Home ஆண்கள் 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு

45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு

85

ஆண்மை பெருக்க:அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்

அற்புதமான, அருமையான‌ இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு

ஆணுக்கும் தனக்கென ஒருவாரிசை பெற்றுக்கொள்ள வேண்டும்; தான் இறந்தபிறகும்கூட தன் பிரதிபலிப்பு, தன் வம்சத்தின் வேர் வளர வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கும். ஆனால், ஒரு பெண்ணை மணந்து தனக்கான வாரிசை உருவாக்கிக் கொள்ள பல அடிப்படை தகுதிகள் ஆண்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படு கிறது.

ஆண்களின் வயது அதிகரிப்பதால், ஆண்மையில் தடை ஏற்படுமா?

எந்தவித தகுதியும் காட்டாமல் தனது ஆண்மையை நிரூபிக்க பல இடங்கள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும், தனக்கென ஒரு குழந் தை மற்றும் குடும்பம் என்பதை அமைத்து வாழ்வதையே சமூகம் நல்ல முறையில் ஏற்கிறது; அதுவே நிரந்தரமும் கூட. இப்பொழுது இப்படி ஒரு குடும்பத்தை அமைக்க ஆணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.!

ஆணுக்கான தகுதி!

ஒரு ஆண் நல்ல கை நிறைய சம்பளம் வாங்கி, தான் மணந்து கொள்ள போகும் பெண், பிறக்க போகும் பிள்ளை என அனை வரையும் வைத்து வாழ்வில் காப்பாற்றும் அளவு தகுதியுடன் இருக்கிறாரா? என்பது கண்டிப்பாக பார்க்கப்படுகிறது; இந்த தகுதி ஆண்களுக்கு ஏற்பட்ட பின்னரே அவருக்கு பெண் பார்த் து மணம் முடிக்க பெற்றோரும், பெண் ( Female / Women / Girl / Lady ) கொடுக்க மற்றோரும் தயாராகின்றனர். இந்த ஒரு தகுதியை ஆண்கள் குடும் பம் அமைத்து வாழ, தனக்கு ள் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது!

வயது பறந்து விடும்!

ஆனால், இப்படிப்பட்ட ஒரு தகுதியை உருவாக்கிக் கொள்வதற்கு முன், ஆணின் வாலிபம் மற்றும் வயது பறந்து ஓடி, முதுமை வந்து ஆணை தஞ்சமடைய தொடங்கிவிடும். ஒரு சில ஆண்களுக்கு மட் டும் தான், வாலிப வயதிலேயே இந்த தகுதியை பெற்று திருமணம் வாய்ப்பு கிடைக்கிறது; மற்ற அனைத்து ஆண்களும் இருபதுகளின் முடிவில், முப்ப தின் தொடக்கத்தில் தான் இந்த தகுதியை ஓரளவாவது பெற்று, திருமணம் செய்து கொள்கின்றனர்!

என்ன பயன்?

வயதும் வாலிபமும் அழிந்துபோகும் நிலையில் திருமணம் செய்து என்ன பயன்? ஆம் நண்பர்களே! சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி ல் ஆண்கள் 30வயதை எட்டியபின் 30வயதிற்கு பின்னான ஒவ்வொரு வருடமும் ஒரு சதவிகிதம் ஆண்மை ( Sex ) அவர்களில் இருந்து குறை வதாகவும், சில ஆண்களில் இந்த ஆண்மை குறைவு 35 வயதிற்குமேல் தொடங்குவ தாகவும் கண்டு அறியப்பட்டு உள்ளது.

விந்து திரவம்!

30 வயதிற்குபின், ஆண்மை குறைகிறது என்று கூறுவது விந்து ( Sperm ) அணுக்களின் எண்ணிக்கை குறைவதைதான். ஆனால் மே லும் ஒருவியப்பான விஷயம் ஆண்களின் உடலில் நடக்கிறது, அது தான் விந்து திரவம் குறைதல். என்னதான் விந்து அணுக்கள் அதிகமாக இருந்தாலு ம், அவற்றை சரியாக பெண்ணின் கருப்பை ( Uterus )யில் அண்டத்திடம் சேர்ப்பது இந்த விந்து திரவம் தான்.

அப்படிப்பட்ட இந்த திரவம் 25வயதிலேயே ஆண்களுக்கு குறைய ஆர ம்பிக்கிறது. ஆண்கள் 55வயதை அடையும்பொழுது, அவர்தம் உடலில் இருந்து 50சதவிகிதம் குறைந்துவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.

மாற்றங்கள் நிகழலாம்!

30வயதை தாண்டிய ஆண்களின் தம்பதிய வாழ்க்கையிலும் சரி, அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் சரி விரும்பத்தகாத பல மாற்றங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது; அதாவது கருக்கலை ப்பு, கரு உருவாகாமல் இருத்தல் தாம்பத்தியத்தில் சந்தோசம் இன் மை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் 30 வயதிற்கு மேல் குடிப்பழக்கம், புகை மற்றும் பிற பழக்கங்கள் இருந்தால், அப்பாவாக மாறு வது என்பது மிகவும் கடினமாகி விடலாம்.

வயதை தவிர வேறு காரணம் உண்டா?

ஆண்மை குறைவு ( Masculinity Decrease ) ஏற்பட வயது மட்டுமே ஒரு காரணம் அல்ல; நாவு பழக்கம், புகை ( Smoking ) மற்றும் மது ( Hot Drinks ) பழக்கம், உடற்செயல்பாடு, மரபு அதாவது தலை முறை மற்றும் மன அழுத்தம் ( Stress )போன்ற விஷயங்கள் கண் டிப்பாக ஆண்களில் ஆண்மை குறைவு ( Masculinity Decrease ) ஏற்பட சில முக்கிய காரணங்களாக உள்ளன! இந்த காரணங்களை அறிந்து, ஆண்கள் திருத்தி கொண்டால் மட்டுமே அவர்களால் அப்பாவாக முடியும்.

சில உண்மைகள்!

45 வயதிற்கு பின் ஆண்கள் மணம் புரிந்து கொண்டால் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள முயன்றால், அப்பொழுது கண்டிப்பாக பெண்களில் கரு க்கலைப்பு ஏற்படு ம்; கரு அவர்களின் வயிற்றில் தாங்காது. ஏனெனில் வயது முதிர் ச்சியின் காரணமாக, விந்து அணுவும் வயது முதிர்ந்து செயல்பா ட்டினை இழந்துவிட்டு இருக்கும். மேலும் அதனைமீறி குழந்தை பிறந்தால் கண்டிப்பாக குழந்தைக்கு ஆட்டிசம் ( Autism), மனநலம் பாதிப்பு போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சரியான வயது எது?

ஆண்கள் குழந்தை பேரருட்கொள்ள மிகவும் சரியான வயது என்பது 22 முதல் 25 வயது வரையிலான காலக்கட்டம்தான். இச் சமயத்தில் தான் ஆண்களின் ஆண்மை மிகச்சரியான நிலையி ல் இருக்கும்; குழந்தை பிறப்பும் ( Child Birth )விரைவில் நடக்கும்; குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்! மேலும் 25 வயதில் ஆண் கலவி ( Sex ) கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்தால் நான்கரை மாதங்களில் கருத்தரித்தல் ( Fertilization ) நிகழ வாய்ப்புண்டு; இதுவே 45 வயது ஆண் முயற்சித்தால் கரு உருவாகவாக 2 ஆண்டுகள் தேவைப்படலாம்.

மருத்துவ கலந்தாய்வு!

ஆண்கள் தங்களின் ஆண்மை குறித்த விவரம் மற்றும் நிலை அறிந்துகொள்ள ஒரே வழி மருத்துவரை நாடி பரிசோதனை செய்துகொள்வதுதான். ஆண் களின் ஆண்மை குறைவு தாம்பத்தியத்தில் சந்தோசம் இல்லாத பொ ழுது, குழந்தை பிறக்காத பொழுதுதான் தெரியவரும்; அப்பொழுது வயது கடந்து போய் இருக்கும். அந்த ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பின் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம்.

மலடி பட்டம் வேண்டாம்!

ஆகையால் திருமணம் ( Marriage / Wedding ) அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதற்கான திட்டமிடல் செய்யும்பொழுதே மருத்துவ பரிசோதனை செய்து உங்கள் உடலின்நிலைபற்றி அறிந்து செயல் பட்டால் நிகழ்வுகளை உங்கள் வசதிக்குஏற்ப மாற்றி அமைக்கலா ம். மேலும் குழந்தை பிறப்பு நிகழாமல், தடைபட்டு போனால் பெண் கள் மட்டுமே முழுக்க முழுக்க காரணமல்ல, ஆண்களிலும் பிரச்ச னை இருக்கலாம் என்று புரிந்துகொண்டு, இனி மேலாவது பெண்க ளை மலடி என்று பட்டம் கட்டி காயப்படுத்த வேண்டாம் என்ற சிறு வேண்டுகோளை உங்கள் முன் வைத்து, பதிப்பினை நிறைவு செய்கிறேன்!