Home ஆண்கள் ஆணுறுப்பு எந்தெந்த வயசில் எப்படியெல்லாம் மாறும்…

ஆணுறுப்பு எந்தெந்த வயசில் எப்படியெல்லாம் மாறும்…

199

இயற்கையாக நிகழும் பல விஷயங்களைப் போலத்தான் ஆண்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆணுறுப்பில் உண்டாகும் வளர்ச்சியும் மாற்றங்களும். உங்களுடைய வாழ்நாள் முழுக்க உங்களுக்கு தெரியாமல் ஆணுறுப்பில் வளர்ச்சியில் மாற்றங்கள் உண்டாகிக் கொண்டே இருக்கும்.

இது உங்களுடைய டெஸ்ட்ரஜோனை சரியான முறையில் கட்டுப்படுப்படுத்துகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணுறுப்புகளின் வளர்ச்சி என்னென்ன மாதிரியாக இருக்கிறது. என்னென்ன மாற்றங்களை அடைகிறது என்று இங்கே பார்க்கலாம்

ஆண்கள் பருவமடைதல் பொதுவாக, ஒன்பதிலிருந்து பதினைந்து வயதுக்குள்ளாகவே பிட்யூட்ரி சுரப்பிகள் டெஸ்ட்ரஜோன் ஹார்மோன்களைச் சுரக்க ஆரம்பித்துவிடுகின்றன. இதுதான் கிட்டதட்ட ஆண்களின் பருவமடையும் தருணமாக இருக்கிறது. இந்த வயதில் தான் ஆணுறுப்பு, விதைப்பை, விரை, ஆணுறுப்பைச் சுற்றிலும் முடி ஆகியவை வேகமாக வளர ஆரம்பிக்கும் பருவம் இதுதான்.

டெஸ்ட்ரஜோன் 20 வயதிலிருந்து 40 வயது வரை மிக அதிக அளவில் டெஸ்ட்ரஜோன் சுரப்பு உண்டாகிறது. இந்த வயது வரையறையில் சில வித்தியாசங்களும் இருக்கும். 40 வயதைக் கடந்த பின், டெஸ்ட்ரஜோன் சுரப்பின்அளவ குறைய ஆரம்பிக்கும். ஆனால் முன்பைவிட, இந்த வயதில் தான் விந்துவில் அதிக அளவு புரோட்டீன் இருக்கும். செக்ஸ் ஹார்மோன் பைண்டிங் அதிகமாக இருக்கும். அதோடு டெஸ்ட்ரஜோன் உற்பத்தியின் அளவைப் பொறுத்து, அந்தரங்க உறுப்புகளில் பல்வேறு மாற்றங்கள் உண்மாகும்.

அந்தரங்கப் பகுதி முடி உடல் முழுக்க உங்களுக்கு இருக்கும் அளவு தான் பெரும்பாலும் அந்தரங்க இடத்திலும் இருக்கும். ஆனாலும் உடலில் உள்ள முடியைவிட அந்த இடத்தில் உள்ள முடி திக்காக தடிமனாக இருக்கும். அதோடு வயது ஏறஏற அந்த முடியின் நிறமும் கிரே கலராக மாறிக்கொண்டே போகும்.

ஆணுறுப்பின் அளவு வயது ஆக ஆக ஆணுறுப்பின் நீளமும் அதிகமாகிக் கொண்டே போகும் என்று சிறுவயதில் ஆண்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். அது அப்படியல்ல. பருவ வயதில் எப்போதும் விறைப்பத்தன்மை அதிகமாக இருப்பது இயல்பு. ஆனால் வயதாக ஆக நீளத்தில் பெரிதாக மாற்றம் ஏற்படுவதில்லை. நீளம் கறையவும் குறையாது. ஆனால் ஆணுறுப்பின் மேல்பகுதியான மேடு போன்ற அமைப்பில் உள்ள எலும்பு பெரிதாகவோ அல்லது அந்த இடம் அதிக சதைப்பற்றுடனோ இருந்தால் உங்கள் ஆணுறுப்பின் அளவு பார்ப்பதற்கு சிறியதாக இருப்பது போல் தோன்றும்.

ஆணுறுப்பின் வடிவம் சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் மேல்பகுதியில் ஒரு கூர்மையான கர்வ் இருப்பது போல் தோன்றும். இப்படி இருப்பது ஆணுறுப்பின் நீளம், சுற்றளவு, செயல்பாடு ஆகியவற்றையும் சேர்த்து பாதிக்கும். ஏனெனில் உடலுறுவின்போது ஆணுறுப்பில் வளைவு உண்டாகும். உறுப்பு முழுவதும் ரத்தம் சீராகவும் வேகமாகவும் பாயும். அப்போது நுனிப்பகுதியிலும் ரத்தம் பீறிட்டு வரும்.

விதைப்பை சிறிய அளவு ஆணுறுப்பாக இருந்தால் உற்பத்தி செய்யப்படும் விந்துவில் பாதிதான உறுப்பு வழி வெளியேறும். மீதி விதைப்பைக்குள்ளேயே தங்கிவிடும். இதற்கும் அதேபோல் உறுப்பு அடிக்கடி சுருங்கிப் போவதற்கும் கூட இந்த டெஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருப்பது தான் காரணம்.

விரை உடல் வெப்பநிலையை சீராக வைத்திருந்தால் விரையும் சீராக இருக்கும். 40 வயதுக்கு மேல் ஹைட்ரோ செல்களால் விரை சுருங்கித் தளர்ந்து ஆட ஆரம்பித்துவிடும். இப்படி இருப்பது சிலருக்குப் பிடிக்காது. அதனால் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, மசாஜ் போன்றவற்றின் மூலம் பராமரிப்பது நல்லது.