Home அந்தரங்கம் ஓரினச் சேர்க்கையும் லெஸ்பியனும் தோன்றியது எங்கு? எப்போது?

ஓரினச் சேர்க்கையும் லெஸ்பியனும் தோன்றியது எங்கு? எப்போது?

50

ஓரினச் சேர்க்கையும் லெஸ்பியனும் தோன்றியது எங்கு? எப்போது? வரலாறு கூறும் அரிய தகவல்கள் தமிழில் ஓரினச் சேர்க்கை என்பது ஆங்கிலத்தில் Homo sexuality என ப்படுகிறது. கிரேக்க மொழியில் ‘Homo’ என்றால் ஒரே மாதிரியான வை என்று அர்த்தம். ‘ஹோமோ செக்ஸ்’ என்ற பெயரை முதன்முதலில் 1869ல் ஜெர்மன் உளவி யல் நிபுணர் ‘கார்ல் மரியா பென் கெர்ட்’ என்பவர்தான் பயன்படு த்தினார். அதற்கு முன் பல பெயர்களில்
ஓரினச் சேர்க்கை அழைக்க ப்பட்டது. பொதுவாக ஓரினச் சேர்க்கை என்று சொல்லப் பட்டாலும் ஆணும் ஆணும் கூடுவதற்கு ‘ஹோமோ செக் ஸுவாலிட்டி’ என்று பெயர்.

 

அதுவே பெண்ணும் பெண் ணும் கூடினால ‘லெஸ்பிய ன்’ (lesbian) என்று குறிப்பிடப்படுகிறது. ‘லெஸ்பியன்’ என்ற வார் த்தை எதிலிருந்து வந்தது? கி.மு. 7ம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ‘ஸாப்போ’ என்ற கவிஞர் ‘லெஸ்போஸ்’ (Lesbos) எனும் தீவில் வசித்து வந் தார். இந்தத் தீவில் ஒரு பெண் இன்னொரு பெண் ணைப் பார்த்து ‘ஒரு பெண் ணின் மனதைத் தொட்டுப் போனவளே… ’ என்று பாடு வது சகஜம். ஆம், பெண் ணும் பெண்ணும் கூடி வாழ்வது இங்கு சகஜமாக இருந்தது. பெண்களின் இந்தக் கூடல் சங்கமத்தை, ஸாப்போவின் பேனா தித்திப்பாக வர்ணித்து எழுத, உலகம் முழுவதும் பிரபலமாகிப் போ னது லெஸ்போஸ் தீவு. இதனால் பெ ண்ணும் பெண்ணும் இணை சேர்வத ற்கு ‘லெஸ்பியன்’ என்ற பெயர் வந்தது.
மனிதன் தோன்றி வளர்ந்த ஆதி நாளி லிருந்தே ஓரினச் சேர்க்கையும் மனி த சமூகத்தில் இருந்து வந்திருக்கிற து. கிரேக்க தத்துவ ஞானி ‘பிளாட்டோ’ தன்னுடைய ‘symposium’ எனும் நூலி ல், ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள்தான் சிறந்த போர்வீரர்களா க முடியும்’ என்று எழுதியுள்ளார். கி ரேக்கப் புராணத்தில் பல கடவுள்களு ம் ஹீரோக்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குறிப்பி டப்பட்டுள்ளது.

 
அந்நிய தேசத்தின் மீது படையெ டுக்கும் எகிப்திய போர் வீரர்கள், தங்களிடம் தோற்கும் அயல் நாட் டு வீரர்களுடன் ஓரினச் சேர்க்கை யில் ஈடுபடுவது, அந்நாட்களில் மிக மிக சாதாரண விஷயமாக இருந்திருக்கிறது.
கிறிஸ்து பிறப்புக்கு முன்பு வரை ரோம் நாட்டில் ஓரினச் சேர்க்கை யை சமுதாயம் தவறாக நினைக் க வில்லை. இந்த உறவுக்கு சமூக அங்கீகாரம் மட்டுமில்லை… சட்டரீதியான அங்கீகாரம்கூடதரப்பட்டிருந்தது. ரோமானிய மன் னர்களான நீரோ, கலிகுலா போன்றவர்கள் ஓரினச் சேர்க்கை யை ஆதரித்ததுடன் அதில் லயிப்பு டன் ஈடுபட்டும் வந்திருக்கிறார்கள்.

 

ஆனால், கிறிஸ்து பிறப்புக்குப் பின்னர் நான்காம் நூற்றாண் டில் ஓரினச் சேர்க்கை மீதான சமுதா யத்தின் கருத்தில் மிகுந்த மாற்றங் கள் நிகழ ஆரம்பித்தன. குறிப்பாக, ஆசனவாய் வழியாக செக்ஸில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் வலுப் பெற்றது. ‘ஆசன வாய் வழி யே செக்ஸில் ஈடுபட்டு சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு இல்லாத போது ஏன் அதில் ஈடுபட வேண்டு ம்?’ என்ற எண்ணம் வலுவடைய ஆரம்பித்தது. காலக் கழிவில் கிறி ஸ்தவ மதம் தோன்றி அது உலகெங்கும் பரவ ஆரம்பித்த காலத் தில், ‘ஹோமொ செக்ஸ்’ குறித்த எதிர்மறையான கருத்துகள் கிள ம்ப ஆரம்பித்தன.

 

அதேசமயம், மறுமலர்ச்சி காலத்தில் மாபெரும் Sistine chapel சிற்பியும் ஓவியனு மான மைக்கேல் ஏ ஞ்சலோவும் இன்னு ம் சில ஓவியர்களும் புகழ்பெற்ற ‘சிஸ்டை ன் சேப்பல்‘ (Sistine chapel) தேவாலயத் தின் நீண்ட சுவர்களி ல் ஆடையில்லாத ஆண்களையும், ஆ ண் உறுப்புகளையு மே வரைந்து ஓரினச் சேர்க்கைப் பற்றிய தங்களின் ஆதரவை மறைமுகமாகத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட தனது புகழ்பெற்ற கவி தைகளில், நாடகங்களில் ஆணின் உறுப்புகளை அழ காக வர்ணித்து எழுதியிரு ப்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டு ம். ‘ஜான் பாஸ்வெல்’ என்ற வரலாற்று ஆசிரியர், ‘கிறி ஸ்டியானிட்டி சோஷியல் டாலரன்ஸ் அண்ட் ஹோ மோ செக்ஸுவாலிட்டி’ என் ற நூலை எழுதினார். இதில் ‘கிறிஸ்தவ மதம் ஆரம்பத் தில் ஹோமோ செக்ஸை எதிர்க்கவில்லை, ஏற்றுக் கொண்டுதான் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

செயின்ட் அகஸ்டின், செயின்ட் தாமஸ் ஆக்வீனாஸ் என்ற இரண் டு மத குருமார்கள், ‘எந்த விதமான செக்ஸ் செயல் பாட்டில் ஈடு பட்டால் குழந்தை பிறக்கிறதோ அதுதான் சமுதாயத்துக்கு நல்லது. அதுதான் இயற் கை யானதும்கூட. இதற்கு மாறாக குழந் தை பிறக்க எந்தவித வாய்ப்புமில்லாத நி லையில் செக்ஸில் ஈடுபடுவது பாவம்.அது இயற்கைக்குப் புறம்பானது’ என்று குறிப் பிட்டா ர்கள்.

 
அப்போது சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆசாமிகளாக இருந்தவர்கள், இந்த மத குருக்களின் கருத்துகளை ஏற்றுக் கொண் டதுடன் அவற்றைத் தங்களுக்கு சாதகமாகவும் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தங்களை எதிர்ப்பவர்கள் குற்ற மற்றவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது ஓரினச் சேர் க்கையில் ஈடுபட்டார்கள் என்ற முத்திரையைக் குத்தி அவர்க ளுக்கு அபராதம் விதிப்பது, சிறையிலடைப்பது, துன்புறுத் துவது போன்ற காரியங்களில் ஈடுபட்டார்கள். இதன் காரண மாகஅக்கால கட்டத்தில் ஓரின ச் சேர்க்கை என்பது வெறுப்புக் குரிய கீழ்த்தரமான செயலாக மக்கள் மத்தியில் பதிந்து போனது.

 
ஓரினச் சேர்க்கையில் ஈடுப டுவது பாவம், மாபெரும் தவ று என்ற மதரீதியான பார் வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல், பத்தொன்பதாம் நூற் றாண்டில் மருத்துவ உலகமு ம் ஓரினச் சேர்க்கை தவறா னது என்று சொன்னதுடன், இதுவொரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக, ‘கிராஃப்ட் எபிங்’ என்னும் செக்ஸுவாலஜிஸ்ட் 1886 ல், மருத்துவ பாடநூல் ஒன் றை எழுதினார். இதில் ‘ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும், இத்த கைய புணர்ச்சியில் ஈடுபடு வது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழு தியிருந்தார். அப்போது, இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மனநோயாகவே கருதியது.

 
ஹோமோ செக்ஸ் தவறா, இல்லையா என்பது பல காலமாக நீண்டவிவாத மாக இருக்க, ஃபிரான்ஸ் சக்கரவர்த்தியாக ஐரோப் பி யாவை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நெப்போ லியன், 1804ல் வயதுக்கு வந்த இருவர் விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் போட்டான். இதுதான் சரித்திரத்தில் முதல் சட்டம்!
அடுத்தகட்டம், 1957ல் இங்கிலா ந்தில் ஒரு கமிட்டி போடப்பட் டது. இந்த கமிட்டி ஓரினச் சேர்க் கையைப் பற்றி கள ஆய்வு செய் து, ஒரு அறிக்கையைத் தயாரித் தது. இதற்கு ‘வுல்ஃபென்டன் ரிப் போர்ட்’ என்று பெயர்.

 

இந்த அறி க்கையில், ‘வயதுக்கு வந்த இர ண்டு பேர் எந்தவிதமான செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தவறே கிடையாது. விருப்பமின்றி எந்தவிதமான செக்ஸ் நடவடி க்கையில் ஈடுபட்டாலும் அது தவறே’ என்று சொல்லப்பட்டிருக்கி றது. இந்த அறிக்கை எந்த வகையான செக்ஸ் உறவு என்பதைவிட விருப்பத்துக்கே முதலிட மும் முக்கியத்துவமும் கொடுத்தது குறிப்பிட த்தக்கது.

 
அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல எழுத்தாளர்களுக்கு, கவிஞர் களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு, ஓவியர் களுக்கு ஓரினச் சேர்க்கையைப் பற்றி நல்ல எண்ணம் இருந்திருக்கிறது. என்றாலும், தங்களின் ஆதரவுக் கரு த்தை நேரடியாக மக்கள் மன்ற த்தில் சொல்லாமல், மறைமுக மாகவே வெளிகாட்டி வந்தனர். வெளிப்படையாகச் சொன்னா ல் சமுதாயம் தங்களை இழிவா கக் கருதி விடுமோ என்ற அச் சமும், அதுவரை தாங்கள் பாடு பட்டு தேடி வைத்திருக்கும் புக ழு க்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற தயக்கமும் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.

 
1969ல் அமெரிக்காவில் மான்ஹாட்டன் நகரத்தில் ஓரினச் சேர்க்கைக்கு என்றே ஒரு கேளிக்கை விடுதி இருந்தது. இந்த விடுதியில் போ லீஸ்காரர்கள் திடீரென்று ஒரு நாள் ரெய் டு நடத்தி அங்கிருந்தவர்களை எல்லாம் கைது செய்தார்கள். இந்த ரெய்டை எதிர்த்து ஹோமோ செக்ஸ் விரும்பிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வீதிகளில் தெரு முனைக் கூட்டம் போட்டு ‘ஓரினச்சேர்க் கையை தவறாக நினைக்காதீர்கள்’ என் று கோஷம் போட்டார்கள். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் அப்போது மிகுந்த அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சி மிக மிக முக்கியமானதாகக் கருதப்பட காரணம் உள்ளது. அது நாள் வரை ஓரி னச் சேர்க்கைக்கு மறைமுகமாக ஆதரவு தந்த ஓரினச் சேர்க்கை யாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, வீதிக்கு வந்து பகிரங்க மாகப் போராட வை த்தது இச்சம்பவம்.

 

ஓரினச் சேர்க்கைக் கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்று வெளிப்படை யாக மக்கள் தெரிந் து கொள்வதற்கு வா ய்ப்பாக அமைந்தது. அதோடு ஓரினச் சேர்க்கை குறித்த அமெரிக்க அரசின் கருத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்தது! 1979ல், ‘ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவர்களை சமூகம் ஒதுக்கக் கூடாது. மற்றவர்களைப் போ ல் இவர்களும் சமமானவர்க ளே’ என்று முப்பத்தொன்பது அமெரிக்க நகரங்களில் அர சாங்கமே சட்டம் கொண்டு வந்தது. இது ஓரினச் சேர்க் கை சம்பந்தப்பட்ட விவாத வர லாற்றில் ஒரு திருப்பு முனை! மனித உயிர்களிடத்தில் காண ப்படும் இந்த ஹோமோசெக்ஸ் பற்றிய பார்வை இந்தியாவில் எப்படி இருந்தது? கிறிஸ்தவ மதமும், மேலை நாடுகளும் ஓரினச் சேர்க்கை பற்றி அந்தக் காலத்தில் எவ்வகை யான கண்ணோட் டம் கொ ண்டிருந்தன என்று சென்ற இதழில் பார்த்தோம்.

 

அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முந்தைய காலகட்டத்திலும், ஓரினச் சேர்க்கை குறித்து நம் இந்திய தேசத்தில் எந்த விதமான அபிப்பிராயங்கள் நிலவின? இந்தக் கேள்விக்கான பதில் நிச்சயம் உங்களை ஆச்சர்யப்படுத்தும்!
கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் வந்து நம்மை அடிமைப்படு த்திய ஆங்கிலேயர்கள் வரு கைக்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபணை க்குரிய உறவாகவோ, பாவக ரமான குற்றமாகவோ இந் திய தேசம் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், நம் பழங்கால நூல் களில் ஓரினச்சேர்க்கை பற்றி நிறைய சொல்லப் பட்டிருக்கிறது. மனுதர்ம சாஸ் திரத்தில்கூட தண்டிக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லப்படவில்லை. ஓரினச் சேர்க்கை என்பதை எதிர்க்கவு ம் செய்யாமல் ஆதரிக்கவும் செய்யாமல், உறவுகளின் விசித் திரங்களில் இதுவும் ஒன்று என்ற மனோநிலையில்தான் நம் மூதாதையர்கள் இருந்திருக்கின்றனர்.

 

இதற்கு சரியான எடுத்துக்காட்டு, ‘ஓரினச் சேர்க் கையில் ஈடுபட்ட பிறகு அதில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும்’ என்று மனுதர்மம் சொ ல்வதுதான்! இந்திய நீதி நூலாசிரியர்கள்கூட ஓரினச் சேர்க் கையைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைத் தங்கள் நூல் களில் குறிப்பிடவில்லை. ஒரு விஷய த்தை முக்கியமாக யோசிக்க வேண்டு ம்.
மனுதர்ம காலம் என்பது வேத காலம். வர்ணங்களின் அடிப்படையில் மக்க ளைப் பேதப்படுத்தி ஏற்றத்தாழ்வுகளு ம், புறக்கணிப்புகளும் மண்டிக்கிடந்த அந்தக் காலத்தில் கூட ஓரினச் சேர்க் கையைப் பற்றிய தவறான கண்ணோ ட்டம் இருந்ததில்லை என்பதுதான் அந்த முக்கியமான விஷயம். ஆனால், வாத்ஸ்யாயனரின் ‘காமசாஸ்திர’த்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திரும ணம் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை இ த்தருணத்தில் சுட்டிக் காட்டியே தீரவேண்டும்.

 

அக்காலத்தில் எட்டு வகையான திருமணங்கள் நடைமுறையில் இருந்திருக்கி ன்றன. அவற்றில் ‘காந்தர்வ விவாஹம்’ என்றழைக்கப் பட்ட காதல் திருமணமும் ஒ ன்று. வாத்ஸ்யாயனர் குறி ப்பிடும் இந்தக் காந்தர்வ வி வாஹ முறைப்படி ஒரு ஆணு ம் ஒரு பெண்ணும் மட்டுமல் ல, ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்கூட இணை சேரலாம்! பதினேழு, பதி னெட்டாம் நூற்றாண்டு வரைக்கும்கூட இந்தியாவில் ஓரினச் சேர்க்கை ஒரு பிரச்னை யாகவே கருதப்படவில் லை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்யத் துவங்கிய பிறகுதான் ஓரி னச்சே ர்க்கை என்பது மிக ப்பெரிய பிரச்னையாகக் கருதப்பட்டது.
ஆங்கிலேயர்கள் தங்களி ன் பயன்கருதி, அந்நாளைய சூழல்களுக்கு ஏற்ற வகையில் சட்ட விதிகளை உருவாக்கி ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் Lord Macaulay சுமத்தினார்கள் என்பது மறை க்கவும், மறுக்கவும் முடியாத வரலாறு. 1837ம் ஆண்டில் மெக்காலே (Lord Macaulay) என்ற அதிகாரவர்க்கத்தின் பிர திநிதியான ஆங்கிலேயரால் தான், முதன்முதலாக இந்திய சட்டவிதிகள் (இந்தியன் பீனல் கோட்) தயாரிக்கப்பட்டது. இதன்படி இ.பி.கோ. செக்ஷன் 377ல் ‘ஹோமோ செக்ஸ் இயற்கையான வழிமுறை களுக்கும், இயல்பான செக்ஸ் செயல்பாடுகளுக்கும் எதிரான து’ என்று சொல்லப்பட்டு, தண்டனைக்குரிய ஒரு குற்ற மாக அறிவிக்கப்பட்டது.

இந்திய சட்டம், ஹோமோ செக்ஸைக் குற்றமாகக் கருது வது ஒருபுறமிருக்கட்டும். ஒரு மனிதன் ஏன் ஓரினச் சேர்க் கையில் ஈடுபடுகிறான்? இது அவ்வளவு சுலபத்தில் பதில் சொல் ல முடியாத கேள்வி.