Home உறவு-காதல் இன்பமான இல்லற வாழ்க்கைக்கு மனைவியை மயக்குங்கள்.

இன்பமான இல்லற வாழ்க்கைக்கு மனைவியை மயக்குங்கள்.

225

Young happy couple outdoors view from behind
இன்பமான வாழ்க்கை:இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம்.

மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க. பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்…..

மதித்தல்: வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும். பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.
கனவுகள்: பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன. அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.

வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள்: மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் (மல்லிகை பூ, அல்வா) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள்
உணர்வுகளை வெளிபடுத்துங்கள்: ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது
ஆலோசனைக் கேளுங்கள்: நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள். அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள்.
சமைக்க கற்று கொள்ளுங்கள்: பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பேசுங்கள் பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும்: எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல், பொருளாதாரம், ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள்.
மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள்: உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள். நண்பரே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா? நீங்கள் உங்கள் மாமியார் மாமனாரோடு மட்டும் ஒத்துபோகாதீர்கள். மனைவியின் மாமியார் மாமனார் அண்ணண், தங்கைகளை ரொம்பபப நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

Previous articleஆண்களே நீங்கள் பெண்களுக்கு பிடித்தவராக இருக்க இதை கவனியுங்கள்?
Next articleபெண்களை கட்டிலில் தொட முன் ஆண்களே இந்த தகவலை நினைவில் வையுங்கள்