Home பாலியல் ‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது – ஆய்வில் தகவல்

‘மார்னிங் ஷோ’ மனதிற்கும், உடலுக்கும் நல்லது – ஆய்வில் தகவல்

22

அதிகாலை நேரத்தில் தாம்பத்ய உறவு கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலை நேரத்திய உறவு உணர்வு ரீதியாக மட்டுமல்ல உடல்ரீதியாகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்.
அதிகாலை நேரம் ஜன்னல் வழியே ஊடுருவும் தென்றல், அருகில் கண்மூடி படுத்திருக்கும் துணையின் நிலை இதனை கண்டால் காலைநேரத்தில் காதல் உணர்வுகள் கிளர்ந்தெழும். காலையில வேற வேலையில்லையா என்று செல்லமாய் உங்கள் துணை கோபித்துக் கொண்டாலும் அதையே சம்மதமாக எடுத்து சந்தோசமாக காரியத்தை முடித்துவிடுவார்கள்.
ஆண்களில் பெரும்பாலானோருக்கும் காலை நேர உணர்வு எழுவது சகஜம். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு காலை உறவில் நாட்டம் ஏற்படுவதில்லை. ஆனால் காலை நேர உறவு என்பது அன்றைய பொழுதின் மகிழ்ச்சியான தொடக்கம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் போது ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் வெளிப்படுகிறதாம். இது நாள் முழுவதும் தம்பதியரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறதாம்.
தொடர்ந்து காலை நேர உறவில் ஈடுபடுவது மனதிற்கு அமைதியை ஏற்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம்.
நம்பினால் நம்புங்கள் காலை நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தாலும் உடனே குணமாகிறதாம். அதுபோன்ற நோய்கள் வரவே வராதாம். மேலும் கூந்தல், சருமம், நகம் போன்றவை ஆரோக்கிய வளர்ச்சி அடைகிறதாம்.
வாரத்திற்கு மூன்று முறை காலை நேரத்தில் உறவில் ஈடுபடும் தம்பதியருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை அடித்து சொல்கின்றனர் மருத்துவர்கள்.
வற்புறுத்துவது கூடாது
காலை நேர உறவு என்பது நல்ல ஐடியாதான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற் கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் உறவில் ஈடுபடும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப் பட வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
மென்மையை கையாளுங்கள்
எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சிறந்தது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், உறவைவிட அது ஆழமாக அவரது மனதைத் தொடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.