Home உறவு-காதல் ஆண் vs பெண் – சமூகத்தில் இருவேறு கண்ணோட்டங்கள்

ஆண் vs பெண் – சமூகத்தில் இருவேறு கண்ணோட்டங்கள்

39

24-1450941447-7boysvsgirlsweirdperspectivesஇந்த சமூகத்தில் ஒருசில செயல்களை ஆண்கள் செய்தால் ஓர் பார்வையிலும், பெண்கள் செய்தால் வேறொரு பார்வையிலும் காணும் குணாதிசயம் இருக்கிறது. இதில் என்ன வியப்பு எனில், பெண்கள் செய்தால் நேர்மையாக பார்த்து, புகழ்ந்து பேசுபவர்கள், ஆண்கள் செய்தால் குற்றம் கூறுவது, எதிர்மறையாக பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இவை அப்படி ஏதும் பெரிய விஷயங்கள் அல்ல, பொது இடங்களில் நடக்கும் சில சாதாரணமான செயல்பாடுகள், சிரிப்பது, நண்பர்களுடன் அரட்டை, வெளியிடங்களுக்கு சென்று வருவது போன்ற செயல்கள் தான். ஆனால் இதை ஆண், பெண் என்று பிரித்து இருவேறு கண்ணோட்டத்தில் நமது சமூகம் எப்படி பார்க்கிறது என இனிக் காண்போம்.

பொது இடங்களில் சிரிப்பது
பொது இடங்களில் சத்தமாக பெண் சிரித்தால், அவள் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் என்று அர்த்தம். இதே ஓர் ஆண் அப்படி சிரித்தால் நற்பண்பு அல்லது சபை நாகரிகம் அற்றவன் என்று கூறிவிடுவார்கள்.

இனிமையாக பேசுவது
அனைவரிடமும் இனிமையாக பேசினால் அந்த பெண் அழகானவள், அன்பானவள் என்று கூறுவோர், அதே ஓர் ஆண் அப்படி பேசினால், அவன் மயக்க பார்கிறான், பெண்களிடம் ஜொள்ளு விடுகிறான் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

ஷாப்பிங்
ஓர் பெண் அடிக்கடி ஷாப்பிங் சென்றால், அந்த பெண் ட்ரெண்டியான பெண் என்று கூறும் இந்த உலகம், ஓர் ஆண் ஷாப்பிங் செய்தால் ஆடம்பர செலவு, வெட்டி செலவு, வீண் விரயம் என்று கூறுவது ஏனோ? (அதிகபட்சமா நாங்க வாங்குறதே அந்த ஜீன்ஸ் டி-ஷர்ட், அது ஒரு குத்தமா…)

அமைதியாக இருப்பது
பெண்கள் அமைதியாக இருந்தால் அவர்கள் கூச்ச சுபாவம் இருப்பவர்கள். அதே ஆண்கள் அமைதியாக இருந்தால் ஒன்று பேக்கு அல்லது கரடுமுரடான ஆள் என்று கூறிவிடுகிறார்கள். (ஏம்மா, சத்தமா சிரிச்சு பேசினாலும் குத்தம், அமைதியா இருந்தாலும் குத்தமா?? என்னமா நீங்க….)

நட்பு கூட்டம்
பொது இடங்களில் கூட்டமாக நண்பர்களுடன் பெண்கள் சென்றால், அவர்கள் கூட்டமாக செல்கிறார்கள் அவ்வளவு தான். இதுவே ஓர் ஆண் அப்படி சென்றால் அவர்கள் கும்பலாக செல்கிறார்கள், தொல்லை செய்கிறார்கள், இடைஞ்சல் என்றெல்லாம் கூறுவது நியாமாரே!!

தொட்டு பேசுவது
நட்பில் ஓர் ஆணை தொட்டு பேசினால் அது வெறும் நட்பு சாதாரணமான செயல்பாடு. இதுவே ஓர் ஆண் தன் தோழியை தொட்டு பேசினால், அத்துமீறல், அநாகரிகமான செயல் என்று இந்த சமூகம் கூறிவிடுகிறது.

கடைசியா என்ன சொல்ல வரீங்க…
எப்படி பார்த்தாலும் இந்த சமூகத்துல பாதிக்கப்படுறது ஆண்கள் தான் என்பதை மிக தாழ்மையுடனும், பணிவன்புடனும் தெரிவித்துக் கொள்கிறோம்!!!