Home பாலியல் முதலிரவன்று நடந்த ‘வேற’ சமாச்சாரங்கள்!

முதலிரவன்று நடந்த ‘வேற’ சமாச்சாரங்கள்!

96

நம் கலாச்சாரங்களில் பின்பற்றப்படும் ஆயிரத்து எட்டு சடங்கு, சம்பிரதாயங்கள், லொட்டு, லொசுக்கு விஷயங்களை தாண்டி முதலிரவன்றே கலவியில் புகந்து விளையாடும் நபர் நிஜமாகவே கில்லியாக தான் இருக்க வேண்டும். ஏனெனில், க்ளூகோஸ் ஃபேக்டரியே வைத்திருந்தாலும், யாருக்கும் அவ்வளவு எனர்ஜி கிடைக்காது.

மேலும், நம்ம ஊரு / வீட்டு பெரியவர்கள் திருமணமான அடுத்த மாசமே பெண் / மருமகள் கருத்தரிக்க வேண்டும் என்று கனவு காண்பவர்கள், இல்லையேல் திட்டு தீர்ப்பவர்கள். இவர்களை ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்றால், முதலிரவன்று இருந்தே பிராசஸை துவக்க வேண்டியது கட்டாயமாகிவிடுகிறது.

முதலிரவு என்றாலே செக்ஸ் தான் என்பது எழுதி வைக்காத சட்டமாக இருக்கையில்… அந்த முக்கியமான தருணத்தில் அதை தவிர்த்து நாங்க வேற ஒன்னு பண்ணோம் என்று சில இந்திய பெண்கள் தங்கள் வாழ்வில் நடந்த ருசிகரமான சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார்கள். அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…

#1
எங்கள் திருமணம் மிக ஆடம்பரமாக நடந்த ஒன்று. மாதக்கணக்கில் வேலைகள், ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தோம். திருமணம் நடந்து முடிந்த போது, உடல் முழுக்க சோர்வு மட்டுமே நிறைந்திருந்தது. நானும், என் கணவரும் ஆங்கில சீரியல் பார்த்து சிரித்து மகிழ்ந்தோம். இன்று வரை அந்த முதலிரவு அனுபவத்தை எங்களால் மறக்கவே முடியாது.

#2
இது எல்லாருடைய திருமணங்களிலும் நடப்பது தான். பல உறவினர்கள் மணமக்களை வாழ்த்த வருவதில்லை, உடை, அலங்காரம், பந்தி உணவு போன்றவை பற்றி விமர்சிக்க தான் வருகிறார்கள். அப்படி எங்கள் திருமண நாளின் போது நாங்கள் கண்கூட பார்த்த இருவீட்டார் உறவினர்களை முதலிரவன்று கேலி, கிண்டல் செய்து கழித்தோம். நாங்கள் எப்போது தூங்கினோம் என்று எங்களுக்கே தெரியாது.

#3
உண்மையில் எங்கள் இருவரிடமும் சுத்தமாக எனர்ஜி இல்லை. ஆயினும்…, கலவியில் கூட முயற்சித்தோம்.. ஆனால், உடல் ஒத்துழைக்கவில்லை. ஆகவே, உறங்கிவிட்டோம். மறுநாள் மதியம், உறவினர்கள் வந்து கதவை தட்டிய போது தான் எழுந்தோம்.

#4
காலையில் திருமணம், மாலையில் ரிசப்ஷன். எல்லா வேலையும் முடித்து மண்டபத்தில் இருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்த போது மணி நள்ளிரவு 1. ஆடைகளை மாற்றி, மேக்கப் நீக்கவே ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இதற்கு நடுவே, நாங்கள் இருவரும் திருமண மண்டபத்தில் நடந்த சில விஷயங்களை குறித்து காரசாரமாக பேசிக் கொண்டிருந்தோம். எல்லாம் முடிந்து விடியலுக்கு சிறு நேரத்திற்கு முன் கட்டியணைத்துக் கொள்ள மட்டுமே எங்களுக்கு நேரம் மிஞ்சியது.

#5

என்னுடைய திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது. முதலிரவு என்பது எங்களுக்கு ஒரு அசௌகரியமான செயலாக இருந்தது. முதலில் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று. முதலில் அவர் ஏதாவது விளையாடலாம் என்று கூறி கார்ட்ஸ் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாட அழைத்தார். ஏறத்தாழ ஓரிரு மணிநேரம் தொடர்ந்தது அந்த விளையாட்டு. அதில் சோர்வடைந்த பிறகு, கலவியில் ஈடுபட துவங்கினோம்.

#6

ஆறேழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் நாங்கள். திருமணத்தின் அன்று சடங்கு, சம்பிரதாயங்கள் என உடலில் இருந்து ஒட்டுமொத்த எனர்ஜியையும் ஸ்ட்ரா போட்டு உறுஞ்சிவிட்டனர். இரவு முதலிரவு என்று கூறி அறைக்குள் அனுப்பிவைத்த போது சோர்வு மட்டுமே உடலில் நிறைந்து இருந்தது. அவரிடம் மசாஜ் செய்துவிட முடியுமா என்று கேட்டேன். மசாஜ் செய்து முடிப்பதற்குள் நான் உறங்கிவிட்டேன்.

#7

கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறந்துவிட்டோம். ஹனிமூன் ட்ரிப் என்று தெரிவித்திருந்ததால், ஹோட்டல் மேனேஜ்மென்ட் எங்களுக்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்திருந்தனர். குளியலறையில் பாத்டப் முழுக்க ரோஜா இதழ்கள், நறுமணம் பொங்கும் மெழுகுவர்த்திகள் என ரொமாண்டிக் மூட் செட் செய்து வைத்திருந்தனர். எங்கள் முதலிரவு ஒரு ரொமாண்டிக் குளியலோடு துவங்கியது.