Home அழகு குறிப்பு கூந்தல் அழகு நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

39

இங்கு நரைமுடியைக் கருமையாக்கும் எலுமிச்சை தேங்காய் எண்ணெய் கலவை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளில் ஒன்று தான் நரைமுடி. இளமையிலேயே நரை முடி வருவதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டு, மோசமான உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, கலரிங், கெமிக்கல்கள், கதிர்வீச்சுக்கள், மரபணு பிரச்சனைகள் போன்றவை காரணங்களாக உள்ளன.

இதனால் தலைமுடி நரைப்பதுடன், பொலிவிழந்தும், வறட்சியுடனும் காணப்படுகிறது. இப்படி நரைத்து முதுமைத் தோற்றத்தைத் தரும் தலைமுடியை மீண்டும் கருமையாக்க ஓர் அற்புத இயற்கை வழி உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் தலைமுடியின் நிறம் கருமையாவதோடு, முடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

எலுமிச்சை தேங்காய் கலவை இந்த கலவையில் லாரிக் அமிலம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும். மேலும் இதில் உள்ள நடுத்தர சங்கிலி அமிலங்கள், முடியை வலிமையாக்குவதுடன், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும், முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.

தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

தயாரிக்கும் முறை: ஒரு பௌலில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: தயாரித்து வைத்துள்ள எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து ஷாம்பு போட்டு அலச வேண்டும்

குறிப்பு இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், நாளடைவில் தலையில் உள்ள நரைமுடி கருமையாக ஆரம்பிக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகித்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.