Home பாலியல் ஆண்களின் சுயஇன்பத்தால் வரும் பிரச்சனைகள் தெரியுமா?

ஆண்களின் சுயஇன்பத்தால் வரும் பிரச்சனைகள் தெரியுமா?

514

பாலியல் தகவல்:அன்றாட வாழ்க்கை முறையில் நாம் பல வித பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாம் பலவற்றை சமாளிக்கின்றோம். ஒருவர் உடல் அளவில் மட்டும் ஆரோக்கியமாக இருப்பது போதாது, அத்துடன் மன நிம்மதியும் மிக இன்றியமையாததாகும். பெருகி வரும் நம் கடமைகள் நம்மை இரண்டிலும் அதிக அக்கறை காட்ட முடியாமல் செய்கிறது.

இது குறிப்பாக வேலை பளுவால்தான் அதிகம் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதன் விளைவு, உடலில் பலவித நோய்களின் தாக்கம் எளிதாக நடைபெற கூடும். குறிப்பாக ஆண்களுக்கு ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டால், அதனை தவறாகவே கருதுகின்றனர். அந்த வகையில் ஆண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வும் அடங்கும். பல ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சினை ஏற்பட்டால் ஏதேதோ நினைத்து கொள்கின்றனர். அதில் ஒன்றுதான், சுய இன்பம் கொண்டால் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்ற எண்ணமும்..! இதற்கான உண்மையான விளக்கத்தை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

முடி உதிர்வா..?
முடி உதிர்வு என்பதை மிக சாதாரண விஷயமாக கருத முடியாது. இது சற்றே கவனிக்க வேண்டிய ஒன்றே. முடி உதிர்வு ஒவ்வொருவரின் உடல் அமைப்பையும் ஜீன்களையும் பொருத்தே வேறுபாடும். பெண்ணுக்கு முடி உதிர பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதே போன்று ஒரு ஆணுக்கு முடி உதிரவும் சில முக்கிய காரணங்கள் உள்ளன. ஜீன்களின் ரீதியாகவும், அன்றாட பழக்க வழக்கத்தின் மூலமாகவும், உட்கொள்ளும் உணவை பொருட்டும் இது ஏற்பட கூடும்.

ஆராய்ச்சிகளின் முடிவு..!
பொதுவாக ஆண்களுக்கு சுய இன்பம் கொள்ளுதல் நலனையே ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இது அவர்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். ஆனால், சுய இன்பம் கொள்ளுவதால் உடலில் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படுமாம். இது ஒருவரின் உடலை பொருத்தே நல்ல பலனை தருமா…அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிக்க முடியும்.

டெஸ்டோஸ்டெரோன் முதல் DHT வரை…! Dihydrotestosterone (DHT) ஹார்மோன் என்பது முடி உதிர்வை ஏற்படுத்தி வழுக்கையை தரும் ஒரு வகையான ஹார்மோன். ஆண்கள் சுய இன்பம் கொள்ளும்போது அவர்களின் உடலில் மற்ற ஹார்மோன்களுடன் இந்த DHT ஹார்மோனும் சுரக்க செய்கிறது. இது அவர்களின் முடியின் வலுவை குறைகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. உண்மை என்னவெனில் இது ஆண்களின் உடலில் அதிகமாக சுரந்தால்தான் முடி உதிருமாம். சுய இன்பம் அந்த அளவிற்கு DHT ஹார்மோனை சுரக்க செய்வதில்லை.

விந்து வெளியேறினால் முடி உதிருமா..? பொதுவாக ஆண்கள் சுய இன்பம் கொள்ளும் நேரத்தில் விந்து வெளியேறுவது இயல்புதான். ஆனால், இது அவர்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுத்தி முடி உதிர்வை தரும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால், இது உண்மை இல்லை. ஒரு முறை இதனை செய்வதால், மிக பெரிய அளவில் விந்தணு வெளியேற போவதில்லை. எனவே இது முடியையும் பாதிக்காது.

விந்தணுவும் புரதமும்..! விந்தணுவானது அதிக படியான புரதசத்துக்களை கொண்டது. 100 ml விந்தணுவில் 5040 mg புரதசத்து இருப்பதாக ஆராய்ச்சிகளை கூறுகின்றது. புரதசத்து உடலில் குறைந்தால் முடி கொட்டும் பிரச்சினை வரும்தான். ஆனால், ஒருவர் ஒரு முறை சுய இன்பம் கொள்வதால் வெறும் 3.7 ml புரதச்சத்தே விந்தணுவினால் வெளியேற்ற படுகிறது. எனவே இது ஒன்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்காதாம்.

முடி உதிர்வும் வேதி வினையும்..! முடி உதிர்வு என்ற வார்த்தையை கேட்டதும் பலர் பல கோணங்களில் இதனை அணுகுவார்கள். முடியின் ஆரோக்கியத்தை பொருத்தே முடி உதிர்வு நிர்ணயிக்கப் படுகிறது. பொதுவாக ஆக்சிடாக்சின் உடலில் சுரக்கும் பொது ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனானது DHT ஹார்மோனாக மாற்றம் பெரும். ஆனால், இந்த வேதி வினை முடி உதிர்வை ஏற்படுத்தாது என்றே மருத்துவர்கள் சொல்கின்றனர்.

ஹார்மோன் அளவு அதிகரித்தால்..! ஒரு சில முக்கிய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றது என்றால், ஒருவர் சுய இன்பம் கொள்ளாமல் இருந்தால் அவரின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் அளவு அதிகரிக்குமாம். அதாவது, ஒருவர் தனது விந்தணுவை வெளியேற்றவில்லை என்றால் அதுதான் இந்த ஹார்மோன் சுரக்க அதிக காரணமாக இருக்குமாம். எனவே இது DHT சுரக்கவும் வழி செய்து முடி உதிர்வை தருமாம்.

வேறு என்னவா இருக்கும்..? ஒருவருக்கு அதிகமாக முடி உதிர்கின்றது என்றால் அது அவரின் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன்களின் மாற்றத்தால், என்பதை முதலில் உணர வேண்டும். அத்துடன் சிலருக்கு இளம் வயதிலே அதிக முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழும். இது பரம்பரை ரீதியாக பெரும்பாலும் இருக்கலாம். முதலில் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இந்த பிரச்சினை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உணவே மருந்து..! யாராக இருந்தாலும் முதலில் உண்ணும் உணவில் அதிக கவனம் இருக்க வேண்டும். வறுத்த அல்லது பொறித்த உணவை அதிகம் உண்பதால் அது உடல் நலனை கெடுக்கும். மேலும் சர்க்கரையின் அளவை அன்றாட உணவில் கட்டாயம் குறைத்து கொள்ள வேண்டும். மேலும் மது பழக்கத்தையும் கை விட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு அதிகமாக முடி உதிர்ந்தால் தேவையற்ற எண்ணங்களை போட்டு மனதில் குழப்பி கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள் நண்பர்களே… இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.