Home உறவு-காதல் பெண் ஆணிடம் காதலை சொன்னால் பெண்ணின்மீது சந்தேகம் ஏற்பட காரணம்

பெண் ஆணிடம் காதலை சொன்னால் பெண்ணின்மீது சந்தேகம் ஏற்பட காரணம்

111

காதல் சந்தேகம்:நமது சமூகத்தில் ஒரு பெண் உறவு சார்ந்து எந்தவிதமான கருத்தை முன் வைத்தாலும் அது அவரது குணாதிசயங்களை, பாத்திரத்தை பாதித்துவிடுகிறது என்பதே உண்மை. ஆண்கள் செக்ஸ் பற்றி தம்பட்டம் அடித்தாலும் கண்டுக் கொள்ளாத இச்சமூகம். பெண் செக்ஸ் என்ற வார்த்தையை மெல்ல கூறினாலே கேடுகெட்டவள் என கூற ஒரு நொடியும் தாமதிப்பதில்லை. இது செக்ஸ்-ல் மட்டுமல்ல… என்பதே பெரும் வருத்தம். ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை வித்தியாசமாக வேண்டுமானாலும். ஆனால், அதே ஒரு பெண், தனக்கு பிடித்த ஆணிடம் காதலை தெரிவித்தால்… நண்பர் கூட்டம் டேய் மச்சான் உசாரு, எதுக்கும் யோசி.., அவளே வந்து சொல்றா? சரியாப்படல என நொட்டை பேச்சு பேசுவார்கள்.

ஒரு ஆண் பெண்ணிடம் ப்ரபோஸ் செய்யும் போது பெண்ணுக்கு ஏற்படும் அச்சத்திற்கும், ஒரு பெண் ஆணிடம் ப்ரபோஸ் செய்யும் போது அந்த ஆணுக்கு ஏற்படும் அச்சத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன…

ஏமாற்று… ஆண் ப்ரபோஸ் செய்யும் போது பெண்களுக்கு, “தங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ..” என்ற பர்சனல் அச்சம் தான் அதிகம். ஆனால், பெண்கள் ப்ரபோஸ் செய்யும் போது ஆண்களுக்கு அந்த பெண்ணின் பாத்திரம் குறித்தான அச்சம் தான் அதிகம் ஏற்படுகிறது. ஏன், ஒரு ஆணுக்கு கண்டதும் காதல் வரும் போது, ஒரு பெண்ணுக்கு கூடாதா? அதென்னய்யா உங்களுக்கு வந்தா இரத்தம், அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

சந்தேகங்கள்… கண்டதும் காதல் வந்து ஓர் ஆண் தன்னிடம் ப்ரபோஸ் செய்தால் அவன் யார், எவன் என்ற கேள்விகள் தான் பெண்கள் மனதில் சந்தேக கேள்விகளாக எழுகின்றன. ஆனால், ஒரு பெண் கண்டதும் காதல் வந்து ப்ரபோஸ் செய்தால், நடத்தை மீதான சந்தேகங்கள் அவள் மீது கேள்விக் கணைகளாக தொடுக்கப்படுகின்றன. உண்மையில் பல பெண்கள் தங்கள் காதலை தாமாக முன்வந்து கூறாமல் மறைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

மதிப்பற்ற சூழல்… ஒரு பெண் தானாக வந்து தன் காதலை தெரிவித்துவிட்டால் அந்த பெண்ணுக்கும் சரி, அந்த காதலுக்கும் சரி மதிப்பற்று போகிறது. அவளா தான வந்தா… என்ற மேம்போக்கு தனம் ஆண்கள் மத்தியில் உண்டாவதால்… பெண்கள் தங்கள் காதலை முதலாவதாக சொல்ல அதிகம் தயங்குகிறார்கள்.

சமநிலை பிறக்கும் வரை… ஆண், பெண் இருவரின் வாழ்க்கை நிலையும் இந்த சமூகத்தில் சமநிலையில் அமையும் வரை இந்த வேறுபாடு இருக்க தான் செய்யும். படித்த புத்திசாலி பெண்ணாக இருந்தாலும், காதலை முன் தெரிவிக்கும் போது அவள் முட்டாளாக்கப்படுகிறாள். அதற்கு காரணம் அந்த ஆண் மட்டுமல்ல, இந்த சமூகமும் தான்.

உணர்ச்சிகள்! நாம் பெண்களை எந்த உணர்வுகளையும் வெளிப்படையாக கூற விடுவதே இல்லை. அது, அழுகையாக இருக்கட்டும், சிரிப்பாக இருக்கட்டும், காதலாக இருக்கும் அல்லது செக்ஸாக இருக்கட்டும். அனைத்தும் ஆண்களின் கண்ட்ரோலில் தான் இருக்கிறது. ஆண்கள் எந்த உணர்ச்சியையும் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்தாலாம். ஆனால், பெண்களுக்கு அதற்கு உரிமை இல்லாமல் இருக்கிறது என்பது தான், இங்கே பல ஓவியாக்களின் காதல், ஆரவ்-களுக்கு விளையாட்டாக போக காரணம்.

தக்காளி, இரத்தம்! ஆண்களே! உங்களுக்கு வந்தால் இரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என நினைக்க வேண்டாம். மேலும், இன்றைய சூழலில் இரத்தத்தை விட, தக்காளி மிகவும் மதிப்பு உயர்ந்தது என்பதையும் மறந்துவிட வேண்டாம். காதல் என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் இருபாலினத்திலும் இருக்கிறார்கள். ஆனால், சதவீதம் என்று எடுத்துப் பார்த்தால், ஆண்கள் தான் மேலோங்கிக் காணப்படுகிறார்கள். ட்ரிகர் ஸ்டார்களின் பேச்சை கேட்டு ஓவியாக்களை சந்தேகித்த ஆரவ்களுக்கு பின்னாட்களில் புரியும் உண்மை காதல் கிடைப்பது எவ்வளவு கடினம் என்று. ட்ரிகர்களை நம்பாதீர்!!! ட்ரிகராகி ஏமாறாதீர்!!