Home உறவு-காதல் பெண்கள் தங்கள் காதலனிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள்

பெண்கள் தங்கள் காதலனிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள்

163

காதலன் காதலி உறவு:என்னதா ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி அமராவதி போல நெருக்கமா காதலிச்சாலுமே கூட, சில விஷயங்கள காதலன் கிட்ட வாய் திறக்கவே மாட்டோம்ன்னு பொண்ணுங்க சொல்றாங்க.

அது பர்சனல் விஷயத்துல இருந்து, அம்மா, அப்பா பத்தினதா இருக்கலாம், ஹெல்த், ஃபினான்ஷியல் விஷயமா இருக்கலாம்… சில 18+ விஷயங்கள் கூட இதுல அடங்கி இருக்கலாம். அதெல்லாம், அந்தந்த பொண்ண சார்ந்தது.

சரி! இங்க… நம்ம ஊரு பொண்ணுங்க.. காதலர்ஸ்…கிட்ட… 99% சொல்ல தயங்குற, சொல்ல மாட்டோம்னு அடம் பிடிக்கிற, சொன்னாலும் புரியாது அத அப்படியே போக விட்ரனும்னு நினைக்கிற விஷயங்கள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க….

வீக்னஸ்!

பசங்கள பொறுத்தவரைக்கும் பொண்ண பெத்தவங்க.. அதுவும் காதலிய பெத்தவங்க ரெண்டே வகை தான் ஒன்னு வில்லன், இல்ல காமெடி பீஸ். இதுவே நாம அவங்க அப்பா, அம்மாவ கிண்டல் பண்ணா கோபம் பொத்துக்கிட்டு வரும். சும்மாவே பேரண்ட்ஸ அப்படி கலாய்ச்சு தள்ளுவாங்க. இதுல அவங்க வீக்னஸ் ஏதாவது சொல்லிட்டா போதும், சொல்லி, சொல்லி கலாய்பான். அதுனால, முடிஞ்சா வரைக்கும் பேரண்ட்ஸ் வீக்னஸ் பத்தி சொல்லவே மாட்டேன்.

சுய இன்பம்!

நம்ம சமூகத்துல ஆண் – பெண் மத்தியில் வேறுபாடு அதிகமாவே இருக்கு. அதுல ஒன்னு தான் இது. செக்ஸ் சமாச்சாரம் பத்தி பொண்ணுங்க பேசவே கூடாது. பேசுனா அது பூதாகரமான பிரச்சனையா வெடிக்கும். யூடியூப்லயே போய் பாருங்களேன்.. பொண்ணுங்க மாஸ்டர்பேஷன் பத்தி பேசுற வீடியோ எல்லாம் மில்லியன் வியூஸ்ல இருக்கும். இது ஒரு சாதாரணமான விஷயம். ஆனால், இதப்பத்தி பசங்களே வெளிய பேசாதப்ப பொண்ணுங்க எப்படி பேச முடியும். சோ, நோ சான்ஸ்!

பிரச்சனை!

எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க பிரச்சனை பத்தி நிறைய பேசுவோம், என்னோட தனிப்பட்ட பிரச்சனை, வீட்டு பிரச்சனை , அவன் கிட்ட எனக்கு பிடிக்காத விஷயங்கள் பத்தின பிரச்சனைன்னு நிறைய பேசுவோம். ஆனா, வீட்டுல இருக்க ஃபினான்ஷியல் பிரச்சனைகள் பத்தி பேச மட்டும் மனசு வராது. அதுவொரு கில்டியான ஃபீலா இருக்கும். அதனால, முடிஞ்சா வரைக்கும், வேறவழி இல்ல சொல்லி தான் ஆகணும்னு நிலைமை வர வைக்கும் இதப்பத்தி பேச மாட்டோம்.

சாட்டிங்!

பசங்க கிட்ட இருக்க ஒரு கெட்ட குணம் என்னன்னா… காதலிக்கு தெரியாம அவங்க பண்ற அதே தப்பெல்லாம், காதலனுக்கு தெரியாம நாங்க பண்ண மாட்டோம்ன்னு நினைக்கிறது தான். டிண்டர், விஸ்பர்ன்னு சீக்ரெட் சாட்டிங்ல மூழ்கி கிடப்பானுங்க. ஏன், அத நாங்க பண்ண மாட்டோமா..? நீங்க அங்க பார்க்குற எல்லாருமே ஃபேக் பொண்ணுக இல்ல. டைம்பாஸ்க்கு பசங்க மாதிரி சீக்ரெட் சாட் நாங்களும் பண்ணுவோம்.

ஆசைகள்!

கல்யாணம் ஆயிட்டாலுமே கூட, ஈவன் லவ் மேரேஜா இருந்தாலுமே… தாம்பத்திய உறவுன்னு வரும் போதும், ஆம்பளைக்கு என்ன வேணுமோ… அதத்தான் பொண்ணுங்க பண்ணனும்ன்னு ஒரு விதி இங்க இருக்கு. சமையல்ல இருந்து, இது வரைக்கும் பெரிசா பொண்ணுக ஆசை நடக்குறதே இல்ல வீட்டுல. எங்களுக்கும் தாம்பத்திய உறவுல ஆசைகள் இருக்கு. ஏனோ பசங்க அத தெரிஞ்சுக்க பெரிசா காது கொடுக்குறதும் இல்ல, வாய்விட்டு கேட்கிறதும் இல்ல. அதனால, நாங்களும் இதப்பத்தி வெளியே பேசுறது இல்ல. ஆனா ஒன்னு… எங்க கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கும். எங்குளுக்கும் அதே கூகுல், அதே டேட்டா தான். இதுல வித்தியாசம் எதுவும் இல்ல.

பிடிக்காது!

என் அப்பா அது பண்றது பிடிக்கல, இது பண்றது பிடிக்கலன்னு ஆயிரம் சொல்லுவான் தினமும். ஆனா, ஒரு நாள் கூட அவங்க அம்மாவ எனக்கு பிடிக்கல, அவங்க இப்படி நடந்துக்கிறது பிடிக்கலன்னு சொல்ல முடியாது. இப்பவே இப்படி பேசுற.. கல்யாணத்துக்கு அப்பறம் என்னென்ன நடக்குமோன்னு காச்சு, மூச்சுன்னு கத்துவான். அதனால, பிடிக்காட்டியும் சொல்ல மாட்டோம்.

ரகசியங்கள்!

போன்ல சீக்ரெட் கோட், பேட்டர்ன் வைக்கிறதுல எல்லாம் பசங்க எங்கக்கிட்ட டியூஷன் கிளாஸ் வந்தாலுமே கூட ஜெயிக்க முடியாது. எப்படியும் மட்டரகமான பாஸ்வேர்டு தான் வெச்சிருப்பாங்க. இல்ல, அதையும் அவங்களே சொல்லிடுவாங்க. பல லவ்வர்ஸ்க்கு காதலிக்கு டெக்னாலஜி பெருசா தெரியாதுன்னு ஒரு நெனப்பு. அவன் போன்ல இருக்க சீக்ரெட் கண்டு பிடிச்சாலுமே கூட சொல்ல மாட்டேன். அப்பறம் பாஸ்வேர்டு மாத்திட்டான்னா என்ன பண்றது. எல்லாத்தையும் பத்திரமா தெரிஞ்சு மட்டும் வெச்சுப்பேன். எப்ப யூஸ் பண்ணணுமோ அப்ப யூஸ் பண்ணிப்பேன்.

பீரியட் டைம்!

பெரும்பாலும் லவ்வரா இருந்தாலும் பீரியட்னு வாய் திறந்து சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலுமே கூட, அந்த நாட்கள்ல வர பிரச்சனை பத்தி சொல்ல மாட்டோம். சொன்னாலும் புரியாது. சொல்லி புரிய வைக்கிறதுகுள்ள ஆவி, ஜீவன் எல்லாம் தீர்ந்திடும். அதுனால, சொல்லாமலே விட்டுடலாம்னு விட்டுடுவோம்.

போதை!

இந்த மெட்ரோ சிட்டி பார்ட்டி லைப்ல ஸ்மோக்கிங், டிரிங்கிங் ஹேபிட் கொஞ்சம் வந்து போச்சு. ஆனா, இத நிச்சயமா என் லவ்வர் கிட்ட சொல்ல மாட்டேன். அவங்க ஆயிரம் தடவ தம்மடிக்கிறத விட்டுட்டேன்னு சொல்லிட்டு.. திரும்ப, திரும்ப ஸ்மோக் பண்ணுவாங்க