Home உறவு-காதல் காதலன் கூறும் இந்த பொய்களை காதலியால் கண்டுபிடிக்கவே முடியாதாம்…! ஏன் தெரியுமா?

காதலன் கூறும் இந்த பொய்களை காதலியால் கண்டுபிடிக்கவே முடியாதாம்…! ஏன் தெரியுமா?

38

காதல் என்பது ஒரு அற்புதமான ஒரு விடயமாகும். இவ்வுலகில் காதலிக்காதவர்கள் எவரும் இலர்.

இத்தகைய காதலில் காதலன் அதிகமாக பொய் பேசுவது வழக்கம். ஆனால் இதனை பெண்களால் கண்டறியவே முடியாது.

காரணம் ஆண்களுக்கு பொய் பேசுவது அல்வா சாப்பிடுவது போன்றது. மிகக் கட்சிதமாய் நிலைமைக்கு ஏற்றவாறு பொய்களை கூறி பெண்களை சமாளித்து விடுவார்கள்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் கண்களில் மைப் பூசாதப் பெண்களும், காதலில் பொய் பேசாத ஆண்களும் இருந்ததாய் சரித்திரம், இயற்பியல், வேதியல், உயிரியல் என எதிலுமே இருந்ததில்லை. போன்ற பல மீம்ஸ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

சரி ஆண்கள் ஏன் காதலியிடம் பொய் சொல்கிறார்கள் என்று சிந்தித்தது உண்டா?

ஒரே ஒரு காரணம் தான் அதாவது காதலிக்கும் பெண்ணின் கறார் குணம் மட்டும் தான் அவர்களை பொய் சொல்ல வைக்கிறது.

இதலும், சில பொய்களில் தான் காதலே ஆரம்பிக்கும், இந்த பொய் தெரிந்தவுடன் பெண்கள் என்னவோ தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என கோபத்தின் உச்சிக்கு சென்று விடுவர். இதனால் காதலும் பிரிவு நிலைக்கு வந்துவிடும்.

இருந்த போதிலும், பெண்கள் கண்டுபிடிக்காத அளவு பொய் பேசுவதில் ஆண்கள் வல்லவர்கள். அது என்னென்ன பொய்கள், அதை ஏன் பெண்கள் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை பார்க்கலாம்.

காதலின் முக்கிய நாட்கள்

காதலில் சில நாட்களில் இனிமையான நிகழ்வுகள் நிகழ்ந்தேறியிருக்கும்.

உதாரணமாக, முதன் முதலில் பார்த்தது, கட்டிப்பிடித்தது, முத்தமிட்டது, பைக்கில் சென்றது என இந்த லிஸ்ட் பெரிதாய் நீண்டுக்கொண்டே போகும்.

ஆனால், இயற்கையிலேயே ஞாபக மறதி கொண்ட ஆண்களால் இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஏனோ மாறாக பெண்களின் நினைவில் அப்பட்டமாய் ஒட்டிகொள்கிறது.

இங்கு தான்முதல் பொய் ஆரம்பமாகிறது. பெண்கள் அந்த நாட்களை பற்றி கேட்கும் போது உடனே ஆண்கள் “ம்ம் தெரியும் மா, அத மறக்க முடியுமா, அன்னிக்கி நீ எவ்வளோ அழகா இருந்த சான்சே இல்ல” என பல பொய்கள் சொல்ல ஆரம்பிக்கின்றனர்.

நண்பர்களுடன் ஊர் சுற்ற கிளம்பும் நேரம்

பொதுவாக ஆண்களுக்கு காதலியுடன் ஊர் சுற்றுவதற்கு இணையாக நண்பர்களுடனும் ஊர்சுற்ற பிடிக்கும். பெண்களுக்கும் அப்படித்தான்.

ஆனால், காதலன் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்ற கிளம்பும் நேரங்களில், பெண்களுக்கு எங்கிருந்து தான் பொங்கி வருமோ காதல் உடனே அவர்களை தடுக்க முயற்சி செய்வார்கள்.

ஆனால், ஆண்கள் புத்திசாலிகள் அல்லவா..! அதை சமாளிக்க அலைபேசி உரையாடல்களிலும் குறுஞ்செய்திகளிலும் “மிஸ் யூ டியர், டார்லிங்!!” என தட்டிவிட்டு தப்பித்து விடுவார்கள்.

புகை மற்றும் குடிப்பழக்கம்

புது வருடம் பிறக்கும் போதும், காதலி திட்டும் போதும் என ஆயிரம் முறை சத்தியம் செய்தாலும் ஆண்களால் காப்பாற்ற முடியாத ஒரே விஷயம் புகை மற்றும் குடிப்பழக்கம் தான்.

இதற்கு காரணம் காதலிகள் அல்ல நண்பர்கள் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

நண்பர்கள் ஏன்டா, அவ சொன்னா குடிக்க மாட்டியா, நட்புக்கு நீ குடுக்குற மரியாத அவ்வளவு தான்’ல என்று மூச்சு விடாமல் வசனம் பேசும் போது, நட்பில் உருகி செய்த சத்தியத்தை மறந்திடுவார்கள் ஆண்கள்.

ஆனால், காதலி கேட்கும் போது, அய்யோ உனக்கு சத்தியம் பண்ண நாளில் இருந்து அந்த கருமத்த தொடரதே இல்ல டா” என்று இன்னொரு பொய் சொல்ல வேண்டிய நிலை.

ரெஸ்டாரண்ட்

பெண்கள் பெருமளவு உயர்தர உணவங்களுக்கு தான் செல்ல ஆசைப்படுவர்.

ஆனால், என்ன செய்வது மாதம் முழுக்க ஆண்களின் பர்ஸ் நிறைந்தே இருக்காது என்பது தானே உண்மை.

அப்படியிருக்கையில் அந்த நேரத்தில் பொய் சொல்லி தானே ஆக வேண்டும், “இங்க நல்லா தான் இருக்கும், ஆனா இத விட ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு மா, இந்த தடவ நாம அங்க போலாம் டா குட்டி” அவ்ளோ தான் பெண்கள் சம்மதித்து விடுவார்கள்.

காதலி சமைத்த உணவு

காதலனை பார்க்க செல்லும் போது சில நாள் பெண்கள் ஆசை ஆசையாய் சமைத்து கொண்டு வருவார்கள். ஆண்களும் அது ருசியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ரசித்து சாப்பிடுவார்கள். ஏனெனில் வேறு வழியில்லை என்பது தான் உண்மை.

இது நடந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஓடிய பின் பெண்களிடம் இருந்து ஒரு கேள்வி வரும், “அன்னிக்கி நான் சமைச்சு கொடுத்தது உனக்கு நிஜமாவே நல்லா இருந்துச்சா?” ஆண்கள், அவர்களது மனம் நோகாமல் இருக்க வேண்டும் என “ஆம்” என்று சொல்வார்கள்.

ஆனாலும், அடுத்த கேள்வி தான் வினையை கிளப்பும், “எங்க நான் என்ன சமைச்சு கொடுத்தேன்னு சொல்லு பாப்போம்? நீங்களே சொல்லுங்கள் இங்கு உண்மை பேச எங்கு வழியிருக்கிறது.

நீ எப்பவுமே ஸ்லிம்மா’தான் இருக்க செல்லம்..

காதலி எவ்வளவு எடை கூடினாலும் ஆண்கள் சொல்லும் ஒரே பதில், “இல்லையே அப்படியா தெரியுது. நீ எப்பவுமே ஸ்லிம்மா தான் இருக்க செல்லம்.” ஒருவேளை எடை கூடியதை ஆண்கள் ஆமாம் என்று சொல்லிவிட்டால், அன்றைய தினம் அங்கேயே முடிந்துவிடும்.

அதற்காக தான் குழந்தை மனம் படைத்த ஆண்கள் பல இடங்களில் உண்மையை சொல்வதில்லை.

சண்டே ஷாப்பிங்

அலுவலக வேலைகளில் வாரத்தில் ஆறு நாள் ஒய்ந்து போய் ஆண்கள் ஓய்வெடுக்கும் ஒரே நாள் சண்டே தான்.

ஆனால், அன்று தான் ஷாப்பிங் செய்ய அழைப்பார்கள் அன்பு காதலிகள்.

அன்று முழுவதும் ஆண்களுக்கு உண்ணா விரதம் தான் சாரி உண்மை விரதம் தான். அதிலிருந்து தப்பிக்க ஆண்களின் வாய்களில் இருந்து பொய்கள் மட்டுமே தான் வரும்.

பேஸ்புக்

ஒரு வேலை முகப்புத்தகத்தில் நாம் ஏதாவது புதியதாய் ஒரு பெண்ணுடன் நட்பு வைத்துள்ளோம் என தெரிந்து விட்டால் போதும் அய்யோ பெண்கள் கும்மி எடுத்துவிடுவார்கள்.

அதனால் ஆண்கள் சொல்லும் பொய், “அட சத்தியமா நான் ஒன்னும் பண்ணல, அந்த பொண்ணு எனக்கு ரெக்வெஸ்ட் அனுப்புனா” என்று வாய்கூசாமல் புளுக ஆண்களால் மட்டுமே முடியும்.

விருப்பமான ஹீரோயின்

பெண்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் இருக்கலாம். ஆனால், ஆண்களுக்கு அவர்களது காதலிகள் மட்டுமே நாயகியாக தெரிய வேண்டும் என்பது கட்டாயம்.

அதனால், பெண்கள் எத்தனை லட்சம் முறை கேட்டாலும். ஆண்கள் கூறும் உலக மகா பொய், “நீதாண்டி செல்லம் எனக்கு எப்பவுமே அழகு!

கோவமா? அதெல்லாம் இல்லையே..!

நாம் காதலிகளுக்கு பிடிக்காததை செய்துவிட்டால், அய்யோ அவ்வளவு தான் நாம தொலைஞ்சோம்!

அதுவே, நமக்கு பிடிக்காததை அவர்கள் செய்தால் நாம் எதுவும் சொல்ல கூடாது என்பது, பெண்ணுரிமை!

உடனே அவர்கள் கேட்பார்கள் “கோவமா? இருக்கியா டா என்மேல”னு.

உடனே ஆண்கள் “கோவமா? ச்சே ச்சே.. அப்படி எல்லாம் இல்ல டி பொண்டாட்டி!” என்று சொல்லும் பொய்யை இன்று வரை எந்த பெண்ணும் கண்டுப்பிடித்ததே இல்லை என்கிறது உலக காதல் வரலாறு!