Home பெண்கள் அழகு குறிப்பு மழைக்காலம் வந்தாச்சு : சருமத்தை கவனிங்க !

மழைக்காலம் வந்தாச்சு : சருமத்தை கவனிங்க !

23

பருவ மழை காலத்தில் சருமத்தில் சில நோய்கள் தாக்கும். வறட்சி ஏற்படும் எனவே சருமத்தில் எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் பாத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சரும பாதுகாப்பிற்காக அவர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.

மழைக்காலத்தில் பூஞ்சை தாக்குதல் ஏற்படும். எனவே வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஆன்டிஃபங்கல் சோப், கிரீம், பவுடர் உபயோகிக்கலாம். தினசரி மூன்று முதல் நான்கு முறை முகம் கழுவ வேண்டும். இரவு நேரத்தில் ரோஸ்வாட்டர், கிளிசரின், தேன், பாதாம் எண்ணெய் போன்ற சருமத்தின் வறட்சியை தடுக்கக் கூடிய பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள்.

மழைக்காலத்தில் அதிகமாக தாகம் எடுக்காது. எனினும் தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். இது சருமத்தின் பிஹெச் பேலன்ஸ் சரியாக வைத்திருக்கும்

தண்ணீர் சத்து குறைவினால் வறண்ட சருமம் ஏற்படுபவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தினர் தயிர், தேன் கலந்து தோலில் பூசி குளிக்கலாம். இது தோலினை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். முகத்தை தினமும் கிளன்சர் கொண்டு கிளீன் செய்ய வேண்டும். வீட்டிலேயே பசும்பால் கொண்டு அதை லேசாக பஞ்சில் தொட்டு முகம் , கை, கால்களில் உள்ள அழுக்குகளை நீக்கலாம்.

மெதுவாக மைல்டாக ஸ்கர்ப் செய்ய வேண்டும். இறந்த செல்கள் உதிர்ந்து புதுப்பிக்க ஏதுவாகும். தினம் ஒருமுறை ஆல்பா ஹைட்ராக்சில் ஆசிட்டை தண்ணீரில் கலந்து முகம் கழுவுவதன் முகம் புத்துணர்ச்சி பெறும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து ஓட்சுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும்.

மழைக்காலத்தில்தான் தோல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தோலில் தேங்கியுள்ள அழுக்கினை உடனடியாக நீக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலத்தில் வியர்வை வழியாக அழுக்கானது வெளியேறிவிடும். மழைக்காலத்தில் அந்த வாய்ப்பு இல்லை என்பதால் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.