Home உறவு-காதல் காதலா? நட்பா? குழப்பம் வேண்டாம் இதை படியுங்க புரியும் …

காதலா? நட்பா? குழப்பம் வேண்டாம் இதை படியுங்க புரியும் …

232

காதல் உறவுகள்:புதிதாக ஒருவருடனான நட்பு கிடைக்கும் போது அது நட்பையும் தாண்டிய ஓர் உறவு என்பதை நாம் உணரும் பட்சத்தில் அது காதலாக இருக்குமோ என்ற எண்ணம் இருக்கும். இதில் ஏற்படுகிற தடுமாற்றங்கள் தான் வாழ்க்கையின் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இருவருக்கும் காதல் என்று வளர்ந்து கமிட்மெண்ட்க்குள் சென்றாலும் இதே பிரச்ச்னாஇ இருக்கத்தான் செய்கிறது. இந்த ரிலேசன்ஷிப் இன்னும் எத்தனை நாட்களுக்கு? இது உண்மையிலேயே காதல் தானா…. இதே முடிவில் நான் கடைசி வரை இறுதியாக இருப்பேனா என்ற தயக்கம் இருக்கத்தானே செய்கிறது.

#1 நண்பர்கள் என்ற இடத்திலிருந்து காதலர்கள் என்ற இடத்திற்கு அல்லது வெறும் டேட்டிங் என்ற எண்ணத்திலிருந்து சீரியசான கமிட்மெண்ட் என்று வரும் போது நாம் முடிவெடுக்க பலவாறாக தடுமாறுவோம். இது காதல் தானா என்பதில் ஆரம்பித்து தீர்க்கமான ஓர் முடிவெடுப்பதில் சில சங்கடங்கள் உங்களுக்குத் தோன்றினால் இதைப் படித்திடுங்கள்.

#2 நீங்கள் இதை யோசிக்க ஆரம்பித்த முன்னரும் பின்னரும் உங்களுடைய அன்றாட வேலைகள் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு விஷயத்திற்கும் அல்லது அடிக்கடி உங்களின் டெய்லி செடியூலை மாற்றவோ அல்லது திருத்தியமைக்கவோ செய்திருக்கிறீர்களா?

#3 பல வருடங்களுக்கும் மேலாக வழக்கமாக சென்று வரும் பாதை தான். ஆனால் சமீப காலங்களாக எல்லாமே புதிதாக தெரிகிறதா? சின்ன சின்ன விஷயங்களை கூட ரசிக்க ஆரம்பித்து வாழ்க்கையே புதிதாக தோன்றியது போன்ற உணர்வு ஏற்படும். இவற்றையெல்லாம் நீங்களாகவே உணர்ந்து பார்க்க முடியக்கூடியவை தான்.

#4 உங்களது அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். பிறருடன் பேசுவதில், பழகுவதில் ஆரம்பித்து எப்போதுமே உற்சாகமாக சிரித்தபடி இருப்பீர்கள். எனர்ஜி குறையாது தொடர்ந்து செயலாற்றிக் கொண்டேயிருப்பீர்கள். இதற்கு காரணம் மனதில் புதிதாக வந்திருக்கும் அந்த நபரேயின்றி வேறு காரணம் இருக்க முடியாது.

#5 நீங்கள் சந்திக்கும் வெற்றியோ தோல்வியோ, பாராட்டுக்களோ, மனஸ்தாபங்களோ எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் தேடும் நபர்களில் முதல் ஆளாக மனதிலிருக்கும் அதே நபர் இருப்பார். இவருடன் இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைக்க ஆரம்பித்து ஒவ்வொரு கணமும் அவருடனே இருக்க விரும்புகிறீர்களா?

#6 இது கொஞ்சம் சென்ஸ்டிவ்வான விஷயம். அந்த நபரை உங்களுக்கு தேவைப்படும் போது மட்டுமல்லாமல் அவருக்கு தேவைபடும் போதும் நீங்கள் உறுதுணையாய் நிற்க விரும்புகிறீர்களா? எந்த இடையூறும் உணராமல் முழு மனதுடன் அந்த நேரத்தை செலவழிக்க முடிகிறதா என்று அறிந்து கொள்ளுங்கள். அதைவிட அவர்களின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா என்பதை சுயபரிசோதனை செய்து பாருங்கள்.

#7 தனிப்பட்ட நபரைத் தாண்டி அவரது நண்பர்கள், குடும்பத்தினர்,உறவினர்கள் என எல்லாரையும் நீங்கள் நேசிப்பீர்கள். அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள் அவர்கள் சொல்ல வருகிற கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். உங்கள் உலகமே இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென விரிவடைந்தது போல உங்களால் உணர முடிகிறதா ?

#8 இவை எல்லாவற்றையும் தாண்டி, அந்த நபர் இல்லையென்றால் உங்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதை எமோஷனலாக பார்க்காமல் அன்றாடம் டே டுடே லைஃப் எப்படி இருக்கும் என்பதை யோசியுங்கள். அந்த நபரின் இருப்பு தனி இடத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் முடிந்தளவு பரிசோதனை அடிப்படையில் இரண்டு நாட்கள் அவருடன் பேசாமல் இருப்பது, சந்திக்காமல் தவிர்ப்பது என உங்கள் சிந்தனையை திசை திருப்பிப் பாருங்கள்.

#9 அவருடனான சந்தோசமான நிமிடங்கள் ஒவ்வொன்றுமே உங்களுக்கு மிகத் தெளிவாக நினைவில் நிற்கும். எவ்வளவு முயன்றும் அந்த நபரை விட்டு வெளிவரமுடியவில்லை இப்போது என்றில்லை பத்து நாட்கள் கழித்து கேட்டாலும் சரி பத்துவருடங்கள் கழித்து கேட்டாலும் சரி இது இறுதியான முடிவாக இருக்கும் என்று நீங்கள் நம்பத்துவங்கிவிட்டால்…. அப்போதே முடிவெடுத்துவிடலாம். இது காதல் தானென்று.

#10 இருவரின் டேஸ்ட்,சிந்தனை எல்லாமே ஒத்துப் போயிருக்கிறது பிடித்திருக்கிறது என்பதைத் தாண்டி உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வு உங்கள் இணைக்கும் ஏற்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பாசிட்டிவான பதில் கிடைத்தால் அது நிச்சயமாக சீரியஸ் ரிலேசன்ஷிப் தான்!