Home பெண்கள் தாய்மை நலம் பெண்களே நீங்கள் நீண்ட காலமாக கர்ப்பம் தரிக்கவில்லையா?

பெண்களே நீங்கள் நீண்ட காலமாக கர்ப்பம் தரிக்கவில்லையா?

412

தாய் நலம்:பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.

♦1) கருப்பையில் புழுக்கள்
இருந்தால்

மிளகு,

வெள்ளைப்புண்டு,

வெள்ளைக்
குன்றிமணி வேர்,

கண்டங்கத்திரி வேர்,

வெள்ளைச்
சாரணை வோ்

வகைக்கு 3 கிராம் எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள்.

இதற்க்கு………

மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின்
[ஆண் உறுப்பு]
தண்டில் தடவி புணரவும்.

3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுத்து, பின் தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும்.

4) உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து
தண்டில் புசி
(ஆண் உறுப்பு)
புணரவும்.

♦ஆண் மலடு,பெண் மலடு நீங்க மருந்து :

சாதிக்காய் லேகியம் :

நெய்யில் வறுத்து இடித்த சாதிக்காய் தூள் 250 gm,

சுண்ணாம்பு மேல் தடவி சுட்டு சுத்தி செய்த சுக்கு தூள் 250 gm,

சுத்தி செய்த நீர்முள்ளி தூள்
250 gm,

வெய்யிலில் காயவைத்து இடித்த எள்ளு தூள் 750 gm.

சீனா கல்கண்டு தூள் செய்தது
4 kg

8 படி சுண்ணாம்பு தெளி நீரில் பாகு செய்து அதில் முன் தூள் செய்து வைத்துள்ள 1500gm,

பாகில் சிறுக சிறுக தூவி கிண்டி லேகிய பதத்தில் 1 லிட்டர் தேன் ஊற்றி கிண்டி வைத்து,மறுநாள் 1 லிட்டர் நெய் உருக்கி சூட்டோடு லேகியத்தில் கலந்து சேர்க்கவும்.சூடு ஆறியபின் புட்டியில் அடைக்கவும்.
லேகியம் அல்வா போன்று இருக்கும்.

பெண் காலை,இரவு ,ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.

ஆண் காலை மட்டும் ஒரு பெரிய நெல்லிக்கனி அளவு நன்கு மென்று சாப்பிடு 200 ml பசும்பால் குடிக்கவும்.
5,6 மாதத்தில் கரு உண்டாகும்

★ இலந்தை இலை – 1பிடி,

மிளகு – 6,

பூண்டு – 4

எடுத்து அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும்.

★ கருத்தரிக்க உதவும்…

அதிமதுரம்,

திராட்சை

இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

★ கருச்சிதைவு , பெண் மலடு பிரச்சனை தீர……

அசோகுப் பட்டை,

மாதுளை வேர்ப்பட்டை,

மாதுளம்பழ ஓடு(தோல்)

இவை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 3 சிட்டிகை அளவு எடுத்து காலை, மாலை என இருவேளையும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும் . இந்த பொடியை (4 மாதங்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை தீரும்.

♦பெண்களுக்கு கர்பபையில்நீர்கட்டி சதைகட்டிகள் கரைய மருத்துவம்…

கழறச்சிகாய்

சித்தரத்தை

மாவிளங்கம்பட்டை

இலவாங்கபட்டை

மிளகு

அருகம்புல்

வெள்ளாருகு

அனைத்து சமாஅளவாக கலந்து தினமும் இரண்டு வேலை இரண்டு கிராம் சாப்பிடாலாம் இது கட்டிகள் கரையும் வரை சாப்பிடாலாம் எந்த பக்க விளைவுகள் வராது.

♦கர்பப்பை நீர் கட்டியினால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு…

★கருப்பை கட்டி கரைய

களாச்சிக்காய் 3

நாட்டுக்கோழி முட்டை 1

நல்லெண்ணை 50மிலி

களாச்சிக்காயை பவுடரைப்போல் ஆக்கி கோழி முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து களாச்சிக் காயை வெள்ளைக்கருவுடன் சேர்த்து அதை 7 நாட்கள் வரை எண்ணையில் வதக்கிச் சாப்பிட வேண்டும்.

♦மாதவிடாய் காலத்தில் இதை உட்கொண்டு, பின் கணவனுடன் இணையும் பெண், கருத்தரிப்ப‍து நிச்ச‍யம்!!!

அதிமதுரம்,

உலர் திராட்சை

இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து

50 – 100 கிராம்

எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாத விடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், 6 ஆவது நாளில் கணவனுடன் தாம்பத் தியம் கொள்ளும் பெண்ணுக்குக் கருத்தரிக்கும். சில பெண்களுக்கு இது தாமதப்படலாம். அவர் கள் சோர்ந்து போகாமல் கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள்வரை இதுபோன்றே சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கூடிய விரைவில் எதிர்நோக்க‍லாம்.

♦கர்ப்பப்பை பிரச்சினைகள் நீங்க…

மஞ்சள் கரிசாலை – 100 கிராம்

வெள்ளைக் கரிசாலை – 100 கிராம்

குப்பைமேனி இலை – 100 கிராம்

கொட்டைக்கரந்தை இலை– 100 கிராம்

அவுரி இலை– 100 கிராம்

செருப்படை இலை – 100 கிராம்

ஆகியவற்றின் இலைகளை சேகரித்து, நிழலில் காயவைத்து, தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கான முறையற்ற மாதவிடாய் சரியாகும். மேலும், வயிற்றுப்பூச்சிகள், கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளும் விலகும். அதிகாலை, மாலை வேளைகளில் 45 நாட்கள் வரை தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

♦கச்சந்திராய் காயம்
இலேகம்

★தீரும் நோய்கள்

பெண்களின் மாதாந்த
கோளாறுகள்.

அடிக்கடிவயிறுவலி

வெள்ளைபடுதல்

குழந்தையின்மை

கருமுட்டை
வளர்ச்சியின்மை

என்பனவற்றுக்கான
நிரந்தரத் தீர்வு.

** கச்சந்திராய்
காயம்
செய்ய தேவையானவை;

சாளியா. 50 கிராம்

சதகுப்பை. 50 கிராம்

சாறனைவேர் 50 கிராம்

கறுவாபட்டை 50கிராம்

வெல்லம் 300 கிராம்

கச்சந்திராயை இடித்தகட்டிச்சாறு 300 ml

தேன்பாணி100 ml

பசுநெய் 200 ml

மருந்துகளைஇடித்து பொடியாக்கி
திராய்சாறுடன் வெல்லத்தைச்
சேர்த்து
நெருப்படுப்பிலிட்டுக்காய்ச்சவும்.

வெல்லம்
கரைந்ததும் மருந்துச்சூறணத்தை
கொட்டிக்கிண்டவும் அதன்பின்
நெய்யை
விட்டுக்கிண்டி அடுப்பிலிருந்து
இறக்கியபின் தேன்பாணியையும்
சேர்த்து கலக்கி ஆறிய பின் கண்ணாடிகள்
பாட்டலில் பத்திரப்படுத்தி
வைத்துக்
கொண்டு

காலையும் மாலையும்
பத்துக்கிராம்(10)
அளவு சாப்பிட்டு சுடுநீர்
குடிக்க மேலேசொல்லப்பட்நோய்கள்
குணமாகி உடல் ஆரோக்கிய
முண்டாகும்.

குழந்தையில்லா
தவர்கள்சாப்பிட்டால்
குழந்தையுண்டாகும்.

நாட்டு மருந்து கடைகளில் இவை அனைத்துப் பொருளும் கிடைக்கும்.

♦மஞ்சள் கரிசாலை
கரிசாலை சட்னி

அதிகம் முற்றாத இலைகள் -அரை கிலோ

மிளகு -10

சிறு வெங்காயம் -100 கிராம்

பூண்டு -25 கிராம்

இஞ்சி-தேவையான அளவு

செக்கு நல்லெண்ணெய் 50 மிலி

தக்காளி -3

புளி- மிளகளவு

உப்பு-தேவையான அளவு

தாளிக்க- கடுகு, கறிவேப்பிலை

கரிசாலை இலையை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும். பின் வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி,இஞ்சி,புளி சேர்த்து மீண்டும் வதக்கி ஒன்றாக்கி ஆறியபின் மைய அரைத்து எடுத்து தாளித்தால் கரிசாலை துவையல் தயார். குழம்பாக வேண்டு என்றால் நீர் ஊற்றி கரைக்கலாம்.

★இதை வாரம் இருமுறை உண்டுவர……

இரும்புச் சத்து அதிகரிக்கும்.
இரத்தசோகை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட நோய் தீர்ந்து அழகு பெறும்.
கல்லீரல் பலப்படும். கருப்பை பலப்படும்.
சளித் தொல்லை தீரும்.
கண் நோய் நீங்கும்.
பற்கள் மற்றும் குடல் உறுதி பெறும்.

♦கர்ப்பப்பை நீர் கட்டி
நோய் தீர:-

அசோகப்பட்டை,

மலைவேம்பு இலை,

நாயுருவி வேர்

அரசங்கொழுந்து

சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வரவும்.

♦வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.

**கர்பப்பை கட்டிக்கு
வாழைத்தண்டு சாறு மற்றும் கீழாநெல்லி இலை சாறு எடுத்து அதில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் 250 மில்லி சம அளவு கலந்து சாப்பிட்டு வர கர்பப்பை எழுமிச்சை பழம் அளவு உள்ள கட்டியும் கரைந்து விடும்
60-70 நாள் சாப்பிட வேண்டுமாம்

** ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும்.
பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்தபொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

**கல்யாண முருங்கைப் புவுடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.

**அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து
3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.

**இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.

**மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சுரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.

**சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.

**அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.
பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்.

**மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.

**சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில்
(#ஆண்_உறுப்பு) புசி புணர குழந்தை உண்டாகும்.

**புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.

**விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்புச்சிகள் சாகும்.