Home ஆண்கள் ஆண்களின் அந்தரங்க உறுப்பு தோற்று நோய்க்கான தீர்வு

ஆண்களின் அந்தரங்க உறுப்பு தோற்று நோய்க்கான தீர்வு

103

ஆண்களின் அந்தரங்கம்:ஈஸ்ட் தொற்று பெண்களுக்கு மிகவும் பொதுவான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் ஆண்களுக்கும் கூட ஈஸ்ட் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆண்குறி தலை மீது ஏற்படும் வீக்கத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படும்.

இது balanitis (மொட்டுத் தோலழற்சி) என அழைக்கப்படுகிறது. ஒரு ஆண்குறி ஈஸ்ட் தொற்று என்பது candidal balanitis அல்லது balanitis அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுரை ஆண்குறி ஈஸ்ட் தொற்றுக்கு உதவும் சிறந்த வீட்டு வைத்தியம் பற்றி விவாதிக்கும் கட்டுரையாகும்.

ஈஸ்ட் தொற்று நீங்கள் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்றுள்ள ஒரு பெண்ணுடன் பாலியல் உடலுறவு கொள்ளும்போது உங்களுக்கும் இந்த ஈஸ்ட் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த தொற்றுக்கு சிகிச்சையளிக்கத் தாமதமானால் அது உங்கள் இரத்த ஓட்டத்தில் அந்த தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

காரணங்கள் மருத்துவ நுண்ணுயிரியல் ஆய்வுப் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கேண்டிடா ஈஸ்ட்களே 30 முதல் 35 சதவிகி கேண்டிடல் பேலனிடிஸ் நோயாளிகளுக்கு உண்டாகும் ஈஸ்ட் தொற்றாகும். சில ஆய்வுகள், ஆண்கள் 16 முதல் 26 சதவீதம் ஈஸ்ட் தொற்றைப் பெறுகிறார்கள் மற்றும் 37 சதவீதம் Candida தாக்குள்ள ஆண்கள் எந்தவித அறிகுறிகளையும் உணர்வதில்லை என்று கூறுகின்றன. இருப்பினும், ஆண்குறி நோய்த் தொற்றுகளுக்கு வீட்டு வைத்தியம் உள்பட பல சிறந்த சிகிச்சைகள் கிடைக்கின்றன

தேயிலை மர எண்ணெய் (டீ ட்ரீ ஆயில்) தேயிலை மர எண்ணெயானது நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆன்டிவைரல், ஆன்டிபுராட்டஸால் மற்றும் பூஞ்சை எதிர்ப்புத்தன்மை போன்ற சிறந்த பண்புகளைக் கொண்டிருக்கிறது. பல ஆய்வுகள், ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும் திறன் இந்த அத்தியாவசிய எண்ணெய்க்கு அதிக அளவில் உள்ளது எனக் காட்டுகின்றன. பல ஆய்வுகள் வழியே தேயிலை மர எண்ணெய் பரவலாகக் காணப்படும் கேண்டிடா என்ற பொதுவான ஈஸ்ட் மீது சோதிக்கப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின்படி இந்த அத்தியாவசிய எண்ணெய் அதன் ஆன்டி- பங்கல் குணத்தால் இந்த ஈஸ்ட்டினைக் கொல்லும் என்று கண்டறியப்பட்டது. எப்படிப் பயன்படுத்துவது 3-5 சொட்டு தேயிலை மரத்தின் எண்ணெயை 1 துளி ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயுடன் சேர்த்து கலந்துகொள்ளவும். இந்தக் கலவை எண்ணையை ஒரு பருத்திப் பஞ்சில் தொட்டு ஆண்குறியின் மேல் மற்றும் அதன் தலைப்பகுதியைச் சுற்றிலும் தடவவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் வினிகர் சாறு, ஆண்குறி ஈஸ்ட் தொற்று சிகிச்சைக்கு மற்றொரு தீர்வு ஆகும். இது கேண்டிடாவிற்கு எதிராக போராடத் தேவையான திறன் கொண்ட ஆன்டி-பங்கல் குணங்களைக் கொண்டுள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் உடலில் உள்ள அதிகப்படியான ஈஸ்ட்டினைக் கொன்றுவிடும் என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எப்படிப் பயன்படுத்துவது: 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சில துளிகள் தண்ணீர் சேர்த்து, ஆண்குறி மீது பயன்படுத்துங்கள்.

சாதாரண தயிர் இனிப்பு அல்லது பிற கலப்பு இல்லாத சுத்தமான தயிரில் உள்ள பாக்டீரியாவான புரோபயாடிக்குகள் நம் உடலில் நல்ல பாக்டீரியாக்களை புதுப்பித்து உடலின் ஈஸ்ட்களின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. 2006 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வில், புரோ – பயாடிக்குகள் சில வகையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் சில ஈஸ்ட்களை எதிர்த்துப் போக்கலாம் என்று கண்டறியப்பட்டது. எப்படிப் பயன்படுத்துவது: உங்கள் உணவில் சற்று தயிர் சேர்க்கும் போது அது Candida – வை எதிர்த்துப் போராடும் மற்றும் பிறப்புறுப்பின் மீது நேரடியாகவும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் 2007 இல் ஒரு ஆய்வில், தேங்காய் எண்ணெய்கள் கேண்டிடா அல்பிகான்களைக் கொல்லும் திறன் கொண்ட பூஞ்சைக் குணங்களைக் கொண்டுள்ளன எனக் கண்டறியப்பட்டது. மேலும், இந்த தொற்றுநோயின் சிகிச்சைக்குத் தேவைப்படும் தேங்காய் எண்ணெயின் அளவு வழக்கத்தில் உள்ள மருந்தான ஃப்ளுகோனசோல் அளவைவிட குறைவாகவே இருந்தது எப்படிப் பயன்படுத்துவது: அறிகுறிகளை நிவர்த்தி செய்ய தூய்மையான தேங்காய் எண்ணெயை ஆண்குறியின் மீது வெளிப்புறமாகப் பயன்படுத்தலாம். தேயிலை மர எண்ணெய் அல்லது ஆர்கனோ எண்ணெய் போன்ற சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு அத்தியாவசிய எண்ணெய்களுடன் கலந்து சூடான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

ஆர்கனோ எண்ணெய் ஆர்கினொம் வல்கேரர் என்று அழைக்கப்படும் வைல்ட் ஆர்கனோ எண்ணெய் தைமோல் மற்றும் கேர்வாக்ரோல் என்று அறியப்படும் இரண்டு சக்திவாய்ந்த ஆன்டி-பங்கல் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு மூலக்கூறுகளும் ஆண்குறி ஈஸ்ட் மற்றும் கேண்டிடா தொற்று சிகிச்சையில் உதவுகின்றன. ஓம எண்ணெய் தான் ஆங்கிலத்தில் ஆர்கனோ ஆயில் என்று . எப்படிப் பயன்படுத்துவது: 2 டீஸ்பூன் இனிப்பு பாதாம் எண்ணெய், சிறிது சூடான தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயில் 3-5 சொட்டு ஆர்கனோ எண்ணெயைக் கலக்க வேண்டும். ஒரு பருத்தித் துணியின் உதவியுடன் சாதகமான முடிவுகள் வரும்வரை இந்தக் கலவையைப் பயன்படுத்துங்கள்.

பூண்டு ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பங்கல் பண்புகளைக் கொண்ட பூண்டு ஈஸ்ட் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. clotrimazole உடன் தைம் அல்லது பூண்டு கொண்ட ஒரு கிரீமின் செயல்திறனை இந்தத் தொற்று நீக்க ஆய்வில் ஒப்பிடுகையில், தைம் மற்றும் பூண்டு கிரீம் ஒத்த குணப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.மேலும் பூண்டு குறைந்த பக்க விளைவுகள் உள்ள சிகிச்சையைத் தருகிறது. எப்படிப் பயன்படுத்துவது: முதலில், உங்கள் பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு விழுது பூண்டை எடுத்து அதை பேஸ்ட்டாக்கி பாதிப்புப் பகுதியில் தடவவும். ஒரு மணி நேரம் அல்லது முழு இரவு அதை விட்டுவிட்டு, பிறகு கழுவவும்.

எப்பொழுது தவிர்க்க வேண்டும்? ஈஸ்ட் தொற்றுடன் கூடிய ஆண்கள் இந்த வீட்டு வைத்தியத்தை பாதுகாப்பாகக் கருதப்படுகையில் பயன்படுத்தலாம். ஆனால், வீட்டு வைத்தியம் உங்களுக்கு வேலை செய்யவில்லை என்று தோன்றினால், உங்களுக்கு பாலியல் ரீதியான நோய்த்தொற்று அல்லது நீண்ட கால ஈஸ்ட் தொற்று இருக்க வாய்ப்புகள் உள்ளன. உடனே உங்களுக்கு ஒரு மருத்துவரின் உதவி தேவைப்படும். மேலும் ஈஸ்ட் தொற்று அறிகுறிகள் உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் நீங்கள் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்த வேண்டாம்.