Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் தொடை அழகை பெருக்கும் உடற்பயிற்சி

பெண்களின் தொடை அழகை பெருக்கும் உடற்பயிற்சி

91

பெண்கள் உடல் கட்டுபாடு:சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களின் தொடைப்பகுதியை அழகாக்கும் உடற்பயிற்சி
ஒரு சில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இதில் அவர்கள் எந்த உடை போட்டாலும் பார்க்க நன்றாக இருக்காது. இவர்கள் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கால் பகுதிகளில் உள்ள அதிகப்படியாக சதை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

அவ்வாறு நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அவை முறையே…. தரையில் ஒருக்களித்துப் படுத்துக்கொள்ளுங்கள். வலது கையை தலையின் அடியில் வைத்துக்கொண்டு இடது கையை மார்புக்கு நேரே தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள்.

வலது காலை ‘எல்’ வடிவத்தில் மடித்து வையுங்கள். மூச்சுக் காற்றை உள் இழுத்தபடி இடதுகாலை மேலே உயர்த்துங்கள். மூச்சுக் காற்றை வெளியே விட்டபடி காலைத் தரையோடு தரையாக இறக்கி விடுங்கள். இதேபோல் 10 தடவை செய்யுங்கள். நன்கு பழகிய பிறகு 25 முறை செய்யலாம். இதை ஒரு பக்கமாகச் செய்தால் மட்டும் போதும்.

இடது காலை உயர்த்தி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டியது இல்லை. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம்.

பலன்: இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை பலப்படுத்தும். பிரசவ நேரத்தில் முதுகு இடுப்புப் பகுதிகளில் ஏற்படும் சிறு வலிகளை தடுக்கும். தொடை இடுப்புத் தசைகளை இலகுவாக்கும். கர்ப்ப நேரத்தில் பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை விரட்டும்.