா கிடைப்பது சிரமம் தான் (காசு வேற அதிகம்) ஆனால், மல்லிகைப்பூ சரியான சாய்ஸ். மறக்காமல் வாங்கிக் கொண்டு செல்லுங்கள்.

இரவும் கனியும் இவற்றை எல்லாம் நீங்கள் தவறாமல் செய்து வந்தால்… “இன்றைய இரவு, மட்டுமல்ல, எல்லா இரவும் உங்களுக்கு இனிமையாகவே அமையும்.” (நிபந்தனைகளுக்கு உட்பட்டது: காலம், நேரம், சூழ்நிலைகளுக்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது!!!)