Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தின்போது ஏற்படும் கால்வலியைச் சமாளிக்க சில குறிப்புகள்

கர்ப்பத்தின்போது ஏற்படும் கால்வலியைச் சமாளிக்க சில குறிப்புகள்

24

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கால் வலி ஏற்பட என்ன துல்லியமான காரணம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை! கால் தசைகள் கூடுதல் சுமையைத் தாங்குவதால் வலி ஏற்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர். கருப்பை கால்களுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களை அழுத்துவதால் வலி ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.என்ன காரணமாக இருந்தாலும், கர்ப்பத்தின்போது பெரும்பாலும் எல்லோருக்குமே, பொதுவாக இரவில் கால் வலி ஏற்படுவது உண்மையே.

இவற்றைத் தடுக்க சில குறிப்புகள்:

அதிக நேரம் நிற்பதையும் கால்களை குறுக்கே போட்டபடி அமர்ந்திருப்பதையும் தவிர்க்கவும்.
பகலில் அவ்வப்போதும், தூங்கச் செல்லும் முன்பும், கெண்டைக்கால் தசைகளை நீட்டி பயிற்சி செய்யுங்கள்.
தினமும் நடைபயிற்சி செல்லுங்கள். மருத்துவர் வேண்டாம் என்று கூறினால் மட்டும் இதைத் தவிர்க்கவும்.
உட்கார்ந்திருக்கும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது அல்லது நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடும்போது கணுக்காலைச் சுழற்றுங்கள், கால் விரல்களை நீட்டி, மடக்கி, அசைத்துப் பயிற்சி செய்யுங்கள்.
ஒரே மூச்சாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.தினசரி செய்யும் எந்த வேலையிலும், அடிக்கடி இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள்.
தூங்கச் செல்லும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம் அல்லது கால்களை மட்டுமாவது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் நனைத்திருந்து விட்டு தூங்கச் செல்லலாம். இது கால் தசைகளைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தும்.
மக்னீசிய சத்து மருந்துகள் எடுத்துக்கொள்வது, கால் வலியைக் குறைக்க உதவலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.
எனினும், கர்ப்பத்தின்போது கூடுதல் சத்து மருந்துகள் எதையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்துகொள்ள வேண்டியது முக்கியம்.