Home பாலியல் புது தம்பதிகள் எவ்வளவு ஆரோக்கியமா இருப்பாங்கன்னு தெரியுமா? காரணம் இதுதான்

புது தம்பதிகள் எவ்வளவு ஆரோக்கியமா இருப்பாங்கன்னு தெரியுமா? காரணம் இதுதான்

95

பாலியல் செய்திகள்:திருமணமான புது தம்பதிகள் எவ்வளவு ஆரோக்கியமா இருப்பாங்கன்னு தெரியுமா? ஆம், அதற்கு காரணம் திருமணமான ஆரம்ப காலத்தில் தினமும் உடலுறவு கொள்வது தான்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அளவு உடலுறவானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்க பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த பட்டியலைப் படித்த பின், இதுவரை வாரம் ஒருமுறை உறவு கொள்வதைத் தவிர்த்து, தினமும் உடலுறவு கொள்ள விரும்புவீர்கள். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சமீபத்திய ஆய்வில் நாம் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும். இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். சரி, இப்போது அன்றாடம் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா

உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், ஒருசில சேர்மங்களும் வெளியிடப்படும். இவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

உடலுறவில் ஈடுபடும் நேரம் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது வெளியிடப்படும் ஆக்ஸிடாஸின் என்னும் ஹார்மோன், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் சீராக இருக்க உடலுறவு பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாயின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கும்.

தினமும் உடலுறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாமல் இருக்கும். அன்றாடம் உடலுறவு கொண்டால், பெண்களின் இடுப்புத்தசைகளுக்கு உடற்பயிற்சி செய்தவாறு இருக்கும். இதனால் இடுப்புத்தசைகள் இறுக்கமடைந்து வலிமையாகி, கர்ப்ப காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும்.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் மற்றொரு நன்மை தான், அது முதுகிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக கீழ் முதுகிற்கு நல்லது.

வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாக உறவு கொள்பவரை விட, அதிகமாக உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பானது குறைவாக உள்ளது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

அதேப் போன்று பெண்கள் அன்றாடம் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், எலும்பின் அடர்த்தியானது அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை வருவது தடுக்கப்படும்.

முக்கியமாக உடலுறவு கொள்ளும் போது நல்ல தூக்கம் கிடைப்பதால், முகமானது பொலிவோடு பிரகாசமாக இருப்பதுடன், முதுமை தோற்றமானது தடுக்கப்படும். அன்றாடம் 30 நிமிடம் உடலுறவு கொண்டால், 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ததற்கு சமம். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும்.

ஆண்கள் அன்றாடம் உடலுறவில் ஈடுபடும் போது, விந்தணுவானது சீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் விந்தணு தேங்குவது தடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால், விந்தணுவானது தங்கி, விரைவில் புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்திவிடும். Show Thumbnail உடற்பயிற்சி செய்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது ஊக்குவிக்கப்பட்டு, அதன் சக்தியானது அதிகரிக்கும்.

உடலுறவு கொள்வதும் ஒரு உடற்பயிற்சி போன்றதாகும். எனவே தினமும் உடலுறவு கொண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

உடலுறவின் போது ஆண் மற்றும் பெண்களின் உடலில் இயற்கை வலி நிவாரணியான எண்டோர்பின் என்னும் ஹார்மோனானது சுரக்கப்படும்.

உடலுறவு கொள்ளும் போது டோபமைன் என்னும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்றாடம் உறவில் ஈடுபடும் போது, ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால், அங்குள்ள திசுக்கள் ஆரோக்கியமாக இருந்து, விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

உடலுறவானது ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும். அதற்கு தினமும் 15-30 நிமிடம் உறவில் ஈடுபட்டு, இரவில் நன்கு தூங்கினால், மறுநாள் காலையில் உடலில் ஸ்டாமினாவானது அதிகம் இருக்கும்.

அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியானல் உடலுறவு கொள்ளுங்கள். ஏனெனில் அப்போது உற்பத்தி செய்யப்படும் சேர்மங்களால், தலைவலியானது உடனே நீங்கிவிடும்.

உடலுறவிற்கு மற்றொரு சக்தியும் உள்ளது. அது என்னவென்றால், உடலுறவு கொண்டால், எந்தவிதமான நோய்களும் உடலை தாக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக காய்ச்சலைப் போக்க மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக உடலுறவு கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுறவு கொண்டால் உடனே குணமாகும். அதுமட்டுமின்றி, மனமும் ரிலாக்ஸ் ஆகி, புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்

Previous articleபெண்களுக்கு இயற்கையாக நேரும் மாதவிடாய்யை தள்ளிப் போடுவதால் உண்டாகும் பிரச்சனைகள்
Next articleஆண்களே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுபவர்கள்