Home அந்தரங்கம் கணவன், மனைவி உறவை பலப்படுத்த பத்து ஆலோசனைகள்!

கணவன், மனைவி உறவை பலப்படுத்த பத்து ஆலோசனைகள்!

51

கணவன், மனைவி ஒற்றுமைக்கு இனிய தாம்பத்யமே ஆணி வேர். அந்த உறவு இருவருக்குமே சந்தோஷம் அளிப்பதாக திகழ்ந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது. அந்தவகையில் இனிய தாம்பத்ய வாழ்க்கைக்கான பத்து வழிகளை தற்போது பார்க்கலாம்!

ஆணின் மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை பெண்ணும், பெண்ணின் மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை ஆணும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆண், பெண் இணைந்து வாழும் வாழ்வில், தாம்பத்யம் என்பது அவசியமான ஒன்று. அதைப் பற்றிய சரியான புரிதல் ஆண், பெண் இருவருக்குமே அவசியம். தாம்பத்யத்தில் பிரச்னை என்றால், சிகிச்சை அல்லது கவுன்சிலிங் செல்வதற்கு இருவருமே தயங்கக் கூடாது.

கணவன், மனைவி இருவரும் சமம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அழகு, பணம், மற்ற திறமைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஒருவரையொருவர் தாழ்வாக நினைக்கும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.

நிறைய குடும்பங்களில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தாம்பத்ய உறவு மட்டும் சரியாக இருக்கும். தாம்பத்ய உறவு திருப்தியாக இருக்கும்போது, கருத்து வேறுபாடுகள் நாளடைவில் சரியாகி விடுவதைப் பார்க்க முடியும்.

தாம்பத்ய நேரத்தில் பெண்கள் வீட்டுப் பிரச்னைகளையோ அல்லது கணவரை தாக்கி பேசுவது, அவரை தனக்கு கீழாக இருப்பது போல ட்ரீட் செய்வது போன்ற தேவையில்லாத பிரச்னைக்கு வழிவகுக்கும்.

தான் விரும்பும் நேரத்தில் தன் மனைவியோ, கணவனோ தாம்பத்யத்துக்கு வர வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று.

தாம்பத்யம் என்பது சாப்பாடு, தண்ணீர் போன்று வாழ்க்கையில் ஏற்படும் இயல்பான ஒரு உணர்வு. அதை அந்த இயல்போடு கடக்க வேண்டும். தாம்பத்ய நேரத்தில் ஒரு சின்ன உரையாடல், செல்ல சீண்டல், ஊடல் போன்றன நிகழலாம்.

குழந்தை பெற்ற பிறகு பெண்களின் கவனமெல்லாம் குழந்தைகளின் மேல்தான் அதிகம் இருக்கும். தாம்பத்யத்தில் அவர்களுக்கான சரியான சூழல் அமையாது. அதை புரிந்து கொண்டு அந்த இடைவெளியை போக்க அன்பால் நிறையுங்கள்.

Previous articleஇந்த மாதிரி மேட்டர் செஞ்சா ஆணுறுப்பு உடையும் அபாயம் இருக்கு ஜாக்கிரதை!
Next articleமுதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – செத்தாண்டா சேகரு!