Home பாலியல் இந்தியாவில் கட்டில் உறவு பற்றி பல விதமான கட்டுக்கதைகள் பற்றி தெரியுமா?

இந்தியாவில் கட்டில் உறவு பற்றி பல விதமான கட்டுக்கதைகள் பற்றி தெரியுமா?

197

Indian House Wife:இந்தியாவில் செக்ஸ் பற்றி பல விதமான கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. அது என்ன என்பது பற்றியும், அதன் உண்மையையும் கண்டறிவோம்.

இந்தியாவில் உடலுறவு என்பது, பொதுவெளியில் பேசக்கூடாத ஒன்று என்பதால், அதைப் பற்றி பல கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, வயது வந்த அனைவருக்கும் பாலியல் ரீதியாகவும் உடலுறவுப் பற்றியும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். ஆனால், இந்த சந்தேகங்களை வெளிப்படையாக கேட்பதற்கு அனைவருக்கும் தயக்கம் உள்ளது. இதைவைத்து, ஒரு சிலர் மக்களை பயமுறுத்தி பணம் சம்பாத்திக்கும் வேலைகளும் நடக்கின்றன.

அதிலும், இந்தியாவில் செக்ஸ் பற்றி பல விதமான கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன. அது என்ன என்பது பற்றியும், அதன் உண்மையையும் கண்டறிவோம்.

பொதுவாக ஆண்குறி பெரிதாக இருந்தால்தான், அதில் சுகம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆனால், அது உண்மை இல்லை. பெண்ணின் உறுப்பின் உள்ளே 4 செ.மீ வரை தான் உணர்ச்சி நாளங்கள் உள்ளன. அதைத் தாண்டி, உணர்வுகள் இல்லை என்பதால், ஆணின் அளவு மிகவும் பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதைவைத்து, பலரும் வியாபாரம் செய்கிறார்கள்.

ஆப்ரோடிசியாக் சாப்பிட்டால் செக்ஸ் உணர்வு அதிகரிக்குமா?

ஆப்ரோடிசியாக் என்ற லவ் டிரக் மார்க்கெட்டில் உள்ளது. அதை சாப்பிட்டால், உடலுறவு உணர்வு அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால், அதுபோன்று எதுவும் இல்லை.

ஆண்கள்தான் செக்ஸ் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள்

இது காலகாலமாக இருக்கும் ஒன்று. பெண்களை விட ஆண்கள்தான் செக்ஸ் பற்றி அதிகம் சிந்திப்பார்கள் என்று கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஆண்கள் அளவிற்கு பெண்களும் செக்ஸ் பற்றி சிந்திப்பார்கள். அதேபோல், ஆண்கள் தான் முதலில் எப்போதும் பெண்களிடம் நெருங்கி வருவார்கள் என்று கூறுவதுண்டு, சில நேரங்களில் பெண்களும் அதை செய்வார்கள்.

பெண்கள் அந்த மாறி படங்களைப் பார்க்க மாட்டார்கள்

ஆண்களைப் போல பெண்களும் அதுமாதிரியான படங்களைப் பார்ப்பதுண்டு. ஆனால், அவர்கள் வெளிப்படையாக அதை சொல்வதில்லை.

வாய்வழி புணர்வில் சுகம் இல்லை என்றால் பிரச்சனையா?

சில நேரங்களில் வாய்வழிப் புணர்வில் ஈடுபடும்போது, பெண்களுக்கு எவ்வித உணர்வுகளும் தோன்றாது. இதைப் பலர் பிரச்சனை என்று கருதுகின்றனர். ஆனால், இது மிகவும் இயல்பான ஒன்று. எனவே, இதைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டியதில்லை.

பெண்கள் சத்தமிட்டால்தான் சந்தோஷம் என அர்த்தம்?

பெரும்பாலும் பெண்கள் உடலுறவின் போது, சத்தமிட்டால்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் எல்லா பெண்களும் அப்படியில்லை. சில பெண்கள் உடலுறவின் போது சத்தமிடவில்லை என்றாலும், அது அவர்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும்.