Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகளுக்கு தேவையான கலர் கலரான உணவுகள்!

கர்ப்பிணிகளுக்கு தேவையான கலர் கலரான உணவுகள்!

27

கருவுற்ற பெண்கள், முதல் மூன்று மாதங்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, போலிக் அமிலம், கால்சியம் சத்துள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பிரசவ காலத்தில் இரும்புச்சத்து அதிகம் தேவைப்படும் என்பதால் அதிக அளவு இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. கர்பிணிகள் தங்களின் உடலுக்குத் தேவையான சத்துக்களை பல வண்ண நிறங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் பெறமுடியும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆரோக்கியமான குழந்தையைப் பெற, இரும்புச்சத்து முக்கியமான ஊட்டச்சத்து. ப்ரூன்ஸ் பழங்களில் உள்ள இந்த ஊட்டச்சத்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான ஹீமோகுளோபினை அளிக்கிறது. இது ரத்தசோகையைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ப்ரூன்ஸ் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து இயற்கையாகவே உயர் ரத்த அழுத்தத்தைத் குறைக்கும் திறன் கொண்டது. இதில் கொழுப்புச்சத்துக்கள் இல்லாததால், எப்போது பசித்தாலும் சாப்பிடலாம்.

பச்சை நிறத்திற்கு பல காய்கறிகள், பழங்கள் உள்ளன. கீரைகளில் அதிக அளவில் வைட்டமின் சி, ஏ அடங்கியுள்ளன. இதில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ளது.கிவி பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி, சி அடங்கியுள்ளது இதுவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்த பழமாகும். புருக்கோலியில் உயர்தர கால்சியம் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ளது.

மஞ்சள், ஆரஞ்சு வர்ணத்திற்கு ஆரஞ்சு, கேரட், இனிப்பு உருளை போன்ற பழங்களை சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அடங்கியுள்ளது.

சிவப்பு நிற பழங்கள் காய்கறிகளுக்கு பெர்ரீஸ், தக்காளி பழங்களை உட்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள் ஏ, சி, அடங்கியுள்ளன. ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ளது.

ப்ளு, பர்ப்பில் நிறத்திற்கு ப்ளுபெர்ரீஸ் பழங்களை சாப்பிடலாம். இதில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ளது. வெண்மை நிறத்திற்கு வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் வைட்டமின் பி6, பொட்டாசியம் அடங்கியுள்ளது.

இதுபோன்ற பல வண்ண காய்கறிகளையும், பழங்களையும் சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.