Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் தொப்பையை குறைக்கும் பயிற்சி

பெண்களின் தொப்பையை குறைக்கும் பயிற்சி

59

உடல்கட்டுப்பாடு:குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. பெரும்பாலானோர் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்திருப்பதால், கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யத் தயங்குவர். சின்னச்சின்னப் பயிற்சிகள் மூலமே, எடையைக் குறைக்க முடியும்.

கால் முட்டி தரையில் படாதபடி, பாதம் மற்றும் கை விரல்களைத் தரையில் ஊன்றியபடி இருக்கவும். இப்போது ஒரு கையால் உடலைத் தாங்கியடி, மற்றொரு கையை முன்னோக்கிக் கொண்டுசென்று தரையில் பதிக்கவும். பிறகு, மற்றொரு கையையும் முன்னே கொண்டுசென்று தரையில் ஊன்றவும். பிறகு, கால்களைப் பின்னே நீட்டவும்.

உடல் தரையில் படக் கூடாது. ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு, பழைய நிலைக்குச் சென்று, மெதுவாக கால்விரல்கள் மற்றும் முன்னம் பாதங்களில் எழுந்து நின்று, கைகளை உயர்த்தி இறக்கவும். ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று செட்களாகப் பிரித்து, ஒவ்வொரு செட்டுக்கும் 10 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: உடல் எடையைக் குறைக்க உதவும். இதயத் துடிப்பு சீராக இருக்க உதவும். நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

Previous articleஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்கும் அன்பின் அடையலாம்
Next articleஉடலுறவில் ஆண்களின் மனதை உறுத்தும் உடலுறவு தகவல்