Home ஆண்கள் ஆண்களின் விந்து நீர்த்துப்போகாமல் இருக்க வைத்தியம்

ஆண்களின் விந்து நீர்த்துப்போகாமல் இருக்க வைத்தியம்

361

ஆண்கள் ஆண்மை:சில மூலிகைகள் நாமிருக்குமிடங்களில் வளர்ந்தாலும், சில மூலிகைகள் மட்டும் அரிதாகவே, நாம் இருக்கும் இடங்களில் காணப்படும், அப்படி ஒரு மூலிகைதான், நில ஆவாரை.

சிறிது உயரமே வளர்ந்து, குறுஞ்செடிபோல நிலத்தில் படர்ந்து இருக்கும் நிலாவரைச்செடியின் இலைகள் இரண்டிரண்டாக, எதிரெதிர்புறம் அமைந்திருக்கும். பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் கொத்துகொத்தாகக் காட்சியளிக்கும். சிறிய பழங்களையும் உருண்டை வடிவ விதைகளையும் உடைய நிலாவரைச்செடிக்கு, ஆவாகை ஆலதூலம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.

நன்மைகள்

நிலாவரையின் இலைகள் கசப்பானவை, இவை அதிக மருத்துவ நன்மைகள் கொண்டவை. பதப்படுத்தப்பட்ட இலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி, அதிலிருந்து பல மருந்துகளை, மேலைமருத்துவ நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

விஷக்கடி மருந்து, இரத்த பாதிப்புகளை சரியாகும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், மூட்டு வலிகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

நிலாவரை சூரணம்.

நிலாவரை இலைகளை சுத்தம்செய்து, இளநிழலில் உலரவைத்து, உரலிலிட்டு பொடித்து, வைத்துக்கொள்ள, தேவைக்கேற்ப பயன்படுத்திவரலாம். இந்தமூலிகை சாப்பிடும்போது, உணவில் புளி, கட்டாயம் சேர்க்கக்கூடாது.

விஷக்கடி போக்க
வேப்பமரத்தின் பட்டையை சாறெடுத்து, அதில் நிலாவரை சூரணத்தை விரல் நுனியளவு சேர்த்து சாப்பிட, விஷவண்டுகள் கடித்த பாதிப்புகள், விஷபல்லிகள் வாய்பட்ட விஷ கோளாறுகள் நீங்கும்.

குப்பைமேனி இலைச்சாறெடுத்து, அதில் சிறிது நிலாவரை தூளைக்கலந்து இரண்டுவேளை சாப்பிட, தேள் விஷம் விலகிவிடும்.

சிலருக்கு என்ன விஷப்பூச்சி கடித்தது என்ற உணர்வேஇருக்காது, ஆயினும் பாதிப்புகள் உடலில் இருக்கும். எலுமிச்சம்பழச்சாற்றில், நிலாவரை பொடியை சிறிதுசேர்த்து, சாப்பிட்டுவர, விஷக்கடி பாதிப்புகள் குணமாகிவிடும்.

உடல் உறுதி பெற.
உடற்பயிற்சிகள் செய்துவந்தாலும் சிலருக்கு, உடல்தேறாமல், தளர்ந்துபோய் இருக்கும். இந்த பாதிப்புகள்தீர, நிலாவரை பொடியை பேரீச்சம்பழத்தை பிசைந்து சாப்பிட்டுவர, உடல் வலிமையாகும். பசியெடுக்கும்.

பசும்பால், பனங்கற்கண்டு சேர்த்து இரவில் நிலாவரைப் பொடியை சாப்பிட்டுவர, உடல் சருமம் இளமைப்பொலிவாகும், உடல் நல்ல சதை வனப்புடன் இருக்கும்.

இரத்த சுத்திகரிப்பு.
உடலுக்கு நன்மைசெய்யாத உணவுகள், பானங்கள், போன்றவற்றால், உடல் இரத்தம் கெட்டுப்போகிறது. இதுவே, இரத்தம் தொடர்பான பல வியாதிகளுக்குக்காரணமாகிறது.

நிலாவரை பொடியை தூயநெய்யில் சேர்த்து காலையில் சாப்பிட்டுவர, இரத்தம் தூய்மையாகி, உடல் பொலிவடைந்து, மனம் புத்துணர்ச்சி அடையும். புதிய இரத்தமும் உற்பத்தியாகும்.

நிலாவரை பொடியை, திராட்சையுடன் கலந்து சாப்பிட்டுவந்தாலும், இரத்தம் உடலில் அதிகரிக்கும்.

நிலாவரைப் பொடியை, தும்பை இலைச்சாற்றில் கலந்து சாப்பிட்டுவர, இரத்தசோகை பாதிப்புகள் நீங்கும்.

மலச்சிக்கல்.

மலச்சிக்கல்.
உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் மூலகாரணமாக இருப்பது மலச்சிக்கல். பாலில் நிலாவரை பொடியை சிறிது இட்டு சுண்டியபின், பனங்கற்கண்டு சேர்த்து, இரவில் தொடர்ந்து குடித்துவர, மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும்.

நிலாவரை பொடியுடன், கடுக்காய் தோல், நெல்லிமுள்ளி, சுக்கு, சோம்பு இந்துப்பு சேர்த்து பொடியாக்கி, செய்யப்படும் இலேகியம், மலத்தை இளக்கி, முக்குற்றத்தையும் போக்கும்.

நிலாவரை பொடியுடன் ரோஜா இதழ்கள், சுக்கு, கிராம்பு இவற்றை இடித்து, ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி, கால் லிட்டராக சுண்டி வந்ததும் வடிகட்டி, அதில் பாதியை குடித்தால், மலச்சிக்கல் நீங்கி, உடனே கழிச்சல் ஏற்படும்.

வயிற்றுக்கழிச்சல் இருந்தாலும், உடல்தளராமல், சுறுசுறுப்பாகி, வயிற்றுக்கிருமிகள் வெளியேறி, உடல் ஆற்றல் அதிகரிக்கும். கண்கள் குளிர்ந்து பார்வை தெளிவடையும்.

கண்பார்வைக் குறைபாடு

கண்பார்வைக் குறைபாடு
நிலாவரையை அரைத்து அத்துடன் சீரகம் வில்வப்பழ சதை இவற்றை சேர்த்து, அரை லிட்டர் நல்லெண்ணையில் சுண்டக்காய்ச்சி, தைலம் போலத்தலையில் தேய்த்து, பின்னர் குளித்துவர, உடல்சூடு தணியும், கண்கள் புத்தொளி பெறும்.

பக்கவாதம்
உடலில் சேரும் நச்சுக்களால், வாயு மிகுந்து பாரிசவாதம் எனும் பக்கவாதத்தால், சிலர் பாதிப்படைவார்கள். நிலாவரை பொடி, வேலிப்பருத்தி பொடி, முடக்கத்தான் பொடி சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்டக்காய்ச்சி, கால் லிட்டர் அளவில் வந்ததும், வடிகட்டி, தினமும் காலையில் தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர, வாயுக்கள் வெளியேறி, பக்கவாத கோளாறுகள் நீங்கிவிடும்.

மூட்டுவலி
வாதம் எனும் வாயு வெளியேறமுடியாமல் உடலில் தேங்கும்போது, கைகால் மூட்டுக்களில் வலி, கழுத்துவலி, இடுப்புவலி, முதுகுவலி போன்றவை, ஏற்பட்டு, இள வயதினர் முதல் பெரியவர்கள் வரை நடப்பதில், உட்காருவதில் சிரமப்படுகின்றனர்,

மேலைமருத்துவம் இந்த பாதிப்புகளை எலும்பு தேய்மானம், அறுவைதான் தீர்வு என்று சொன்னாலும், சித்தமூலிகை மருத்துவம், மனிதன் வாழும்வரை, உடலில் வளர்ச்சி இருந்துகொண்டேதான் இருக்கும், எலும்பு தேய்மானமானால், உடலே அதை சரிசெய்துகொள்ளும். அதில் கோளாறு ஏற்படும்போதுதான், மூட்டுவலி ஏற்படுகிறது.

எலும்பு இணைப்புகளில் உள்ள ஜெல்லை வலிமையாக்கும் ஆற்றல், நிலாவரைக்கு உண்டு. நிலாவரை பொடியை சுண்டைக்காயளவு, தேனில்குலைத்து, தினமும் இருவேளை சாப்பிட்டுவர, எலும்பு இணைப்பு ஜெல்களை அதிகரித்து, எலும்புதேய்வு, மூட்டுவீக்கம், போன்ற பாதிப்புகளை குணமாக்கிவிடும்.

நிலாவரை பொடியை சிறிது எடுத்து, நீரில் காய்ச்சி, தீநீர் போலப்பருகிவர, இரத்தம் சுத்தமாகி, உடல் பொலிவாகும். எல்லாவகை மூட்டு வலிகளும் குணமடையும்.

நிலாவரை பொடி, கடுக்காய்பொடி, ரோஜாஇதழ்கள், சுக்கு இவற்றை அரைலிட்டர் நீரில் இரவில் ஊறவைத்து, மறுநாள் காலை சுண்டக்காய்ச்சி குடிக்க, மலம் இளகி ஓரிரு முறை வெளியேறும். மூட்டு இணைப்புகளில் சேர்ந்த வாயுபாதிப்புகள் நீங்கிவிடும். பாதிப்பு அதிகமுள்ளவர்கள் வாரமொருமுறையும் மற்றவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் இந்தநீரை, தொடர்ந்து இரண்டுமாதங்கள்வரை குடித்துவர, மூட்டு எலும்பு தேய்மான பாதிப்புகள் நீங்கி, மூட்டுவலிகள் விலகும்.

மன நல பாதிப்புகள்
நிலாவரை பொடி, கடுக்காய் தோல்,மிளகு, மஞ்சளுடன் வேப்பங்கொழுந்து சேர்த்து காயவைத்து பொடியாக்கி, தினமும் இரண்டு தேக்கரண்டிவீதம் இருவேளை சாப்பிட்டுவர, சூட்டினால் ஏற்பட்ட வாயுவிலகும், இதனால் ஏற்பட்ட மூளை பாதிப்புகள் குணமாகி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள். தொடர்ந்து ஒருமாதம் வரை சாப்பிட்டுவர, நலம் பெறலாம்.

இரைப்பு, இருமல்
நிலாவரை பொடி, மிளகு, ஓமம் சுக்கு, வாய்விடங்கம் இவற்றை இடித்து, நாட்டுசர்க்கரை சேர்த்து, தினமும் கொதிநீரில் கலந்து பருகிவர, உடல்எரிச்சல், வாந்தி, மலச்சிக்கல், பித்தம், சளி வாயுத்தொல்லை போன்ற பாதிப்புகள் விலகி, உடல் புத்துணர்வாகும்.

தலைமுடியை கருப்பாக்கும்
தலைமுடி உதிர்வதைக்கட்டுப்படுத்த, நிலாவரை இலைகளை மையாக அரைத்து, தலையில் தடவிவர, முடிஉதிர்தல் கட்டுப்படும்.

நிலாவரை இலைகள், மருதோன்றி இலைகள் இரண்டையும் சேர்த்து, அம்மியில் நன்கு அரைத்து, இரவில் தலைமுடியில் தடவிவர, பழுப்புநிற முடியெல்லாம், கருப்பாக மாறிவிடும்.

உடல் நாற்றம்
சிலருக்கு வியர்வை பாதிப்பால், உடலில் தாங்கமுடியாத நாற்றம் வீசும். நிலாவரை பொடியை, மாதுளம்பழச்சாற்றில் கலந்து சாப்பிட்டுவர, உடல் நாற்றங்கள் விலகிவிடும்.

தாது கெட்டிப்பட
சிலருக்கு உயிர்த்தாது வலுவிழந்து நீர்த்துப் போயிருக்கும். நிலாவரை பொடியை ஆட்டுப்பாலில் கலந்து குடித்துவந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, தாது வலுப்படும்.

நிலாவரை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டுவந்தால், உயிரணுக்கள் அதிகரித்து, ஆற்றல் மேம்படும்