Home ஆண்கள் பெண்மை குறைவு தாம்பத்தியத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது

பெண்மை குறைவு தாம்பத்தியத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது

197

ஆண்மை பெருக்க:படுக்கையறையில் சரியாக செய்லபட முடியவில்லை என்றால் அது பெரும்பாலும் ஆண்களின் பிரச்சினையாகத்தான் இருக்கும் என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. நமது சமூகத்தை பொறுத்த வரையில் பெண் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அவளிடம்தான் பிரச்சினை உள்ளது, அதேபோல தாம்பத்யத்தில் முழுதிருப்தி கிடைக்கவில்லை என்றால் பிரச்சினை ஆணிடம்தான் உள்ளது.

இந்த இரண்டுமே தவறான அதேசமயம் முரணான நம்பிக்கைகள். ஏனெனில் இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஆரோக்கியமான தாம்பத்யமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாகும். இதனை ஆண்மைக்குறைவு மட்டும்தான் பாதிக்கும் என்றில்லை, பெண்மைக்குறைவும் பாதிக்கும். பெண்மைக்குறைவு என்றால் என்ன? அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்மைக்குறைவு ஆண்மைக்குறைவு என்பது ஆணுறுப்பின் விறைப்பு குறைவு, உயிரணுக்களின் உற்பத்தி மற்றும் தரம் போன்றவற்றில் உள்ள குறைபாடு மூலம் அறியப்படுகிறது. அதேபோல பெண்மைக்குறைவு என்பது பாலியலில் ஆசை குறைதல், உற்ச்சாகமின்மை, உச்சக்கட்டம் அடைவதில் சிக்கல், கணவருடன் மனக்கசப்பு என பெண்மைக்குறைவு பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

பாலியல் ஆசை குறைதல் பாலியல் உறவில் ஈடுபட விருப்பமில்லாமல் போவதே பெண்மைக்குறைவிற்கான முதல் அறிகுறியாகும். எனவே உங்கள் மனைவி தாம்பத்யத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தாலோ அல்லது உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமால் இருந்தாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லவும்.

தூண்டல் பிரச்சினை இந்த பிரச்சினை பெண்களுக்கு உறவில் நாட்டமிருந்தாலும், அதற்கான உணர்ச்சிகள் தூண்டப்படாத நிலையாகும். இந்த சூழ்நிலையில் பிறப்புறுப்பில் போதிய உயவுத்தன்மை இருக்காது. பிறப்புறுப்பிற்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாதது கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உச்சக்கட்டம் உச்சக்கட்டம் என்பது ஆண்களுக்கு உயிரணுக்கள் வெளியேறுவது போல பெண்களுக்கு ஏற்படும் ஒரு உச்சக்கட்ட நிலையாகும். பெண்மைக்குறைவு உள்ள பெண்களுக்கு இது ஏற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கும். அதுமட்டுமின்றி அனுபவமின்மை, பயம், குற்ற உணர்ச்சி போன்ற வேறு சில காரணங்களும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.

வலி மிகுந்த உறவு உறவில் ஈடுபடும் போது அதிக வலியை உணருவது என்பது அதன் மீதான நாட்டத்தை குறைக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அறுவை சிகிச்சை செய்தது, குறைவான உயவுத்தன்மை, எண்டோமெட்ரியோஸிஸ் என பல காரணங்களால் இது ஏற்படுகிறது. இது பெண்களின் தாம்பத்ய வாழ்கையையே முழுமையாக சிதைத்து விடும்.

ஹார்மோன் கோளாறுகள் ஆரோக்கியமான தாம்பத்யத்தில் ஹார்மோன்கள் பங்கு மிக முக்கியமானது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும் போது பெண்கள் பாலியல் உறவில் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். இது பெண்களின் மாதவிடாய் மற்றும் வயதின் காரணமாக ஏற்படலாம்.

உடல்ரீதியான காரணங்கள் பெண்மைக்குறைவு ஏற்பட உடல்ரீதியாக பல காரணங்கள் உள்ளது. சர்க்கரை நோய், ஹார்மோன் கோளாறுகள், இதய நோய், நரம்பு கோளாறுகள், மாதவிடாய், சிறுநீரக கோளாறுகள் என பெண்மைக்குறைவை ஏற்படுத்தும் காரணங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. பெண்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

மனரீதியான காரணங்கள் வேலை தொடர்பான மனஅழுத்தம், கவலை, கணவருடன் ஏற்படும் பிரச்சினை, குற்ற உணர்ச்சி, பழைய மோசமான அனுபவங்கள் என பாலியல் செயல்திறனை குறைக்கும் பல மனரீதியான காரணங்கள் உள்ளது.

குணப்படுத்துதல் பெண்களின் இந்த பிரச்சனையை குணப்படுத்த மருத்துவரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பல வழிகள் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு உறவு தொடர்பான கல்வியை வழங்குதல் அவர்களின் பயத்தை போக்கி நம்பிக்கை வழங்குதல் போன்றவை அவர்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்

சுயஇன்பம் இது சற்று வேடிக்கையாக இருக்கலாம்.ஆனால் சிறப்பான முடிவை வழங்கக்கூடிய சிகிச்சையாகும். சுயஇன்பம் காண்பது பெண்களுக்கு பாலியல் உறவில் நாட்டத்தை அதிகரிக்கும் என மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உறவு நிலைகள் பெண்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட பயப்பட முக்கிய காரணம் அதனால் ஏற்படும் வலிதான். எனவே அதனை சரி செய்யும் பொருட்டு வலி குறைவாக அல்லது வலியே இல்லாமல் உறவில் ஈடுபட சில உறவு நிலைகள் உள்ளது. எனவே அதுபோன்ற நிலைகளை முயற்சி செய்வது பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைத்து ஆசையை அதிகரிக்கும்.