Home உறவு-காதல் காதலின் உண்மை மொழிகள்..

காதலின் உண்மை மொழிகள்..

24

காதலின் பிரிவிற்கு காரணம் காதலிக்கும் பல ஜோடிகள் தம்பதிகளாக ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம் என்று அவர்களில் யாரையும் சொல்ல முடியாது. அதற்கு காரணம் என்றால், காதலர்கள் முதலில் அவசரப்பட்டு எதையும் யோசிக்காமல் காதலிப்பதுதான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்து இந்த காதல் நமக்கு சரிபடாது என்று பிரிந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்றுதான் சொல்ல வேண்டும். பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத துணையுடன் காதலித்து விட்டோமே என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்து வாழாமல் விலகிப் போவது மனிதனுக்கே உரிய புத்திசாலித்தனம். காதலுக்கு முக்கிய எதிரிகளாக திடீர் பிரிவு, திடீர் திருமணம், பண நெருக்கடி, உறவுகளின் நெருக்கடிகள் நிற்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி காதலுடன் வாழ்வதும், காதலை தொடர்வதும் ஒரு சாதனைதான். கண்டதும் காதல், காணாமல் காதல் என்றில்லாமல், ஒருவரை ஒருவர் நன்கு உணர்ந்து, நமது நிலைமை என்னவென்பதை உணர்ந்து பிறகு நமது காதல் சரிதானா என்பதை உறுதி செய்த பின்னரே காதலை ஏற்கவோ, கூறவோ வேண்டும். அதை விடுத்து நம் மனதில் தோன்றிய காதலை எந்த அலசலும் இல்லாமல், காதலிப்பவரிடம் கூறி அவரது மனதிலும் அந்த எண்ணத்தை உருவாக்கிவிட்டு பின்னர், தனது நிலைக்காக வருந்தி காதலில் இருந்து பின் வாங்குவது என்பது எவ்வளவு கோழைத் தனம். இதனால் நமது மன நிலை மட்டும் அல்லாமல் அடுத்தவரது மனதையும் அல்லவா பாழாக்கி விடுவோம். மேலும், பொய்யாக காதலிப்பது போன்று நடிப்பவர்களை நம்பி ஏமாறுவது, காதலிப்பது போன்ற பாவனையில் ஊர் சுற்றிவிட்டு, பாக்கெட்டை காலியாக்கிவிட்டு கைவிரிப்பது, தன்னைப் பற்றிய விஷயத்தை மறைத்து, காதலிக்கும் வரை போலியாக நடிப்பது போன்ற விஷயங்கள் நாங்கள் மேற்சொன்ன காதல் கணக்கில் வராது. பெண்கள் அழங்காரப் பிரியா்கள். பெண்களை அலங்காரப் பிரியர்கள் என்று சொல்வதுண்டு. அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான். தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக்கவே செய்கிறது. இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அல‌ங்கார‌ம் வெளியே தெரியவேக் கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம். இதில் பளிச் ரகத்தினர் மிக எளிதாக ஆண்களுடன் பழகுபவர்களாக இருப்பார்கள். மிகவும் மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஆ‌ண்க‌ளிட‌ம் பழகுவதற்கு தயங்குபவர்களாக இரு‌ப்பா‌ர்க‌ள். இதில் முதல் ரகப் பெண்களிடம் ஆண்கள் உரிமையுடனும், சகஜமாகவும் பேசுவார்கள். பழகுவார்கள். உ‌ண்மைதா‌ன். ஆனால் தனக்குப் பிடித்த பெண் என்று வரும்போது, கண்டிப்பாக மென்மையாக அழகுப்படுத்திக் கொள்பவளைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். அதிகமாக அழகுப்படுத்திக் கொள்ளும் பெண், சுதந்திர விரும்பியாகவும், மிகத் தைரியமானவளாகவும், போராடத் தயங்காதவளாகவும் இருப்பார்கள். இவை யாவும் பெண்ணுக்குத் தேவையான குணங்கள் என்ற போதிலும், இதனை பெரும்பாலும் ஆண்கள் விரும்புவதில்லை. அடுத்ததாக, அனைவரையும் கவரக் கூடிய அழகுடன் மிளிரும் இந்த பெண்ணுக்கு தான் தகுதியானவன் இல்லை என நினைத்தும் ஆண்கள் ஒதுங்கிவிடுவார்கள். இயற்கையான அழகுடன் மிளிரும் பெண்ணைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால் இயற்கை அழகைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தனது ஆடை, சிகை அலங்காரத்தில் அலட்சியமாக இருப்பதையும் ஆண்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், முதலில் ஆடை, அலங்கார விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுரையைப் படித்ததும், ஓர் ஆணிற்காக நான் ஏன் மாற வேண்டும், ஆணின் இஷ்டப்படி எல்லாம் நான் என்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எல்லாம் காதலுக்கு பொருந்தாது. உங்கள் விருப்பங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, காதலரின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காதலுக்கு அழகு. பின் உங்கள் விருப்பத்திற்கு அவர் முழு சுதந்திரம் தருவார். அவருக்கு நீங்கள் முழு சுதந்திரம் தருவீர்கள். அப்போது காதல் என்பது நினைக்க நினைக்க இனிக்கும் அற்புத விஷயமாக இருக்கும். காதல் பொன்மொழிகள் காதல் என்பது எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொ‌ன்றை சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல் காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள் எ‌ன்ன சொ‌ல்‌கி‌ன்றன எ‌ன்பதை இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம். அவருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் வா‌ழ்‌க்கை ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்பது காத‌ல் அ‌ல்ல, அவருட‌ன் தா‌ன் வா‌ழ்‌க்கை எ‌ன்பதுதா‌ன் காத‌ல். ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை. இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல். காதல் என்பது அழகான கனவு. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம். காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது. காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல. காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும். காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும். சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல். காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை. காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை. காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு. நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவு‌ம் வைக்க முடியும். காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை. எ‌ன்ன ‌நீ‌ங்களு‌ம் ஏதாவது சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்‌று ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? ‌ம்‌ம்‌ம் சொ‌ல்லு‌ங்களே‌ன்

Previous articleதாம்பத்திய உறவுக்கு அது தடையாகும்
Next articleவாத்ஸாயனர் தரும் முத்த ரகசியங்கள்..!!