Home பெண்கள் அழகு குறிப்பு ஆண்களின் முகம் அழகு பெற இலகுவான வழிமுறை

ஆண்களின் முகம் அழகு பெற இலகுவான வழிமுறை

135

ஆண்கள் அழகு:பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் பளபளப்பாகவும் மாறும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகு கூடும்.

தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் மாறும்.

தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். மேலும், முகச் சுருக்கங்கள் மறையும்.

ஆப்பிள் பழத்தை நறுக்கித் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.

தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வந்த முகம் பளபளப்பாக வைத்து கொள்ளம்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவினால் தோலின் நிறம் மாறும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளிக்கவேண்டும்.

Previous articleஇயற்கையாக ஆண்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் நோய்களும் தீர்வுகளும்
Next articleடீன்ஏஜ் பெண்களுக்கு வரும் குழப்பமான பருவ மாற்றங்கள்